AI தொழில்நுட்பத்தை மிஞ்சும் Super Intelligence..!! எந்திரன் கதை உண்மையாகுதா? மனிதகுலத்திற்கே ஆபத்தா?

எங்கு பார்த்தாலும் யாரை பார்த்தாலும் ஏஐ பற்றி தான் பேசி வருகிறார்கள். படிப்படியாக மனிதர்களின் வேலை வாய்ப்பை கொஞ்சம் கொஞ்சமாக ஏஐ பறித்து வருகிறது. ஏஐ தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி பல்வேறு சாதக பாதகங்களை கொண்டிருக்கிறது என்பதை மறுப்பதற்கு கிடையாது.

அசுர வளர்ச்சி காணும் ஏஐ: ஏஐ தொழில்நுட்பம் நம்முடைய வேலைகளை எளிதாக்குகிறது ஆனால் பலரது வேலை வாய்ப்புகளையும் இது பறித்து வருகிறது. பல்வேறு டெக் நிறுவனங்களின் தலைவர்கள் ஏஐ தொழில்நுட்பம் புதிதாக வேலை வாய்ப்புகளை உருவாக்கப் போகிறது என கூறி வருகிறார்கள். ஆனால் தற்போது வரை அதற்கான எந்த ஒரு அறிகுறியும் தென்படவில்லை . இதற்கிடையில் தான் அமெரிக்க டெக் நிறுவனங்கள் ஏஐ தொழில்நுட்பத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுவிட்டன . அதுதான் ஏஎஸ்ஐ அதாவது Artificial Super Intelligence. தமிழில் செயற்கை சூப்பர் நுண்ணறிவு தொழில்நுட்பம் என கூறலாம்.

AI தொழில்நுட்பத்தை மிஞ்சும் Super Intelligence..!! எந்திரன் கதை உண்மையாகுதா? மனிதகுலத்திற்கே ஆபத்தா?

Artificial Super Intelligence : தற்போது மனிதர்களுக்கும் ஏஐ தொழில்நுட்பத்துக்கும் இருக்கும் வித்தியாசம் மனிதர்களுக்கு படைப்பாற்றல், பகுத்தறிவு, பிரச்சனைகளை தீர்க்கும் திறன், திட்டமிடல் மற்றும் உணர்வுபூர்வமான புரிதல் ஆகியவைதான். இந்த திறன் அனைத்தும் ஏஐ-க்கு வந்துவிட்டால் அது தான் Artificial Super Intelligence. அனைத்து துறைகளிலும் மனித நுண்ணறிவை மிஞ்சும் ஒரு ஏஐ வடிவத்தை தான் Artificial Super Intelligence என அழைக்கிறார்கள் .

மனிதர்களை விட திறன்: இந்த சூப்பர் இன்டெலிஜென்ஸை தொழில்நுட்பத்தை அமெரிக்க டெக் நிறுவனங்கள் உருவாக்கி வருகின்றன. இது மனித அறிவாற்றலை மிஞ்சி வேகமாக ஒரு விஷயத்தைக் கற்றுக் கொண்டு தன்னைத்தானே வேகமாக மேம்படுத்தி கொள்ளும் திறன் கொண்டதாக இருக்கும். பூமியில் உள்ள புத்திசாலி மனிதனை விட புத்திசாலியான ஒரு ஏஐ அமைப்பு என இதனை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

எந்திரன் கதை உண்மையாகிறதா: இதனை கேட்ட உடன் நமக்கு எந்திரன் திரைப்படம் தான் நினைவுக்கு வரும். கற்பனை செய்து பாருங்கள் அப்படி எந்திரங்கள் அதீத சக்தியை பெற்றால் மனிதர்கள் நிலை என்ன ஆகும்?, எந்திரங்களின் நகர்வுகளை நம்மால் கணிக்க முடியுமா? என பல கேள்வி எழுகிறது. இந்நிலையில் தான் இந்த சூப்பர் இண்டெலிஜன்ஸ் ஆய்வுக்கு தடை விதிக்க வேண்டும் என 800க்கும் அதிகமான பிரபலங்களும் டெக் நிபுணர்களும் கேட்டு கொண்டிருக்கின்றனர்.

AI தொழில்நுட்பத்தை மிஞ்சும் Super Intelligence..!! எந்திரன் கதை உண்மையாகுதா? மனிதகுலத்திற்கே ஆபத்தா?

உடனே நிறுத்த கோரிக்கை: ஏஐ காட்ஃபாதர் என அழைக்கப்படும் ஜெஃபிராய் ஹிண்டன், யோசுவா பெனிகோ, ஆப்பிளின் ஸ்டீவ் வாஸ்னாய்க், விர்ஜின் குழுமத்தின் ரிச்சர்டு பிரான்சன், இளவரசர் ஹாரி உள்ளிட்ட 800க்கும் அதிகமானவர்கள் கூட்டாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் சூப்பர் இன்டெலிஜென்ஸ் ஆய்வு பணிகளையும் மேம்பாட்டு பணிகளையும் நிறுத்த வேண்டும் கேட்டுக் கொண்டுள்ளனர். இதற்காக அவர்கள் கூறும் காரணங்கள் தான் நம்மை கவனிக்க வைக்கின்றன.

மனிதர்களால் கட்டுப்படுத்த முடியுமா: மனிதர்களை மிஞ்சும் திறன் கொண்டதாக ஏஐ மாறுவது மனித இனத்தையே அழிக்கும் திறன் கொண்டது என அவர்கள் கூறுகின்றனர். மனிதர்களின் சுதந்திரம் பறிபோகும் , மனித அழிவுக்கே கூட வழிவகுக்கும் என அச்சம் தெரிவித்துள்ளனர். அதாவது இது தொழில்நுட்பங்களை பற்றிய கவலை அல்ல , இந்த தொழில்நுட்பம் தவறான சக்திகளின் வசம் சென்று அவர்கள் அதனை எப்படி பயன்படுத்துவார்கள் என்பது பற்றிய கவலை என தெரிவிக்கின்றனர்.

AI தொழில்நுட்பத்தை மிஞ்சும் Super Intelligence..!! எந்திரன் கதை உண்மையாகுதா? மனிதகுலத்திற்கே ஆபத்தா?

சூப்பர் இன்டெலிஜென்ட் சிஸ்டம்கள் பயன்பாட்டுக்கு வந்தால் அது சுயமாக செயல்பட தொடங்கும் அவற்றின் செயல்பாடுகளை மனிதர்களாகிய நம்மால் கணிக்கவே முடியாது, கட்டுப்படுத்தவும் முடியாது மனித நலன்களில் இருந்து அவை சிறிது வழி மாறினாலும் விளைவுகள் கடுமையாக இருக்கும் என ஏஐ காட்ஃபாதர் என அழைக்கப்படும் ஹிண்டன் கூறியிருக்கிறார். புத்திசாலித்தனமான இந்த தொழில்நுட்பங்கள் மீதான கட்டுப்பாட்டை மனிதர்கள் இழந்து விடுவார்கள் என அவர் எச்சரித்துள்ளார்.

வேலைவாய்ப்பு: ஏற்கனவே ஏஐ தொழில்நுட்பமே மனிதர்களின் வேலை வாய்ப்புகளை வேகமாக பறித்து வருகிறது. குறிப்பாக ஒயிட் காலர் வேலைகள் , ஒரே மாதிரியாக திரும்ப திரும்ப செய்யக் கூடிய வேலைகள் அனைத்தும் ஏஐ வசம் சென்ற வண்ணம் இருக்கின்றன. இந்த சூப்பர் இன்டெலிஜென்ஸ் வந்துவிட்டால் ஒட்டுமொத்த மனித குலத்தின் வேலைவாய்ப்பும் ஒட்டுமொத்த தொழில்களும் இந்த சூப்பர் இன்டெலிஜென்ஸ் அமைப்புகளிடம் சென்று விடும்.

அமேசான் போன்ற நிறுவனங்கள் தற்போதே அலுவலக வேலைகளுக்கு மாற்றாக ஏஐ தொழில்நுட்பத்தையும், கிடங்குகளில் தொழிலாளர்களுக்கு மாற்றாக ரோப்போக்களையும் பணி அமர்த்துவதாக அறிவித்துவிட்டது. அப்படி என்றால் மனிதர்களுக்கு வேலைவாய்ப்பை இல்லாமல் போய்விடும் சூழல் கூட உண்டாகலாம். இது சாதாரண மக்களை தான் அதிக அளவில் பாதிக்கும்.

அதிகாரம்: தற்போது ஆயுத பலம் கொண்ட , பண பலம் கொண்ட நாடுகளின் கை தான் ஓங்கி இருக்கிறது. எதிர்காலத்தில் இந்த சூப்பர் இண்டெலிஜன்ஸை கட்டுப்படுத்தும் நபர்களின் வசம் பெரிய அதிகாரமும் பணமும் சென்று குவிந்துவிடும் என அந்த கூட்டு அறிக்கையில் அச்சம் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக அரசுகளும் டெக் நிறுவனங்களும் சூப்பர் இண்டெலிஜன்ஸ் தொழில்நுட்ப மேம்பாட்டு ஆய்வுகளை நிறுத்த வேண்டும் என கேட்டு கொண்டுள்ளனர். அனைத்து நாடுகளும் இந்த தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு என ஒரு பாலிசியை வகுத்து அது கைமீறி போகாத வகையில் ஒழுங்குமுறைகளை கொண்டு வந்து அதன் பின்னர் ஆய்வினை தொடங்கலாம் என்றும் கேட்டு கொண்டிருக்கின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+