ஈரானில் நீடிக்கும் போர் இந்தியாவில் சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கையிலேயே தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கிவிட்டது. எல்பிஜி சிலிண்டர்கள் கிடைக்காமல் உணவகங்கள் மூடப்பட்டு வருகின்றன, எல்பிஜி-இல் இயக்கப்படும் ஆட்டோக்கள் இயங்கவில்லை. திருமணம் போன்ற நிகழ்வுகளுக்காக தயாராக இருப்பவர்கள் சிலிண்டர் தட்டுப்பாட்டால் என்னென்ன நடக்குமோ என்ற அச்சத்தில் இருக்கின்றனர்.
இந்த சூழலில் இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து நெட்வொர்க்கான இந்திய ரயில்வே தங்களுடைய கேட்டரிங் சேவை நிறுவனங்களுக்கு முக்கியமான ஒரு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. நாள்தோறும் இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் ரயில் சேவைகளை பயன்படுத்துகின்றனர். ரயில் பயணிகளுக்கு ரயில்களிலேயே கேட்டரிங் அமைத்து உணவு விற்பனை செய்யப்படுகிறது. அது மட்டும் இன்றி ரயில் நிலையங்களிலும் ஐஆர்சிடிசி சார்பாக உணவகங்கள் நிறுவப்பட்டு பொதுமக்களுக்கு டீ, காபி மற்றும் பிற உணவு வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த சூழலில் ஐஆர்சிடிசி மிக முக்கியமான ஒரு வழிகாட்டுதல்களை வெளியிட்டிருக்கிறது. எல்பிஜி தட்டுப்பாடு காரணமாக ரயில் பயணிகளுக்கு உணவு விநியோகம் தடைப்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஐஆர்சிடிசி மேற்கு மண்டலத்தில் இருக்கக்கூடிய அனைத்து உரிமம் பெற்ற கேட்டரிங் பிரிவுகளுக்கும் புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. இதன்படி ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு வழங்கப்படும் கேட்டரிங் சேவைகளில் எந்த இடையூறும் இருக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ரயில் நிலையங்களில் செயல்படும் உணவகங்கள், சிற்றுண்டி அறைகள் மற்றும் பொது உணவு கடைகளை இயக்கும் அனைத்து கேட்டரிங் பிரிவுகளும் எல்பிஜிக்கு மாற்று ஏற்பாடுகளை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது. மேற்காசிய பிராந்தியத்தில் நிலவிவரக்கூடிய போர் காரணமாக வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் வினியோகம் நிறுத்தப்பட்டு இருக்கிறது இந்த நிலையில் ரயில் நிலையங்களில் செயல்படக்கூடிய உணவகங்களில் பயணிகளுக்கு தடை இன்றி உணவு கிடைப்பது உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது.

இந்த உணவகங்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் தொடர்ந்து செயல்படுவது உறுதி செய்வதற்கு பின்வரும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன்படி மைக்ரோவேவ் மற்றும் இன்டக்ஷன் அடுப்புகளை அதிகளவில் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. எல்பிஜி பற்றாக்குறை ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதால் மைக்ரோவேவ் ஓவன் மற்றும் இன்டக்ஷன் அடுப்புகளை கொண்டு சமையல் பணிகளை தொடர வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
அடுத்ததாக சாப்பிட தயாராக இருக்கும் ரெடி டூ ஈட் வகை உணவுப்பொருட்களை போதுமான அளவு வைத்திருக்க வேண்டும் என ரயில்வே கூறியிருக்கிறது. எரிவாயு விநியோகத்தில் தடங்கல் ஏற்பட்டாலும் பயணிகளின் உடனடி உணவு தேவையை இது பூர்த்தி செய்யும் என்பதால் அனைத்து உணவகங்களும் ரெடி டூ ஈட் உணவுகளை அதிகமாக இருப்பு வைத்து கொள்ளலாம்.
ஒரு வேளை சிலிண்டர் இல்லாமல் உணவு சமைக்கப்படவில்லை என்றால் அதனை உடனடியாக மேற்கு மண்டல கட்டுப்பாட்டு துறை அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டிருக்கிறது. தற்போதைக்கு ரயில் பயணிகளுக்கு உணவு விற்பனையில் எந்த இடையூறும் இல்லை. ஆனால் பயணிகளுக்கு கிடைக்க கூடிய உணவு வகைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருக்கலாம். இருந்தாலும் தொடர்ந்து உணவு கிடைப்பதை உறுதி செய்ய மாற்று ஏற்பாடுகளை ரயில்வே நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது என்பதையே இந்த வழிகாட்டுதல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
More From GoodReturns

LPG சிலிண்டரை விட்டு தள்ளுங்க!! இந்த கனெக்ஷனுக்கு மாறிட்டா சிலிண்டர் பத்தின கவலையே வேண்டாம்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications