ஈரானில் இஸ்ரேலும் அமெரிக்காவும் நாள்தோறும் தாக்குதலை அதிகப்படுத்திய வண்ணமே இருக்கின்றன. பதிலுக்கு ஈரானும் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. ஈரானை பொருத்தவரை இஸ்ரேல் மீது நேரடியாக தாக்குதல் நடத்துகிறது, அதே வேளையில் அருகில் இருக்கக்கூடிய சவுதி அரேபியா, துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருக்கக்கூடிய அமெரிக்க தூதரகங்கள் மற்றும் பல்வேறு கட்டிடங்கள் மீது குண்டுகளை வீசிய வண்ணம் இருக்கிறது.
இதுவரை ஈரான் நேரடியாக அமெரிக்கா மீது தாக்குதலை தொடுக்கவில்லை. ஆனால் அதற்கு ஈரான் ஆயத்தமாகி வருவதாக ஒரு தகவல் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. அமெரிக்க உளவுத்துறை முகமையை சேர்ந்த அதிகாரிகள் சில ரேடியோ சிக்னல்களை என்கிரிப்ட் செய்து பார்த்திருக்கின்றனர். இவை ஈரானில் இருந்து அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம் என்ற வலுவான சந்தேகம் ஏற்பட்டுள்ளதாம்.

ஈரானின் ஸ்லீப்பர் செல்களை ஆக்டிவேட் செய்வது தொடர்பான சிக்னல்களாக இருக்கலாம் என அதிகாரிகள் தகவல் தெரிவித்திருக்கிறார்கள் என ஏபிசி நியூஸ் செய்தி கூறுகிறது. அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்திய ராணுவ தாக்குதலில் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். அதன் பிறகு ஈரானிலிருந்து அதிக அளவிலான ரேடியோ சிக்னல்கள் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என கண்டறியப்பட்டுள்ளது.
ரகசிய குறியீட்டு சிக்னலைப் பயன்படுத்தி தங்களின் ரகசிய உளவாளிகளை தூண்டும் நோக்கம் கொண்டதாக இந்த சிக்னல்கள் இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்களாம். ஆப்ரேஷன் டிரிக்கர் என அதிகாரிகள் இதனை அழைக்கின்றனர். குறிப்பிட்ட ரேடியோ அலைவரிசை எண்ணில் இந்த சிக்னல்கள் அனுப்பி வைக்கப்படுமாம்.

பனி போர் காலங்களில் இருந்தே ரேடியோ சிக்னல்கள் மூலம் தகவல் பரிமாற்றம் செய்வது நடைமுறையில் இருக்கிறது. சிஐஏ மற்றும் கேஜிபி போன்ற உளவு நிறுவனங்கள் வெளிநாடுகளில் செயல்படும் ரகசிய உளவாளிகளுக்கும் முகவர்களுக்கும் தகவல்களை சேர்ப்பதற்கு இந்த மறைக்குறியாக்கப்பட்ட சிக்னல்கள் வழியாகத்தான் தகவல்களை அனுப்புவார்கள்.
இந்த பரிமாற்றங்கள் புரிய வேண்டுமென்றால் அதுக்கு மேட்சிங்கான கோடு கொண்டவர்களால் மட்டுமே டீகோடு செய்ய முடியும். அப்படி பாரசீக மொழியில் அட்டென்ஷன் அதாவது எச்சரிக்கை என அர்த்தம் கொண்ட ஒரு மர்மமான மெசேஜ் பிப்ரவரி 28-ஆம் தேதிக்கு பிறகு பல்வேறு நாடுகளுக்கும் ரேடியோ சிக்னல்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறதாம். அதன் பின்னர் குறிப்பிட்ட ராண்டம் எண்களை கூறியிருக்கிறார்கள்.
பல்வேறு நாடுகளில் இருக்கக்கூடிய ஸ்லீப்பர் செல்களை ஆக்டிவேட் செய்வதற்காக ஈரானில் இருந்து இவை அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகப்படுகிறார்கள். எனவே வழக்கத்துக்கு மாறான ரேடியோ அலைவரிசை சிக்னல்களை தொடர்ச்சியாக ஆய்வு செய்யும்படி உளவுத்துறையினர் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
கடந்த வாரம் தான் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரான் நாட்டு ஸ்லீப்பர் செல்கள் அமெரிக்காவில் இருக்கலாம் என ஒரு எச்சரிக்கையை விடுத்திருந்தார். இந்த சூழலில் தான் இப்படி ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. முன்னதாக அமெரிக்க மண்ணில் ஈரான் ஸ்லீப்பர் செல்களை பயன்படுத்தி பதில் தாக்குதல் நடத்தக்கூடும் என அமெரிக்க அரசின் பயங்கரவாத தடுப்பு அதிகாரிகளும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications