எண்ணற்ற பயணிகளுக்கு போக்குவரத்து செலவை குறைக்க இந்திய ரயில்வே உதவி வருகிறது. இந்நிலையில் பயணிகளுக்கு எளிதாக சேவைகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) "சூப்பர் ஆப்" என்ற புதிய அப்ளிகேஷனை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய அப்ளிகேஷன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்வது, PNR நிலையைச் சரி பார்ப்பது என பயணம் தொடர்பான அனைத்து சேவைகளையும் ஒரே அப்ளிகேஷனில் நிர்வகிக்க முடியும். நாடு முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான பயனர்களுக்கு பயனளிக்கும் வகையில் இந்திய ரயில்வே இந்த அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தவுள்ளது.
IRCTC சூப்பர் ஆப் என்றால் என்ன?: IRCTC சூப்பர் ஆப் ரயில் தொடர்பான அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு புதிய அம்சங்களும் இதில் கொண்டு வரப்பட்டுள்ளன. இதற்கு முன்பு தனித்தனி இயங்குதளங்களில் கிடைத்த பல சேவைகளை இந்த ஒரு அப்ளிகேஷன் ஒன்றாக இணைக்கிறது.

இதற்கு முன்பு ரயில் பயணிகள் டிக்கெட் பதிவு செய்வதற்கு IRCTC ரயில் கனெக்ட், உணவு டெலிவரிக்கு IRCTC இ-கேட்டரிங், புகார்களுக்கு ரயில் மதத், முன் பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளுக்கு UTS மற்றும் ரயில் ஸ்டேட்டஸை தெரிந்து கொள்ள நேஷனல் ட்ரெயின் என்கொயரி சிஸ்டம் போன்ற பல அப்ளிகேஷன்கள் மற்றும் வலைத்தளங்களை பயன்படுத்த வேண்டியிருந்தது. தற்போது இந்த அனைத்து சேவைகளையும் பயணிகள் ஒன்றாக பெற முடியும்.
IRCTC சூப்பர் அப்ளிகேஷனின் முக்கிய அம்சங்கள்:
டிக்கெட் முன்பதிவை எளிமையாக்குதல்: இந்த புதிய அப்ளிகேஷன் ரயில் டிக்கெட் முன்பதிவு செயல்முறை விரைவாகவும், எளிதாகவும் மாற்றும் நோக்கில் கொண்டுவரப்படவுள்ளது. எக்ஸ்பிரஸ், சூப்பர்பாஸ்ட் மற்றும் துரோந்தா உள்ளிட்ட அனைத்து வகையான ரயில் பயணிகளும் சில நிமிடங்களில் டிக்கெட்களை முன்பதிவு செய்யும் வகையில் இந்த அப்ளிகேஷன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னால் இருந்த அப்ளிகேஷன்களின் சிக்கல்களை தவிர்த்து எளிமையாக டிக்கெட் முன்பதிவு செய்ய சூப்பர் ஆப் உதவுகிறது.
PNR நிலையைச் சரிபார்த்தல்: எதிர்பார்க்கப்பட்ட முக்கிய அம்சங்களில் ஒன்றான PNR நிலையை சரி பார்க்கும் வசதியும் இந்த அப்ளிகேஷனில் வழங்கப்பட்டுள்ளது. பயனர்கள் தங்கள் ரயிலின் நிகழ்நேர நிலையை கண்காணிக்கலாம். ரயில் தாமதங்கள், ரயில் ரத்து மற்றும் ரயில் அட்டவணையில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் அனைத்தையும் தொடர்ந்து இதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.
உணவு ஆர்டர் செய்தல்: பயணிகள் தற்போது இந்த அப்ளிகேஷனில் நேரடியாக உணவை ஆர்டர் செய்யலாம். பல்வேறு உணவு விற்பனையாளர்களுடன் இணைந்து IRCTC உணவை ஆர்டர் செய்ய அனுமதிக்கிறது. இந்த வசதியான விருப்பம் பயனர்கள் தங்களின் தேவைக்கேற்ற உணவை ஆர்டர் செய்ய உதவுகிறது. டெலிவரிக்கான இடம் மற்றும் கட்டண முறையைத் தேர்ந்தெடுக்கவும் விருப்பங்கள் வழங்கப்படுகிறது.
சுற்றுலா சேவைகள்: டிக்கெட் முன்பதிவுகளுக்கு கூடுதலாக IRCTC-இன் சூப்பர் அப்ளிகேஷன் சுற்றுலா சேவைகளையும் வழங்குகிறது. பயனர்கள் ஹோட்டல்கள், விடுமுறைக்கான பேக்கேஜ்கள் மற்றும் டூர் பேக்கேஜ்களை முன்பதிவு செய்து தங்களின் பயண செயல்முறையை எளிதாக்கலாம்.
பாதுகாப்பான மற்றும் வேகமான கட்டண முறை: யுபிஐ மற்றும் பிற எளிதான கட்டண முறைகளை பயன்படுத்தி டிக்கெட் மற்றும் பிற சேவைகளுக்கு கட்டணம் செலுத்தலாம்.
IRCTC-இன் சூப்பர் அப்ளிகேஷன் எப்போது கிடைக்கும்?: சூப்பர் அப்ளிகேஷன் 2024-ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அப்ளிகேஷன் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களில் டவுன்லோட் செய்ய முடியும். அப்ளிகேஷனை பயன்படுத்துவது இலவசம். மேலும் இதற்கு மறைமுக கட்டணங்கள் எதுவும் கிடையாது. எந்த மூலையில் இருந்தும் வாடிக்கையாளர்கள் இலவசமாக அப்ளிகேஷனைப் பயன்படுத்தலாம்.
ரயில் பயணிகளுக்கான நன்மைகள்: IRCTC-இன் சூப்பர் அப்ளிகேஷன் இந்தியா ரயில்வே பயணிகளுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.
வசதி: ஒரே அப்ளிகேஷனில் பல்வேறு சேவைகள் கிடைப்பதால் வெவ்வேறு இணையதளங்கள் மற்றும் அப்ளிகேஷன்களை பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்.
நேர சேமிப்பு: வேகமாக டிக்கெட் முன்பதிவு செய்வது, உணவு ஆர்டர் செய்வது என ரயில் தொடர்பான அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் பெறுவதால் உங்களுடைய நேரம் மிச்சமாகும்.
மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு: கட்டண முறைகளுக்கு மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு வசதி வழங்கப்பட்டுள்ளது. எனவே பயணிகள் பாதுகாப்பாக பணம் செலுத்துவதை உறுதி செய்யலாம்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications