மும்பை : இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (ஐஆர்சிடிசி) பங்கு வெறும் 18 நாட்களில் 198 சதவிகிதம் லாபம் கண்டுள்ளது.
ஆரம்பத்தில் அதன் பொதுப்பங்கு வெளியீடு முதல் கொண்டே நல்ல லாபத்தை கொடுத்து வரும் இந்த பங்கு, தற்போது வரை நல்ல லாபத்தை கொடுத்து வருகிறது. ஆரம்பத்தில் 2.01 கோடி பங்குகள் வெளியிட்ட நிலையில், கடந்த அக்டோபர் 14 அன்றே பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டது. அதிலும் ஆரம்பத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலையான 320 ரூபாயிலிருந்து, பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் நாளே பங்கு 725 ரூபாய்க்கு எகிறி குதித்தது. இதனால் ஐபிஓவில் வாங்கியவர்களுக்கு சுமார் முதல் நாளிலேயே 125 சதவிகித லாபம் கிடைத்துள்ளது என்று தான் கூற வேண்டும்.

இதே இன்று தற்போது 893 ரூபாயாக வர்த்தகமாகி வரும் நிலையில், கடந்த வாரத்தில் 953 வரை சென்று தற்போது சற்று கீழே இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் ஐபிஓவில் 2.01 கோடி பங்குகள் மட்டுமே வெளியிட நினைத்த இந்த அரசுக்கு சொந்தமான நிறுவனத்தின் பங்கினை வாங்க, 225.09 கோடி பேர் விண்ணப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அரசுக்கு முழுவதும் சொந்தமான இந்த நிறுவனம் 100 சதவிகித பங்கினை வைத்திருந்த நிலையில், தற்போது 12.6 சதவிகித பங்கினை விற்றுள்ளது இந்த நிறுவனம். இந்த நிலையில் இந்த பொதுப் பங்கு வெளியீட்டுக்கு பின்பு அரசின் பங்கு 87.4 சதவிகிதமாக குறைந்துள்ளது.
இந்த நிலையில் அரசின் செயல்பாடுகளினால் இந்த நிறுவனத்தின் இலாபம் அதிகரிக்கலாம் என்றும், அரசின் பல சலுகைகள் ஊக்குவிப்பு நடவடிக்கைகள் இன்னும் பல காரணிகளால் நிறுவனத்தின் பங்கு விலை இன்று வரை வலுவான நிலையிலேயே உள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் இந்த நிறுவனத்தின் பங்கினை வாங்கவும் ஆர்வமாக இருப்பதற்கும் இது உதவியது என்றும் கூறப்படுகிறது.
இது தவிர ஐஆர்சிடிசி தனிப்பட்ட தனித்துவமான வணிக மாதிரியைக் கொண்டுள்ளது என்றும், மேலும் இந்த பிரிவில் எந்தவொரு வணிகப்போட்டியும் இல்லை என்பதாலும், இந்த நிறுவனத்திற்கு எதிராக எந்த போட்டி நிறுவனமும் இல்லை என்பதாலும், வலுவான வருவாய், ஆரோக்கியமான வருவாய் விகிதம், கடன் இல்லாத நிலை, பன்முகப்படுத்தப்பட்ட வணிகப் பிரிவு என அனைத்தும் இந்த ஏற்றத்திற்கு வழி வகுத்துள்ளது என்றும் கூறப்படுகிறது.
மேலும் அரசின் பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக ஐஆர்சிடிசிக்கு வருவாய் அதிகரிக்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஆன்லைன் டிக்கெட் விற்பனை மூலம் கிடைக்கும் லாபம் வரி குறைப்பால் இன்னும் அதிகரிக்கும் என்றும், இது தவிர மேலும் ரயிலில் தொகுக்கப்பட்டுள்ள குடிநீர் பங்கு 45 சதவிகிதத்திலிருந்து, 80 சதவிகிதமாக அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வரும் காலத்திலும் வளர்ச்சி நன்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை அடுத்து, இதன் லாபம் இன்னும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications