ஐஆர்சிடிசி சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்தில் சிக்கியுள்ளனர். திங்கட்கிழமையான இன்று ஐஆர்சிடிசி பராமரிப்பு பணிகள் காரணமாக அடுத்த 1 மணி நேரத்திற்கு இ-டிக்கெட் சேவை கிடைக்காது. அதேபோல், டிக்கெட் ரத்து செய்வது உள்ளிட்ட சேவைகளுக்கு வாடிக்கையாளர் சேவை எண்கள் 14646, 0755-6610661 & 0755-4090600-ஐ அழைக்கவும். [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் என IRCTC தெரிவித்துள்ளது.
சமீபத்தில், இந்திய ரயில்வே தனது சூப்பர் செயலியை இந்த மாதத்திற்குள் உருவாக்கும் என்று கூறியிருந்தது. இந்த ஒரு ஆப்ஸில் டிக்கெட் முன்பதிவு, பிளாட்பார்ம் பாஸ் வாங்குதல் மற்றும் ரயில் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கும். ரயில்வே தகவல் அமைப்புகள் (CRIS) மூலம் உருவாக்கப்பட்ட இந்த ஒரே தளத்தின் மூலம், இந்த செயலியானது பயணிகளுக்கு தடையற்ற அனுபவத்தை வழங்குவதற்காக ஐஆர்சிடிசியின் நிறுவப்பட்ட அமைப்புகளுடன் இணைந்து செயல்படும் என்று தெரிவித்தது.

ஐஆர்சிடிசி நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டின் நிகர லாபம், ரூ.305.50 கோடியை ஈட்டியுள்ளது. இணைய டிக்கெட்டுகளின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. நிறுவனம் ஒரு பங்கிற்கு ரூ.4 டிவிடெண்ட் அறிவித்தது. முந்தைய நிதியாண்டின் இதே மாதங்களில் ரூ.296.45 கோடியாக இருந்தது முந்தைய நிதியாண்டில் ரூ.1,039.47 கோடியாக இருந்த மதிப்பாய்வுக் காலத்தில் மொத்த வருமானம் ரூ.1,123.96 கோடியாக இருந்தது. நிறுவன வாரியம் ரூ.2 முகமதிப்பு கொண்ட ஒரு ஈக்விட்டி பங்கிற்கு ரூ.4 டிவிடெண்ட் அறிவித்தது.
மதிப்பாய்வுக்கு உட்பட்ட காலாண்டில் இணையதள டிக்கெட் மூலம் கிடைத்த லாபம் ரூ.274.15 கோடியிலிருந்து ரூ.300.54 கோடியாக உயர்ந்துள்ளது. நிறுவனம் தனது சுற்றுலா வணிகத்தில் ரூ.3 கோடி நஷ்டம் அடைந்ததாக தெரிவித்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications