ஒவ்வொரு நாளும் இந்திய ரயில்வே மூலம் லட்சக்கணக்கானோர் பயணம் செய்கின்றனர். நம் நாட்டின் நீண்ட தூர பயணத்திற்கு முதன்மையான தேர்வாக ரயில் சேவை தான் இருக்கிறது. இது போன்ற நீண்ட தூர பயணங்களின் போது சில பயணிகள் ரயிலில் உணவை ஆர்டர் செய்கின்றனர். ஆனால் கடந்த சில நாட்களாக பயணிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் சுகாதாரம் குறித்த கவலைகள் எழுந்துள்ளன. சமீபத்தில் டேராடூன் சதாப்தி ரயிலில் பயணம் செய்த ஒருவர் பரோட்டா ஆர்டர் செய்துள்ளார். அந்தப் பரோட்டாவில் பிளாஸ்டிக் ஒயர் ஒன்று இருந்துள்ளது. இதை அடுத்து இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) அந்த கேட்டரிங் நிறுவனத்திற்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
பயணியின் பரோட்டாவில் ஒயர் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து.. IRCTC ஒரு அதிகாரியை சமையலறையை முழுமையுமாக ஆய்வு செய்ய நியமித்துள்ளது. விசாரணை முடியும் வரை சமையலறை மூடப்பட்டுள்ளது. IRCTC அறிக்கையின் படி, சதாப்தி எக்ஸ்பிரஸ் பயணி தான் ஆர்டர் செய்த பரோட்டாவில் பிளாஸ்டிக் கம்பியைக் கண்டறிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் பயணி இந்தப் பிரச்சினையை குறித்து தெரிவித்ததற்கு கேட்டரிங் நிறுவனத்தின் வெயிட்டர் அவரிடம் மன்னிப்பு கேட்டு வேறு ஒரு உணவு பார்சலை வழங்கியுள்ளார். இதன் காரணமாக IRCTC அந்த கேட்டரிங் நிறுவனத்திற்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

இரண்டு ஆண்டுகளில் சுகாதாரம் தொடர்பான பிரச்சினைகள் 500 சதவீதம் அதிகரிப்பு: இந்திய ரயில்வேயில் உணவு சேவைகளின் சுத்தம் மற்றும் தரம் குறித்து பயணிகளிடமிருந்து புகார்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மார்ச் 2022-ஆம் ஆண்டில் 1,192 ஆக இருந்த புகார்கள், ஏப்ரல் 2023-ஆம் ஆண்டு முதல் பிப்ரவரி 2024 வரையிலான காலத்தில் 6,948 ஆக அதிகரித்தது.
இது கிட்டத்தட்ட 5 மடங்கு அதிகரிப்பைக் காட்டுகிறது. இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், புகார்களின் இந்த அதிகரிப்பு வெறும் வழக்கமான ரயில் சேவைகளிலிருந்து மட்டுமல்லாமல், வந்தே பாரத், ராஜதானி, சதாப்தி, துரந்தோ மற்றும் மெயில் எக்ஸ்பிரஸ் போன்ற பிரீமியம் ரயில்களில் இருந்தும் வந்துள்ளன.
இந்திய ரயில்வே கேட்டரிங் & டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) ஏப்ரல் 2021 முதல் பிப்ரவரி 2024 வரை, தங்களின் கேட்டரிங் சேவைகள் குறித்து கிட்டத்தட்ட 11,850 வாடிக்கையாளர் புகார்களைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக 2021-ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து 2024-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை சுமார் 3 கேட்டரிங் நிறுவனங்களின் ஒப்பந்தங்களை ரத்து செய்து உள்ளதாகவும் IRCTC தெரிவித்துள்ளது. மேலும் அதற்கு முன்னதாக 68 எச்சரிக்கை நோட்டீஸ்களை அனுப்பியதாகவும் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications