இந்தியாவின் பெரிய நகரங்களில் பணிபுரியும் பல இளம் நிபுணர்கள், தங்கள் சம்பளப் பட்டியலில் ஒரு பெரிய தொகையைப் சம்பாதிக்கும்போது பெரிதாக சாதித்து விட்டதாக மிகவும் நம்பிக்கையுடன் உணர்கிறார்கள். ஆனால், மாதாந்திர செலவுகள் குவியத் தொடங்கியவுடன், அந்த மகிழ்ச்சி விரைவாக மாறிவிடுகிறது. இதுகுறித்து பட்டயக் கணக்காளரான (CA) நிதின் கௌசிக், LinkedIn தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், பெருநகரங்களில் மாதம் ரூ.1.5 லட்சம் சம்பளத்தின் உண்மையான மதிப்பைத் தெளிவாக கூறியுள்ளார்.
செலவுகளின் உண்மை நிலை: மேலோட்டமாகப் பார்க்கும்போது, மாதம் ரூ.1.5 லட்சம் என்பது ஒரு வசதியான வருமானமாகத் தோன்றலாம். ஆனால், உயர்ந்து வரும் வாடகை, வாழ்க்கை முறைச் செலவுகள் மற்றும் இ.எம்.ஐ-கள் (EMIs) ஆகியவை மாத இறுதியில் கையில் இருக்கும் தொகையை வெகுவாகக் குறைத்து விடுகின்றன. இந்த எதிர்பார்ப்புக்கும், நிஜத்திற்கும் இடையேயான இடைவெளி குறித்து கௌசிக் விளக்கமளித்துள்ளார். அந்த கணக்கில் பார்க்கும்போது, நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்றுவிட்டதாக நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில், இது வெறும் எண்கள்களாக மட்டுமே உள்ளன என்று அவர் பதிவிட்டுள்ளார்.

ஒருவர் மாதாந்திரச் செலவுகளின் ஒரு தோராயமான விவரம் அடிப்படையில், வாடகை மட்டும்: ரூ.30,000
உணவு மற்றும் வார இறுதிச் செலவுகள்: ரூ.20,000
வாகன இ.எம்.ஐ-கள்: ரூ.25,000
கிரெடிட் கார்டு பில்கள், சந்தாக்கள் மற்றும் இதர செலவுகள்: ரூ.10,000
மொத்த அத்தியாவசிய செலவுகள்: ரூ.85,000
அடிப்படைச் செலவுகள் போக, கையில் எஞ்சியிருப்பது சுமார் ரூ.65,000 மட்டுமே. ஆனால், அந்தத் தொகையும் கண்சிமிட்டும் நேரத்தில் கரைந்துவிடுகிறது.
எதிர்பாராத செலவுகளும் சேமிப்பின் சவால்களும்: பெரு நகரங்களில், ஒரு சிறிய அவசரநிலை கூட ஒருவரின் பட்ஜெட்டை ஆட்டம் காணச் செய்துவிடும். ஒரு மருத்துவ பில், நண்பரின் திருமணம், வீட்டுக்கு பழுதுபார்ப்பு அல்லது தவறிய ஒரு இ.எம்.ஐ. போன்றவை சேமிப்புக்காக வைத்திருந்த எஞ்சிய தொகையையும் உடனடியாக அழித்துவிடும். என்றும், இது ஆடம்பர வாழ்க்கை அல்ல. இது வெற்றியாக மாறுவேடம் பூண்ட நகர்ப்புற பிழைப்பு மட்டுமே என்று குறிப்பிட்டுள்ளார்.
நகர வாழ்க்கைக்கு ஈடுகொடுக்க வேண்டும் என்ற அழுத்தத்தில், பல பணியாளர்கள் வெளியே சாப்பிடுவது, பயணம் செய்வது, புதிய கருவிகள் வாங்குவது அல்லது வீட்டை மேம்படுத்துவது போன்ற தேர்வுகளை செய்கிறார்கள். இந்தத் தேர்வுகள் பெரும்பாலும், அர்த்தமுள்ள சேமிப்புக்கான இடத்தை மிகவும் குறைத்துவிடுகின்றன.
உண்மையான செல்வத்தை உருவாக்கும் வழி: CA நிதின் கௌசிக் அறிவுறுத்துவது என்னவென்றால், உண்மையான செல்வத்தை உருவாக்குவதற்கான முக்கியமான விஷயம் வெறும் அதிக சம்பளம் மட்டுமல்ல அது நிதித் திட்டமிடல் மற்றும் முதலீடுகளில் உள்ளது. உண்மையான செல்வம் நீங்கள் முதலீடு செய்யத் தொடங்கும்போதே தொடங்குகிறது. உங்கள் சம்பளச் சீட்டு உயரும்போது அல்ல, உங்கள் செலவுகள் சுருங்கி, உங்கள் சொத்துக்கள் வளரும்போதுதான் வருகிறது என்று கூறியுள்ளார்.
ஆகவே, பெரு நகரங்களில் அதிக சம்பளம் பெறுபவர்கள் கூட, நிஜமான நிதி சுதந்திரத்தை அடைய வேண்டுமானால், தங்கள் செலவுகளைக் கட்டுக்குள் வைத்து, வருமானத்தின் பெரும்பகுதியை முதலீடுகளின் பக்கம் திருப்புவதே புத்திசாலித்தனமான வழியாகும்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications