அமெரிக்கா உலக நாடுகளை கடனில் சிக்க வைக்கிறதா? இந்தியாவுக்கு என்ன ஆபத்து?

ஒரு நாட்டின் கடன் அந்த நாட்டின் பிரச்னையாக மட்டுமே இருந்தால் அதை சமாளிப்பது ஓரளவுக்கு ஈசி. ஆனால், உலகின் முக்கியமான நாணயமாக இருக்கும் அமெரிக்க டாலர் மூலமாக அந்தக் கடன் உலக பொருளாதாரத்துக்குள் பரவினால் என்ன நடக்கும்? இதை தான் தற்போது அமெரிக்கா உலக நாடுகளுக்கு செய்து வருகிறது.

வெனிசுலா தனது இஷ்டத்திற்கு பணத்தை அச்சிட்டு மக்களுக்கு கொடுத்த காரணத்தால் என்ன நடந்தது, அந்நாட்டை hyperinflation-க்கு தள்ளி, நாணயத்தின் மதிப்பை குறைத்து, அந்நாட்டின் பொருளாதாரத்தையே சீர்குலைத்துள்ளது.

அமெரிக்கா உலக நாடுகளை கடனில் சிக்க வைக்கிறதா? இந்தியாவுக்கு என்ன ஆபத்து?

இதையே அமெரிக்கா செய்தால் அது அமெரிக்காவின் பிரச்சனையாக இல்லாமல் உலக நாடுகளின் பிரச்சனையாக மாறுகிறது. சுருக்குமாக சொல்ல வேண்டுமென்றால் அமெரிக்கா தனது அதிகப்படியான கடன் பிரச்சனை உலக நாடுகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக பார்சல் செய்து வருகிறது. இது எப்படி நடக்கிறது..?

அமெரிக்க அரசு டாலரை தொடர்ந்து அச்சிட்டு வருகிறது, ஆனால் டாலருக்கான டிமாண்டை கருவூல பத்திரங்கள் மூலம் தொடர்ந்து சப்ளை டிமாண்ட் பிரச்சனையை சரி செய்யும் காரணத்தால் அந்நாட்டின் பணவீக்க பாதிப்பு உலக நாடுகளுக்கு பகிரப்பட்டு வருகிறது.

டாலருக்கான சப்ளை டிமாண்ட் உருவாக என்ன காரணம். உலகளவில் தங்கத்திற்கு அடுத்தப்படியாக டாலர் முக்கிய நாணயமாகவும், அதிக நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்படும் நாணயமாகவும் இருக்கும் காரணத்தால் டாலருக்கான டிமாண்ட் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கச்சா எண்ணெய் விலை, ஆயுத கொள்முதல் போன்ற பெரும் மதிப்புக்கொண்ட பரிவர்த்தனை அனைத்தும் டாலரில் மட்டுமே நடக்கிறது. இதனால் டாலருக்கான டிமாண்ட் தொடர்ந்து அதிகரித்து வருகிறது, மறுமுனையில் உலக நாடுகள் தங்களுடைய நாணய மதிப்பை கட்டுப்படுத்தவும் டாலரில் அதிகளவில் முதலீடு செய்கிறது.

இவை அனைத்தும் போர் காலம், வரி விதிப்பு போன்றவற்றை விதிக்கும் போது டாலருக்கான தேவை பெரியளவில் உயரும். இப்படி டாலருக்கான தேவையை அமெரிக்கா பல வகையில் உருவாக்கி அந்நாட்டின் பொருளாதாரத்தை தொடர்ந்து வளர்ச்சி பாதையில் வைத்துக்கொண்டும், பணவீக்கத்தையும் கட்டுக்குள் வைத்து வருகிறது.

டாலர் ஆதிக்கத்தை எதிர்த்து பிரிக்ஸ் நாடுகள் போல் ஒன்று சேர்ந்தால் டிரம்ப் அந்நாடுகள் மீது வரி விதித்து பொருளாதாரத்தையே பாதிக்கும் வகையில் தள்ளுக்கிறார்.

அமெரிக்காவையும், அமெரிக்க டாலர் ஆதிக்கத்தையும் எதிர்த்து போரிட எந்த நாட்டிடமும் பலம் இல்லாத காரணத்தால் தொடர்ந்து டாலரை வாங்குவதை வழக்கமாக கொண்டு உள்ளனர். சில சமயம் சீனா, ரஷ்யா போன்ற நாடுகளை டாலரை எதிர்த்து நிற்கும் போது அமெரிக்காவின் அதிகப்படியான கடன் காரணமாக பணவீக்கம் அதிகரிக்கும், ஆனால் அது அமெரிக்காவை பாதிக்காது.

காரணம் இந்த பணவீக்கத்தால் சொத்துக்களின் மதிப்பு அதிகரிக்கும். இத்தகைய சூழ்நிலையில் ஏழை நாடுகள் மேலும் ஏழையாகும், பணக்கார நாடுகள் மேலும் பணக்கார நாடாக மாறும் என லின்கிடுஇன் பதிவில் அக்ஷத் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.

இந்த டாலர் அதிக்கத்திற்கு ஏற்றார் போல் அமெரிக்கா தனது பொருளாதாரம், தொழில்நுட்பம், வர்த்தகம், புதுமை போன்றவற்றின் வாயிலாக ஈடுக்கொடுக்கிறது என்பது தான் அதில் முக்கியமான விஷயமாக உள்ளது. அமெரிக்கா பொருளாதாரம் திட்டமிட்டது போல் உயராமல் இருந்தால் டாலர் ஆதிக்கம் காணாமல் போயிருக்கும். ஆனால் தொடர்ந்து 50-60 வருடங்களாக அமெரிக்கா பெரும் பெருளாதார வளர்ச்சி ஆதிக்கத்தை கொண்டு உள்ளது. இதனாலேயே முதலீட்டாளர்களின் சொர்கமாக அமெரிக்க முதலீட்டு சந்தை விளங்குகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+