2 நாள் 19 கப்பல் மீது அட்டாக்.. ஈரானின் வெறியாட்டம்.. உச்சக்கட்ட பதற்றத்தில் ஒமான் வழித்தடம்!

ஈரான் அரசு முன்வைத்த 7 நாள் ஹார்முஸ் வழித்தடத்தை திறக்கும் போர் நிறுத்த அமைதி திட்டத்தை ஏற்காத நிலையில், ஈரான் ராணுவம் ஹார்முஸ் வழித்தடத்தில் அனுமதி இல்லாமல் சென்ற கப்பல்களை தொடர்ந்து சுட்டு வீழ்த்தி வருகிறது. ஈரான் ராணுவம் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்ல முயன்ற 19 கப்பல்கள் மீது அதிரடி தாக்குதல்களை நடத்தியுள்ளது தெரிய வந்துள்ளது.

ஈரான் நாட்டின் ஐஆர்ஜிசி படைகள் நேரடியாகத் இந்த தாக்குதலை மேற்கொண்டு உள்ளதாக அறிவித்தாலும்ஸ அமெரிக்க தரப்பில் இந்த எண்ணிக்கையை உறுதி செய்யப்படவில்லை. ஹார்முஸ் வழித்தடத்தை ஈரான் படைகள் முடக்கி வைத்திருந்தாலும், எண்ணெய் கப்பல்கள் அமெரிக்க கப்பல்கள் பாதுகாப்புடன் ஒமான் நாட்டின் வழியாக எண்ணெய் மற்றும் எரிவாயு கப்பல்கள் சென்று வருகிறது.

2 நாள் 19 கப்பல் மீது அட்டாக்.. ஈரானின் வெறியாட்டம்.. உச்சக்கட்ட பதற்றத்தில் ஒமான் வழித்தடம்!

இப்படி ஈரானின் அனுமதி இல்லாமல் செல்லும் கப்பல்களை ஈரான் படைகள் சுட்டு வீழ்த்தி வருகிறது. கடந்த இரண்டு நாட்களில் முதல் நாள் இரவில் 12 கப்பல்களும், இரண்டாவது நாள் இரவில் 7 கப்பல்களையும் ஈரான் ஏவுகணை கொண்டு தாக்கியுள்ளதாக ஈரான் செய்தி நிறுவனமான Fars தெரிவித்துள்ளது.

ஈரான் ராணுவம் அறிவித்துள்ள வழித்தடத்தை தவிர அனுமதியற்ற வழித்தடங்கள் வழியாக ஹார்முஸ் நீரிணையை கடக்க முயன்றால் ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக ஹவுதி படைகள் பாப் அல் மண்டெப் வழித்தடத்தை கைப்பற்றிய பின்பு தொடர்ந்து அதிகப்படியான கப்பல்கள் இவ்வழித்தடத்தில் சென்று வருகிறது.

இதற்கிடையில், ஹார்முஸ் நீரிணை மீது அமெரிக்கா "முழுமையான கட்டுப்பாட்டை" கொண்டிருப்பதாக டிரம்ப் பகிரங்கமாகக் கூறியுள்ளார். ஆனால் ஈரான் தொடர்ந்து இவ்வழித்தடத்தின் மூலம் யார் நுழைய வேண்டும், யார் வெளியேற வேண்டும் என்பதை கட்டுப்படுத்தி வருகிறது. இதை மீறனால் கப்பல்கள் சுட்டு வீழ்த்தப்பட்டு வருகிறது.

இன்று காலை வெளியான தகவல் படி அமெரிக்க பாதுகாப்புடன் சென்ற பெரிய எண்ணெய் கப்பல்கள் மீது தெற்கு ஈரான் பகுதியான Sirik-ல் இருந்து ஈரான் ராணுவப் படையான IRGC ஏவுகணை கொண்டு அடுத்தடுத்து பெரும் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் 3 - 6 கப்பல் ஏவுகணை மூலம் பாதிக்கப்பட்டு உள்ளதாகத் கூறப்பட்டது. தற்போது எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+