மோட்டார் இன்சூரன்ஸ்: கார்-க்கு 3 ஆண்டு, பைக்-கிற்கு 5 ஆண்டு.. புதிய மாற்றம்.. மக்களே உஷார்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனக் காப்பீட்டை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்க வேண்டியது பெரும் சுமையாக இருப்பது மட்டும் அல்லாமல் பலரும் அதைத் தொடர்ந்து செய்வது இல்லை என்பதால் இந்த நிலையை மாற்ற புதிய திட்டம் முன் வைக்கப்பட்டு உள்ளது.

காப்பீட்டுத் துறையின் கட்டுப்பாட்டு ஆணையமான Irdai வாகனக் காப்பீட்டின் கவரேஜ் காலத்தை ஒரு வருடமாக இருப்பதை அதிகரிக்க வேண்டும் என்ற ஒரு திட்டத்தை முன்வைத்துள்ளது.

இத்திட்டம் ஒப்புதல் அளிக்கப்பட்டுச் செயல்படுத்தப்பட்டால், கார் உரிமையாளர் மூன்று வருட காப்பீட்டையும், இரு சக்கர வாகனம் வைத்திருப்பவர்கள் ஐந்தாண்டு பாலிசியையும் வாங்கலாம்.

இன்சூரன்ஸ் எடுக்கும்போது ஏஜெண்டுகளிடம் எடுக்கலாமா.. தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? இன்சூரன்ஸ் எடுக்கும்போது ஏஜெண்டுகளிடம் எடுக்கலாமா.. தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

Irdai அமைப்பு

Irdai அமைப்பு

இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (Irdai) வாகனத்தின் மூன்றாம் நபர் காப்பீடு மற்றும் சொந்த சேதக் காப்பீடு ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய நீண்ட கால மோட்டார் இன்சூரன்ஸ் திட்டங்களை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற திட்டத்தை வெளியிட்டு உள்ளது.

பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள்

பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள்

இந்தத் திட்டம் வரைவு மூலம் இந்தியாவில் செயல்படும் அனைத்துப் பொதுக் காப்பீட்டாளர்களும், தனிநபர் பயன்படுத்தும் கார்களுக்கு மூன்றாண்டுக் காப்பீட்டுக் திட்டத்தையும், இரு சக்கர வாகனங்களுக்கு ஐந்தாண்டு காலக் காப்பீட்டுக் திட்டத்தையும், மோட்டார் மூன்றாம் தரப்புப் பொறுப்புக் காப்பீட்டுடன் வழங்குவதற்கு இந்தத் திட்டம் முன்மொழிகிறது.

காப்பீட்டுத் தொகை

காப்பீட்டுத் தொகை

பாலிசி கவரேஜின் முழுக் காலத்திற்கான பிரீமியம் காப்பீடு விற்பனையின் போது சேகரிக்கப்படும். அதாவது 5 ஆண்டுத் திட்டத்தைப் பெறும் போது அதற்கான தொகைகை மொத்தமாக வசூலிக்கப்பட உள்ளது, வருடாந்திர அடிப்படையில் பெறப்படமாட்டாது.

விலை

விலை

மேலும் IRDAI திட்டத்தின் படி விலை நிர்ணயம், உரிமைகோரல் அனுபவம் மற்றும் நீண்ட காலத் தள்ளுபடி உள்ளிட்ட வழக்கமாகக் கடைப்படிக்கப்படும் நடைமுறை கொள்கைகளின் அடிப்படையில் தான் இருக்கும் எனவும் இந்தத் திட்ட வரைவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டிசம்பர் 22

டிசம்பர் 22

IRDAI அமைப்பின் இந்தத் திட்டத்தைக் குறித்து அனைத்துப் பொதுக் காப்பீட்டாளர்கள் உட்பட இத்துறை சார்ந்த அனைத்து தரப்பினரும் தங்களின் கருத்துக்களை டிசம்பர் 22க்குள் சமர்ப்பிக்கும் படி Irdai உத்தரவிட்டு உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Irdai proposal Long-Term Motor insurance; 3yrs insurance for cars, 5yrs insurance for bike

Irdai proposal Long-Term Motor insurance; 3yrs insurance for cars, 5yrs insurance for bike
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X