சென்னை: பொது வருங்கால வைப்பு நிதி (PPF), மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS), சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) போன்ற சிறு சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்யவதற்கு ஆதார் அட்டையின் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டுமா? என்று கேட்டால். கண்டிப்பாக இது போன்ற புதிய கணக்குகளை திறக்கும் பொழுது ஆதார் அட்டையின் விவரங்களை தர வேண்டும். எதற்காக முதலீட்டு திட்டங்களுக்கு ஆதார் கார்டு அவசியமாகிறது என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
ஏப்ரல் 3, 2023 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையின் படி, அரசு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதற்கு நிதி அமைச்சகம் புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது. அந்த விதிகளின்படி சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய இருக்கும் நபர்கள், அவர்களின் அடையாளம் மற்றும் முகவரிக்கான ஆதாரங்களை முதலீடு செய்ய இருக்கும் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதில் முக்கியமான ஆதாரமாக ஆதார் கார்டை வழங்க வேண்டும்.

உங்களிடம் ஆதார் கார்டு இல்லையென்றால் என்ன செய்வது?: ஆதார் கார்டு இல்லாதவர்கள், முதலில் ஆதார் கார்டு பெற பதிவு செய்ய வேண்டும். அவர்கள் ஆதார் பதிவு சான்றிதழை தருவார்கள். அதன் பின் சிறு சேமிப்பு திட்டக் கணக்கை திறக்க இந்த ஆதார் பதிவுச் சான்றிதழை பயன்படுத்த வேண்டும். உங்களுக்கு ஆதார் அட்டை வழங்கிய பின், ஆதார் விவரங்களை அந்த அலுவலகத்தில் நீங்கள் சமர்ப்பித்து கொள்ளலாம். ஒரு நபருக்கு ஆதார் எண் இல்லை என்றால், ஆதார் அட்டையை பதிவு செய்ததற்கான விண்ணப்பத்தை அந்த அலுவலகத்தில் தர வேண்டும். பின் 6 மாத காலத்திற்குள் ஆதார் எண்ணை அந்த அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
நீங்கள் 6 மாத காலத்திற்குள் ஆதார் எண்ணை சமர்ப்பிக்க தவறிவிட்டால் ஏற்படும் விளைவுகள்: குறிப்பிட்ட 6 மாதங்களுக்குள் ஆதார் எண்ணை சமர்ப்பிக்கவில்லை என்றால், ஆதார் விவரங்களை சமர்ப்பிக்கும் வரை அந்த டெபாசிட் செய்தவரின் கணக்கு செயல்படாது. இதுபோன்ற நேரங்களில் ஆதார் கார்டை சமர்ப்பித்த பிறகுதான், உங்களுடைய கணக்கு செயல்படுத்தப்படும்.
சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதற்கு முதலீட்டாளர்களுக்கு பான் எண் தேவையா?
நிதியமைச்சகத்தின் அறிவிப்பின்படி, சிறுசேமிப்பு திட்டத்தை தொடங்குபவர்கள் பான் எண்ணை வழங்க வேண்டியது அவசியம். கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒன்று உங்களுக்கு பொருந்தினாலும் பான் கார்டை வழங்குவது அவசியம்.
உங்கள் சேமிப்பு கணக்கில் ரூ. 50,000 ரூபாய்க்கு மேல் இருந்தாலோ அல்லது ஒரு நிதியாண்டின் ரூ. 1 லட்சம் ரூபாய்க்கு பரிமாற்றங்கள் நடைபெற்று இருந்தாலோ, பான் கார்டை சமர்ப்பிக்க வேண்டும்.
ஒரு மாத பண பரிவர்த்தனை ரூ. 10,000 ரூபாயை தாண்டினாலும், பான் கார்டு சமர்ப்பிப்பது கட்டாயம்
மேலும் 2 மாதங்களுக்குள் டெபாசிட் செய்தவர் அவருடைய பான் எண்ணை அலுவலகத்தில் சமர்ப்பிக்கவில்லை என்றால், அவர் சமர்ப்பிக்கும் வரை அந்தக் கணக்கு செயல்படாமல் இருக்கும்.
ஏன் சேமிப்பு திட்டங்களுக்கு ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு அவசியம்?: ஏன் முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்வதற்கு ஆதார் மற்றும் பான் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று பலருக்கும் சந்தேகம் இருக்கலாம்.
மோசடியை கட்டுப்படுத்துதல்: பலர் போலியான ஆவணங்களை வைத்து போலியாக 2 முதல் 3 சேமிப்பு திட்டங்களில் கணக்க வைத்திருந்து மோசடி செய்ய முயற்சிக்கின்றனர். இதனால் தான் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை வைத்து ஒரு நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட திட்டங்களில் முதலீடு செய்கிறாரா அல்லது போலி கணக்கை வைத்திருக்கிறாரா என்பதை எளிதில் கண்டுபிடித்து விடலாம்.
நிதி பரிவர்த்தனைகளில் வெளிப்படைத் தன்மை: ஆதார் கார்டு கட்டாயமாக்கப்படுவதன் மூலம் பணப்பரிவர்த்தனைகள் செய்யும்போது, வெளிப்படை தன்மை அதிகரிக்கும். இதன் காரணமாக கள்ளப்பணத்தை ஒழிக்க முடியும்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications