இந்திய ரயில்வே கேட்டரிங் அண்ட் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) ரயில் டிக்கெட் சேவை மட்டும் அல்லாமல் இந்திய மக்களுக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் சுற்றுலா சேவை அளித்து வருகிறது. இதன் அடிப்படையில் குடியரசு தினத்தை முன்னிட்டு துபாய்-க்கு சிறப்பு சுற்றுலா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னை உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் இருந்து 4 இரவுகள், 5 நாட்கள் கொண்ட இந்த பயணம் ஒரு நபருக்கு ரூ.94,730 என்ற விலை முதல் IRCTC அறிமுகம் செய்துள்ளது. ஜெய்ப்பூர், டெல்லி, மும்பை, பெங்களூரு, அகமதாபாத், கொச்சி, சென்னை ஆகிய நகரங்களிலிருந்து மக்கள் இத்திட்டத்தை தேர்வு செய்து பயணிக்கலாம்.

சென்னை விமானம் நிலையம்
சென்னையிலிருந்து இதன் விலை ஏறத்தாழ ரூ.96,500 ஆக உள்ளது. சென்னையில் இருந்து ஜனவரி 21 ஆம் தேதி ஷார்ஜா-க்கு விமானம் புறப்படுகிறது. இதேபோல் ஷார்ஜாவில் இருந்து 26ஆம் தேதி விமான புறப்படுகிறது. விமானத்தின் பயண நேரம் கிட்டத்தட்ட 3 மணிநேரமாகும்.
கட்டணம் விபரம்
சென்னையில் புறப்படும் பயணிகளுக்கு கட்டணம் நபர்களின் எண்ணிக்கை அடிப்படையில் மாறுப்படுகிறது. ஒரு நபர் மட்டும் என்றால் 1,17,250 ரூபாய், இதுவே 2 பேர், 3 பேர் என்றால் 96500 ரூபாயாகும். மேலும் குழந்தைகள் அதாவது 2-11 வயதுள்ள குழந்தைகளாக இருந்தால், படுக்கை வேண்டுமெனில் 94,850 ரூபாய், படுக்கை வேண்டாமெனில் 86,000 ரூபாய் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
என்னவெல்லாம் கிடைக்கும்
இந்த டூர் பேகேஜில் நாட்டில் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த பயணிகளை ஒரே குழுவாக இணைத்து செயல்படுத்தும் திட்டமாகும். இந்த டூர் பேகேஜ்-ல் விமான டிக்கெட், மூன்று நட்சத்திர ஹோட்டல் தங்குமிடம், விசா செலவு, உணவு, ஏசி பஸ்ஸில் சுற்றுலா, பாலைவன சஃபாரி, பயண காப்பீடு ஆகியவை அடங்கும்.
முக்கிய இடங்கள்
இந்த டூர் பேகேஜ்-ல் பாம் ஜுமேரா, மிராக்கிள் கார்டன், புர்ஜ் அல் அரப், தங்கம் மற்றும் மசாலா சந்தைகள், புர்ஜ் கலீஃபாவில் ஒளி ஒலி நிகழ்ச்சி ஆகியவை அடங்கும். மேலும் துபாய் கோல்டு மார்கெட்டில் ஷாப்பிங் மற்றும் அபுதாபியில் ஒரு நாள் முழுவதும் சுற்றுலா ஆகியவையும் இதில் அடங்கும்.
ஐரோப்பா சுற்றுலா அறிவிப்பு
IRCTC அமைப்பு துபாய் சுற்றுலா போல் 13 நாள் ஐரோப்பா சுற்றுலா பேகேஜ்-ஐ அறிவித்துள்ளது. பல நாடுகளை உள்ளடக்கிய இந்த பயணம் ஜெய்ப்பூரிலிருந்து ஏப்ரல் முதல் ஜூன் வரை தொடங்கும். இது சர்வதேச சுற்றுலாவை ஊக்குவிக்கும் முயற்சியாக ஐஆர்சிடிசி செய்துள்ளது.


Click it and Unblock the Notifications