யூடியூப் இன்று பல கோடி மக்களின் முழுநேர வேலையாக மாறி வருகிறது, பலர் மாதம் பிறந்து 1 ஆம் தேதி கைநிறைய கிடைக்கும் சம்பளத்தை விட்டுவிட்டு யூடியூப், இன்ஸ்டாகிராம், டிவிட்டர், திரெட்ஸ் என பல்வேறு சமுகவலைத்தளத்தில் முழுநேர கன்டென்ட் கிரியேட்டர்களாக மாறி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் டாப் யூடியூபர்களில் மிகவும் முக்கியமான சிலர் இர்பான் வியூவ்ஸ், TTF வாசன், மதன் கௌரி ஆகியோர், இதேபோல் டெக், லைப்ஸ்டைல், சமையல், பைக் ரேசிங், பேங்கிங் என பல பிரிவில் பல பிரபலங்கள் உள்ளனர்.

இவர்கள் அனைவரும் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள்..? இவர்களுடைய சொத்து மதிப்பு என்ன என்பதை ஆராய்வதை காட்டிலும், ஒருவர் யூடியூப் மூலம் எவ்வளவு சம்பாதிக்க முடியும் என்பதை தெரிந்துக்கொள்வதன் மூலம் ஏற்கனவே யூடியூப்-ல் வீடியோ பதவிடுவோருக்கும், புதிகாக வருபவர்களுக்கும் பெரிய அளவில் உதவும்.
ஒவ்வொரு யூடியூபர் வருமானமும் அதன் சப்ஸ்கிரைபர் எண்ணிக்கை, எத்தனை பேர் பார்க்கிறார்கள், எவ்வளவு பேர் பார்கிறார்கள், எந்த வாடிக்கையாளர் (நகரம்,கிராமம், பெரு நகரம், வெளிநாடு) என்ற பல காரணிகள் அடிப்படையில் வருமானம் மாறுப்படும். இந்த வகையில் பொதுவாக ஒருவரின் யூடியூப் சேனலில் 1 லட்சம் சப்ஸ்கிரைபர் இருந்தால் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதை தெரிந்துகொள்வோம்.
1 லட்சம் சப்ஸ்கிரைபர் கொண்ட ஒரு யூடியூப் சேனலுக்கு 1.98 லட்சம் ரூபாய் முதல் 3.29 லட்சம் ரூபாய் வரையில் யூடியூப் வாயிலாக சம்பாதிக்க முடியும் என கூறப்படுகிறது, ஆனால் கட்டாயம் இதில் பெரிய அளவில் மாற்றம் இருக்கும். மேலும் 1 லட்சம் சப்ஸ்கிரைபர் கொண்ட ஒரு யூடியூப் சேனலில் பல்வேறு பொருட்களையும், பிராண்டகளையும் ப்ரோமோட் செய்வதன் மூலம் கூடுதலான வருமானத்தை பெற முடியும்.
இதை தாண்டி Affiliate marketing மற்றும் sponsored content என பல வகையில் யூடியூப் மூலம் சம்பாதிக்க முடியும். இன்றைய முக்கிய டிரெண்டாக பார்க்கப்படுவது யூடியூப் மூலம் மெர்சென்டைஸ் பொருட்களை விற்பது மற்றும் யூடியூப்-ல் கிடைக்கும் புகழ் வைத்து சொந்தமாக ஒரு தொழில் துவங்கி அதன் மூலம் வாடிக்கையாளர்கள், வர்த்தகத்தை உருவாக்குவது.
ஆனால் இந்தியாவில் 1 லட்சம் சப்ஸ்கிரைபர்-ஐ பெறுவது என்பது பெரிய சவாலான காரியம், அதேபோல் யூடியூப் கம்யூனியின் வருமானம் ஈர்க்கும் அளவையும் வாய்ப்பையும் அதிகரிக்க யூடியூப் நிர்வாகம் சமீபத்தில் 12 மாதத்தில் 1000 சப்ஸ்கிரைபர் மற்றும் 4000 மணிநேரம் பார்வை இருந்தால் மட்டும் போதும் என அறிவித்துள்ளது. இந்த தகுதியை பூர்த்தி செய்தாலே ஒரு யூடியூப் சேனலில் போடப்படும் வீடியோவுக்கு வருமானம் பெற முடியும்.
அனைத்தையும் விட முக்கியமானது யூடியூப் மூலம் அனைவராலும் இர்பான், TTF வாசன், மதன் கௌரி மூலம் வெற்றி பெற முடியும் என்பது இல்லை. இதுவும் சமானிய மக்களின் வாழ்க்கை போல தான், ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் எல்லோரும் சிஇஓ ஆக முடியாது இதேபோல தான் யூடியூப்.
யூடியூப் மற்றும் சமுக வலைத்தளத்தில் இன்று பலர் கொடிக்கட்டி பறந்தாலும், பலர் இன்னும் 1 லட்சம் சப்ஸ்கிரைபர் எடுக்க முடியாமல் தவிக்கின்றனர். இப்படியிருக்கும் சூழ்நிலையில் யூடியூபர், vloggers, content creator ஆக முழு நேர பணியை செய்ய நீங்கள் முடிவு செய்தும் போது 360 கோணத்திலும் முடிவு யோசித்து முடிவு செய்யுங்கள்.
நிதி நிலைமை, நீண்ட கால முயற்சி, குடும்ப பொறுப்புகள், எதிர்கால வருவாய் ஈட்டும் நிலை என பல விஷயங்கள் உள்ளது. இளம் தலைமுறையினர் முழுநேர content creator ஆக வளர பல பெற்றோர்கள் ஊக்கப்படுத்தினாலும் எதிர்காலத்தையும் யோசித்து முடிவு செய்ய வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.


Click it and Unblock the Notifications