வாகன உரிமையாளர்களுக்கு காத்திருக்கும் பேடு நியூஸ்.. விரைவில் மூன்றாம் நபர் காப்பீடு அதிகரிக்கலாம்!

வரவிருக்கும் 2020 - 21ம் நிதியாண்டிற்கான மூன்றாம் நபர் காப்பீட்டிற்கான பிரிமீயம் தொகையை இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையம் உயர்த்த முன்மொழிந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த முன்மொழிவால் கார்கள், இருசக்கர வாகனங்கள், பேருந்துகள் மற்றும் பள்ளி வாகனங்கள் உள்ளிட்ட பல வாகனங்களுக்கு விரைவில் மூன்றாம் தரப்பு காப்பீட்டு பிரிமியம் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக தனியார் கார்களில் 1500 சிசி அல்லது சொகுசு கார்களுக்கு மட்டும் பிரிமீயம் விகிதம் மாற்றாமல் 7,890 ரூபாயாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

மூன்றாம் நபர் காப்பீடு

மூன்றாம் நபர் காப்பீடு

சரி அதென்ன மூன்றாம் தரப்பு காப்பீடு? இதென்னால் என்ன பயன்? இதை எப்படி நாம் எடுத்துக் கொள்வது? வாருங்கள் பார்க்கலாம். வாகனங்களால் எதிரில் வருபவர்க்கும், பொருட்களுக்கும் இழப்பீடு கோரும் காப்பீட்டு திட்டத்துக்கு மூன்றாம் நபர் காப்பீடு என்று கூறப்படுகிறது. இந்த மூன்றாம் நபர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் பாலிசிதாரரால் மூன்றாம் நபருக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்க இயலும்.

இழப்பீடு வழங்க இயலும்

இழப்பீடு வழங்க இயலும்

குறிப்பாக சொல்லவேண்டுமானால் உங்களது வாகனத்தால் எதிரில் வருபவர்களுக்கும், பொருட்களுக்கும் ஏற்படும் பாதிப்புகளுக்கும் இழப்பீடு கோர முடியும். ஆனால் பாலிசிதாரரின் வாகனத்திற்கும், அவருக்கும் ஏற்படும் பாதிப்புகளுக்கு இழப்பீடு கிடைக்காது.

இது தான் பிரீமியம்

இது தான் பிரீமியம்

1000 சிசிக்கும் குறைவான கார்களுக்கும், இரு சக்கர வாகனகளில் இருந்து கார்களுக்கு இடம்பெயர்ந்த ஆல்டோ மாடலை உள்ளடக்கிய ஒரு பிரிவுகளுக்கு பிரிமியம் 5.3% அதிகரித்து, 2,182 ரூபாயாக அதிகரிக்க கோரியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதே தற்போது 2,072 ரூபாயாக உள்ளது. இதே 1000 - 1500 சிசிக்களுக்கு பிரிமியம் 5% அதிகரிக்க, அதாவது 3,383 ரூபாயாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தற்போது 3,221 ரூபாயாக உள்ளது.

ஜிஎஸ்டியும் உண்டு

ஜிஎஸ்டியும் உண்டு

மேற்கூறிய இந்த கட்டணங்களுக்கு ஜிஎஸ்டி கட்டாயம் என்று கூறப்படுகிறது. இதனால் பிரிமீய செலவுகள் இன்னும் அதிகமாகலாம் என்றும் கூறப்படுகிறது. 350 சிசிக்கும் மேல் பைக்குகளுக்கு செலுத்த வேண்டிய பிரிமியம் 2019 -20 ஆண்டில் பராமரித்ததைப் போல் அல்லாமல், இந்த முறை இதற்கும் கட்டணத்தை அதிகரிக்க முன்மொழிந்துள்ளது.

எதற்கு? எவ்வளவு?

எதற்கு? எவ்வளவு?

இதில் 75 சிசிக்கும் கீழ் ரூ.506 முன்னர் 482 ரூபாய்
75 - 150 சிசி வாகனங்களுக்கு ரூ.769 முன்னர் 752 ரூபாய்
150 - 350 சிசி வாகனங்களுக்கு ரூ.1,301 முன்னர் 1,191 ரூபாய்
350 சிசிக்களுக்கு மேல் திறன் கொண்ட பைக்குகளுக்கு ரூ.2,571 முன்னர் 2,323 ரூபாய்

பேருந்துகளுக்கு பிரீமியம்

பேருந்துகளுக்கு பிரீமியம்

பள்ளி பேருந்துகளுக்கு பிரீமியம் விகிதம் 13,874 ரூபாயிலிருந்து, 14,338 ரூபாயாக அதிகரிக்க ஐஆர்டிஏஐ முன்மொழிந்துள்ளது. இதில் உரிமம் பெற்ற பயணிகளுக்கு ஒரு சீட்டுக்கு 876 ரூபாயாக அதிகரிக்கவும் (848 ரூபாய்) முன்மொழியப்பட்டுள்ளது. இதே பேருந்துகளுக்கு 14,978 ரூபாயாக முன்மொழியப்பட்டுள்ளது. இது முன்பு 14,494 ஆகவும் உள்ளது. இதில் லிஸ்டேட் பயணிகளுக்கு சீட்டுக்கு 916 ரூபாயாகவும் (886 ரூபாயிலிருந்து) முன்மொழியப்பட்டுள்ளது.

மின்சார வாகனங்களுக்கு தள்ளுபடி

மின்சார வாகனங்களுக்கு தள்ளுபடி

கடந்த வியாழக்கிழமையன்று வெளியிடப்பட்ட இந்த வரைவு, மார்ச் 20 வரை கருத்துரைகளுக்கு திறந்திருக்குமாம். மின்சார தனியார் கார்கள். மின்சார இருசக்கர வாகனங்கள், மின்சார பொருட்கள், மற்றும் பயணிகளை ஏற்றி செல்லும் மின்சார வாகனங்களுக்கு 15% வரை தள்ளுபடி செய்யப்பட பரிந்துரைக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது. இவ்வாறு தள்ளுபடி செய்யபப்டுவது அந்த வாகனங்களில் செயல்பாட்டினை ஊக்குவிக்கும் என்றும் கூறப்படுகிறது. இது ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரலாம் என்றும் கூறப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+