இந்தியாவில் அனைத்து தரப்பு மக்களும் சவுகரியமாக பயன்படுத்தக்கூடிய ஒரு போக்குவரத்தாக ரயில்வே இருக்கிறது. ஒரு ரயில் புறப்படும் தேதியிலிருந்து 60 நாட்களுக்கு முன்னதாகவே டிக்கெட் முன்பதிவு என்பது தொடங்கிவிடும்.
அவசர தேவைக்காக சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டிய நபர்களுக்காகவே தட்கல் டிக்கெட் முன்பதிவு என்ற வசதி பயன்பாட்டில் இருக்கிறது. இதன்படி ரயில் புறப்படுவதற்கு ஒரு நாள் முன்பாக தட்கல் டிக்கெடுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். உதாரணமாக உங்களுடைய ரயில் 8ஆம் தேதி அன்று புறப்படுகிறது என்றால் 7ஆம் தேதி காலை தட்கல் முறையில் நீங்கள் டிக்கெட்டினை புக் செய்து கொள்ளலாம்.

இந்த தட்கல் டிக்கெட்டில் ஏசி வகுப்புகளுக்கு காலை 10 மணிக்கும், ஏசி அல்லாத வகுப்புகளுக்கு காலை 11 மணிக்கும் என டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது. தட்கல் டிக்கெட் முன்பதிவில் ஏஜென்ட் ஆதிக்கம் அதிகமாக இருந்தது அடுத்து இந்திய ரயில்வே தட்கல் டிக்கெட் முன்பதிவில் பல்வேறு மாற்றங்களை அண்மையில் கொண்டு வந்தது . அவற்றை ரயில் பயணிகள் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.
தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதார் இணைத்து சரி பார்ப்பினை முடித்தவர்கள் மட்டுமே தட்கல் டிக்கெட் முன்பதிவில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. அதே போல தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யக்கூடிய அந்த சமயத்தில் ஆதார் கார்டு இணைக்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு வரக்கூடிய ஓடிபி உள்ளீடு செய்தால் தான் டிக்கெட்டே முன்பதிவு செய்யப்படும்.
தட்கல் டிக்கெட்டில் பயணம் செய்யக்கூடிய பயணிகள் தங்களோடு ஒரு அதிகாரபூர்வமான அடையாள அட்டையை கொண்டு செல்ல வேண்டும். டிக்கெட் பரிசோதனையின் போது இந்த அதிகாரப்பூர்வ அடையாள அட்டையை காட்ட தவறினால் டிக்கட் இல்லாமல் பயணம் செய்யக்கூடிய நபராக நீங்கள் கருதப்பட்டு அதற்கேற்ற வகையில் அபராதம் விதிக்கப்படும். எனவே நீங்கள் தட்கல் டிக்கெட்டில் ரயிலில் பயணம் செய்கிறீர்கள் எனும் போது உங்களுடன் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை , ஓட்டுனர் உரிமம் போன்ற அடையாள அட்டைகளுடன் செல்வது நல்லது. மாணவர்கள் தங்களுடைய புகைப்படம் இடம்பெற்றிருக்கும் பள்ளி அல்லது கல்லூரியால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை காண்பிக்கலாம்.
தட்கல் டிக்கெட் முன்பதிவில் தற்போது பல்வேறு மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன . குறிப்பாக டிக்கெட் முன்பதிவு தொடங்கிய முதல் அரை மணி நேரத்திற்கு ஏஜென்டுகளால் தட்கல் டிக்கெட்டை பதிவு செய்ய முடியாது. ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதார் இணைக்கப்பட்ட தனிநபர்களால் மட்டுமே தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.
அந்த வகையில் மக்களுக்கு எளிமையாக தட்கல் டிக்கெட்டுகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் மத்திய இந்திய ரயில்வே இந்த அதிரடி மாற்றத்தை அமல்படுத்தி இருக்கிறது. எனவே தட்கல் முன்பதிவு செய்யும் போது உங்களின் ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதார் இணைத்து சரிபார்ப்பு முடித்திருப்பதை உறுதி செய்யுங்கள், அதே போல ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணை தயாராக வைத்திருங்கள். தட்கல் டிக்கெட்டில் பயணிக்கும் போது அடையாள அட்டைகளை உடன் வைத்திருப்பது நல்லது.
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications