ரகசிய திட்டம் தீட்டும் அமெரிக்கா.. புட்டு புட்டு வைக்கும் ஈரானின் IRGC படை.. CODE 100 தொடரும்!

ஈரான் இன்று காலை அனைத்து படைகளுக்கும் Code 100 அறிவித்த நிலையில் மாலையில் ஈரானின் முக்கிய பாதுக்காப்பு படையான IRGC அதிர்ச்சி அளிக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது தாக்குதலை தொடங்க முடிவு செய்துள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) தெரிவித்துள்ளது.

கடந்த 3 நாட்களாக டிரம்ப், பீட் செகத், பெஞ்சமின் நெதன்யாகு உட்பட பல முக்கிய தலைவர்கள் தீவிரமான ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதற்கு ஏற்றார் போல் அமெரிக்க அரசு வளைகுடா நாடுகளில் இருக்கும் அனைத்து தூதரங்களுக்கும் உச்சகட்ட எச்சரிக்கையைவிடுத்து பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தியுள்ளது.

ரகசிய திட்டம் தீட்டும் அமெரிக்கா.. புட்டு புட்டு வைக்கும் ஈரானின் IRGC படை.. CODE 100 தொடரும்!

இந்த நிலையில் இன்று மாலை IRGC தரப்பில் வெளியிட்டப்பட்ட அறிவிப்பில் ஐரோப்பிய நாட்டில் நடைபெற்ற முக்கிய ஜாயின்ட் ஆலோசனை கூட்டத்தில் ஈரான் மீது மீண்டும் தாக்குதலை தொடங்க முடிவு எடுக்கப்பட்டதாகவும், இதற்கு மத்திய கிழக்கு நாடுகளும் ஒப்புதல் அளித்தாகவும் IRGC கூறியுள்ளது.

இதேவேளையில் IRGC படை அமெரிக்காவுக்கு முக்கியமான எச்சரிக்கையும் விடுத்துள்ளது. இதில், அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது தாக்குதல் மேற்கொண்டால், மத்திய கிழக்கில் உள்ள அனைத்து அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் அமெரிக்க ஆதரவு பெற்ற இடங்கள் மீது தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாக்கப்படும் என IRGC கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் அடுத்த பதிலடி நடவடிக்கையில் ஈரான் எந்தவித தளர்வும் காட்டாது என்றும் ஈரான் தரப்பு எச்சரித்துள்ளது.

இதேவேளையில் இன்று டிரம்ப் அமெரிக்காவின் ஃபாக்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனை அடுத்த வாரம் நடைபெற உள்ள ஐநா பொது கூட்டத்தின்போது சந்திக்க வாய்ப்புள்ளதாக டிரம்ப் தெரிவித்தார்.

இதேபோல் மசூத் பெசெஷ்கியன் ஈரான் போரில் முடிவுகளை எடுப்பதில் முக்கிய அதிகாரம் கொண்டவர் என்பதால் அவருடனான சந்திப்பு கட்டாயம் பெரிய முடிவுகளை எடுக்க உதவும் என தெரிவித்தார்.

மேலும் டிரம்ப் பேசுகையில் அமெரிக்கா உடனான போரில் ஈரானுக்கு இருக்கும் 3 வாய்ப்புகள் இதுதான், ஈரானை முற்றிலும் அழிக்கும் வரையில் ராணுவ தாக்குதல், ஈரான் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் தடைகள் விதிப்பது அல்லது ஈரான் அமைதி ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வது என மிரட்டல் தொனியில் பேசியுள்ளார் டிரம்ப்.

இதேபோல் அமெரிக்கா தொடர்ந்து ஹவுதிக்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அவர்களுக்கு அமெரிக்கா உடன் போர் தொடுக்க விருப்பம் இல்லை என டிரம்ப் இந்த பேட்டியில் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+