சென்னை: இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்ரேஷன் லிமிடெட் (IRCTC) 2024-25 நிதியாண்டின் ஜூன் காலாண்டிற்கான நிதியியல் முடிவுகளை இன்று மாலை வெளியிட்டது. ஜூன் மாதத்துடன் முடிந்த இந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் லாபம் 33.3 சதவீதம் உயர்ந்து ரூ.308 கோடியாக உள்ளது. இந்த லாப உயர்வுக்கு ரயில் டிக்கெட் விற்பனை அதிகரித்ததே முக்கிய காரணமாகும்.
இந்திய ரயில்வே துறைக்கு ஆன்லைன் டிக்கெட் வசதி மற்றும் உணவு சேவையை வழங்கும் இந்த நிறுவனம், ஆகஸ்ட் 13-ஆம் தேதி பங்குச் சந்தையில் சமர்ப்பித்த காலாண்டு முடிவுகளின் படி, இக்காலாண்டில் ரூ.1,120.15 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 11.8 சதவிகிதம் அதிகமாகும். IRCTC தளம் ஒரு நாளுக்கு 3.33 கோடி ரூபாய் லாபத்தைச் சம்பாதிக்கிறது.

சந்தையின் கணிப்புகளின் படி லாப எதிர்பார்ப்பை ஐஆர்சிடிசி பூர்த்தி செய்திருந்தாலும், வருவாய் எதிர்பார்ப்பைச் சற்று தவற விட்டுள்ளது. ப்ராபுதாஸ் லீலாதர் நிறுவனம் ஐஆர்சிடிசி ரூ.306.5 கோடி லாபம் ஈட்டும் என எதிர்பார்த்திருந்தது. அதேபோல், வருவாய் ரூ.1,130.8 கோடியாக இருக்கும் என கணித்திருந்தது. கடந்த 2024 மார்ச் 31-ம் தேதி முடிவடைந்த காலாண்டில், ஐஆர்சிடிசி ரூ.1154.8 கோடி மொத்த வருவாயும், ரூ.284.18 கோடி லாபம் ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்றைய வர்த்தக முடிவில் ஐஆர்சிடிசியின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.73,460 கோடியாக உள்ளது. ஆகஸ்ட் 13ஆம் தேதி, ஐஆர்சிடிசி பங்கு விலை 0.69 சதவீதம் குறைந்து ரூ.918.00 ஆக உள்ளது. 2024 ஆம் ஆண்டில் ஐஆர்சிடிசி பங்கு விலை வெறும் 0.83 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது.
இதற்கிடையில், நிறுவனத்தின் வட்டி, வரி, தேய்மானம் மற்றும் தள்ளுபடிக்கு முந்தைய லாபம் (EBITDA) இந்த காலாண்டில் ரூ.428.55 கோடியாக இருந்து கிட்டத்தட்ட 30 சதவிகிதம் வளர்ச்சியடைந்துள்ளது. EBITDA லாப விகிதம் கடந்த ஆண்டின் 33 சதவிகிதத்துடன் ஒப்பிடுகையில் 38.3 சதவிகிதமாக உள்ளது முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.
ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் செயலி இன்று செயலிழப்பு:
இன்று காலை (ஆகஸ்ட் 13) எதிர்பாராத விதமாக இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்ரேஷன் லிமிடெட் (IRCTC) இணையதளம் மற்றும் மொபைல் செயலி செயலிழந்தது. பல பயனர்கள் தங்கள் டிக்கெட்டுகளைப் பார்க்கவோ, பிரின்ட் செய்யவோ முடியவில்லை என்று புகார் செய்தனர். சிலர் தொழில்நுட்ப சிக்கல் காரணமாகப் பணம் செலுத்த முடியவில்லை என்றும் தெரிவித்தனர்.
Downdetector.com என்ற இணையதளத்தின் தகவலின்படி, பலர் IRCTC இணையதளம் மற்றும் மொபைல் செயலியைப் பயன்படுத்துவதில் சிக்கலை எதிர்கொண்டனர். இந்த தளத்தின் சமீபத்திய தகவல்படி, 350க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் ஐஆர்சிடிசி சேவைகள் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது சிக்கலை எதிர்கொண்டதாகக் காட்டுகிறது.
Downdetector தகவல்படி, காலை 10:01 மணி அளவில் முன்பதிவு சேவைகள் தொழில்நுட்ப சிக்கலைகளை எதிர்கொள்ளத் தொடங்கின. செயலிழப்பு 11:09 மணிக்கு உச்சக்கட்டத்தை எட்டியது என Downdetector வரைபடம் காட்டுகிறது. சுமார் 300 பயனர்கள் இணையதளம் மற்றும் மொபைல் செயலியை அணுகுவதில் சிக்கலை எதிர்கொண்டனர் என தெரிவித்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!



Click it and Unblock the Notifications