பெங்களூரு: இந்தியாவில் வாழ்க்கை செலவினங்கள் அதிகமாக இருக்கும் நகரங்களில் ஒன்றாக பெங்களூரு இருக்கிறது. வீட்டு வாடகை தொடங்கி அத்தியாவசிய பொருட்கள் வரை பெங்களூருவில் விலை அதிகமாக இருக்கிறது. இந்த சூழலில் பெங்களூரில் இருக்கும் 22 வயது இளைஞர் ஒருவர் தான் மாதம் 20,000 ரூபாய் சம்பளத்தில் சௌகரியமான வாழ்க்கை வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
ரெடிட் தளத்தில் பதிவு செய்துள்ள அந்த இளைஞர் தன்னுடைய சம்பளம் எவ்வளவு அதனை எதற்கெல்லாம் செலவிடுகிறேன் என விரிவாக பதிவு செய்துள்ளார். கடந்த 6 மாதங்களாக தான் 20,000 ரூபாய் சம்பளத்தில் சௌகரியமான வாழ்க்கை வாழ்ந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். அவர் நண்பர்களுடன் வீடு வாடகைக்கு எடுத்து வாடகையை பகிர்ந்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.

இதன்படி அவர் தன்னுடைய சம்பளத்தில் மாதம் 8 ஆயிரம் ரூபாயை உணவுக்காக செலவிடுகிறார், அத தவிர வீட்டு வாடகைக்காக 9 ஆயிரம் ரூபாயை செலவிடுகிறார். அவர் வீட்டு வாடகை 23 ஆயிரம் ரூபாய் நண்பர்களோடு பகிர்ந்து கொள்வதால் இவர் 9 ஆயிரம் ரூபாயை மட்டுமே வாடகையாக செலவிடுகிறார். பொது போக்குவரத்து மற்றும் ரேபிடோ உள்ளிட்டவற்றுக்காக அவர் மாதம் 2 ஆயிரம் ரூபாய் செலவு செய்கிறார். மற்ற செலவினங்களுக்காக அவர் 2 ஆயிரம் ரூபாயை செலவு செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.
எனவே அவர் மாதம் செய்யும் செலவு 20 ஆயிரம் ரூபாய்., பெங்களூருவில் சௌகரியமான வாழ்க்கை வாழ இந்த சம்பளமே போதும் என கூறியுள்ளார். ஆடம்பர வாழ்க்கை தேவையில்லை, ஆனால் நிறைவான ஒரு வாழ்க்கையை வாழ்வதற்கு அவர் குறைந்த சம்பளமே போதும் என கூறுகிறார்.
என்னுடைய இந்த வாழ்க்கை முறை அனைவருக்கும் செட் ஆகாது என குறிப்பிடும் அவர் நான் குடிக்க மாட்டேன், புகைப்பிடிக்க மாட்டேன், பார்ட்டிக்கு செல்ல மாட்டேன் அதனால் தான் எனக்கு இந்த சம்பளமே போதுமானதாக இருக்கிறது. அவரது இந்த பதிவு பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. நிதி ரீதியாகவும் , தனிப்பட்ட முறையிலும் ஒழுக்கமாக இருக்கிறீர்கள் என பலரும் அவரை பாராட்டியுள்ளனர்.
ஒரு பயனர் எனக்கும் அதே வயது தான் இந்த பதிவை படித்த போது தான் நான் எவ்வளவு தேவையற்ற செலவுகளை செய்கிறேன் என உணர்கிறேன் என்று தெரிவித்துள்ளார். ஒரு பயனர் ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கினாலும் போதவில்லை என சிலர் கூறுகின்றனர், ஆனால் இவரை பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.ஒரு பயனர் இவை அனைத்தும் நாம் தேர்வு செய்யும் வாழ்க்கை முறையை பொறுத்தது என கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications