பெங்களூரு: சாதாரணமாக ஒரு தையல் கடை நடத்தி வந்தவரின் குடும்பம் தற்போது இந்தியாவின் ரியல் எஸ்டேட் துறையையே ஆட்டுவித்து வருகிறது. இதற்கு பின்னால் இருப்பவர் தொழிலதிபர் இர்ஃபான் ரசாக். பிரஸ்டீஜ் எஸ்டேட் ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் மற்றும் தலைவர், இந்தியாவின் பணக்காரர்களில் ஒருவர்.
இர்ஃபான் ரசாக்கின் தந்தை ரசாக் சட்டார் 1950ஆம் ஆண்டு பெங்களூரில் ஒரு சிறிய தையல் கடை நடத்தி வந்தவர். பின்னர் அவர் தொழிலை விரிவுபடுத்தினார். படிப்படியாக ரியல் எஸ்டேட் துறையில் கால்பதித்தார். எனினும் இர்ஃபான் ரசாக் தான் அதனை மிகப்பெரிய தொழிலாக மாற்றி காட்டியவர்.

இர்ஃபான் ரசாக்கின் தலைமையில் பிரஸ்டீஜ் எஸ்டேட் ப்ராஜெக்ட் நிறுவனம் இந்தியாவின் இரண்டாவது பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமாக மாறியுள்ளது. குடியிருப்புகள், வணிக கட்டடங்கள், மருத்துவமனைகள் என பல்வேறு கட்டுமான பணிகளிலும் இவர்கள் கால் பதித்து வெற்றி அடைந்துள்ளனர். 285 கட்டுமான பணிகளை முடித்துள்ளனர் தற்போது 54 கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
டிஎல்எஃப் நிறுவனத்துக்கு அடுத்தபடியாக இவர்களது நிறுவனம்தான் முக்கியமான உலக பிராண்டுகளுக்கான இடங்களை வாடகைக்கு தந்திருக்கிறது. அவற்றில் ஆப்பிள்,லூயிஸ் விட்டன், கேட்டர்பில்லர் போன்ற நிறுவனங்களை நாம் குறிப்பிட்டு கூறலாம்.
சிறந்த திட்டமிடல் மற்றும் இலக்கு நிர்ணயம் ஆகியவையே இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு காரணம் என்கிறார் இர்ஃபான் ரசாக். முதலில் பெங்களூருவில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் பல்வேறு கட்டுமான பணிகளை வெற்றிகரமாக முடித்து, சென்னை,கொச்சி. ஹைதராபாத், மும்பை என பல்வேறு நகரங்களுக்கு விரிவடைந்துள்ளது.
இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் மிடில் கிளாஸ் மக்கள் ஆவர். வாடிக்கையாளர்கள் மனநிறைவு மற்றும் புதுமை ஆகியவற்றின் மூலம் இன்றும் கட்டுமான துறையில் இவர்கள் நிலைத்து நிற்கின்றனர்.
நடப்பாண்டில் ரசாக்கின் நிகர சொத்து மதிப்பு என்பது 1.3 பில்லியன் டாலர்களாக இருக்கிறது. தற்போது 70 வயதாகும் ரசாக் , உற்சாகம் குறையாமல் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார். இவர் 2014ஆம் ஆண்டில் ஃபோர்ப்ஸ் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் 77ஆவது இடம் பிடித்தார்.
பிரஸ்டீஜ் மட்டுமல்லாது, இண்டெச்சர் அகாடமி என்ற நிறுவனத்தையும் ரசாக் நிறுவியுள்ளார். கிரடாய் அமைப்பு தலைவர் என பல பதவிகளையும் இவர் வகித்துள்ளார். தொழில் துறையில் பல விருதுகளையும் வாங்கி குவித்துள்ளார்.
இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பிரஸ்டீஜ் எஸ்டேட் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 48,214 கோடி ரூபாய் ஆகும். இந்த நிறுவனத்தின் புக் வேல்யூ 275.2, பேஸ் வேல்யூ 10 ஆக இருக்கிறது. நிறுவனத்தின் வருமானம் 2023 ஆம் ஆண்டு 8,772 கோடி ரூபாயாக உள்ளது.
இதில் நிறுவனத்தின் லாபம் 2023 ஆம் ஆண்டில் 1,067 கோடியாக உயர்ந்திருக்கிறது. இந்த நிறுவனத்தின் பங்குகளில் 65.48% ப்ரமோட்டோர்களும், 18.7 % வெளிநாட்டு நிறுவனங்களும், 4 % சில்லறை முதலீட்டாளர்களும் வைத்துள்ளனர்.
Story written by: Devika
More From GoodReturns

ரியல் எஸ்டேட்டில் பணத்தை கொட்டிய Dhurandhar நாயகன் மாதவன்.. சும்மாயில்ல பாஸ் ரூ.125 கோடி சொத்து மதிப்பு..!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?



Click it and Unblock the Notifications