கனடாவின் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலக இருப்பதாக அறிவித்திருக்கிறார். இந்நிலையில் யார் அடுத்த பிரதமர் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரு நாட்டில் ஆட்சி செய்யும் பிரதமர் பதவி விலகும் சமயத்தில் பிற துறைகளில் இருக்கும் முன்னணி தலைவர்கள் அந்த பதவிக்கு வருவார்களா? என்ற எதிர்பார்ப்பு நிலவும். அதே போல கனடாவின் போக்குவரத்து துறை அமைச்சரான அனிதா ஆனந்த் இந்த பதவிக்கு வரக்கூடிய நபர்களில் ஒருவராக பார்க்கப்படுகிறார்.
இந்தியாவுக்கும் அனிதாவுக்கும் சம்பந்தமா?: அனிதா ஆனந்த் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவருடைய பெற்றோர்கள் இருவரும் இந்திய மருத்துவர்கள். அனிதாவின் தாயாரான சரோஜ் ராம் ஒரு மயக்க மருந்து நிபுணராக பணியாற்றினார். அவருடைய தந்தை எஸ்.வி.ஆனந்த் அப்போது அறுவை சிகிச்சை நிபுணர். அனிதாவின் தந்தை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ஆனால் தாயார் பஞ்சாபை சேர்ந்தவர். அனிதா ஆனந்துக்கு இரண்டு சகோதரிகளும் உள்ளனர்.

தற்போதைய பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ 2025-ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்னதாகவே பதவி விலகும் முடிவை அறிவித்ததனால் ஆளும் லிபரல் கட்சி தனக்கு பதிலாக ஒருவரை தேர்ந்தெடுக்கும் வரை தனது பதவியில் நீட்டிக்க இருப்பதாகவும் கூறியுள்ளார். ஜஸ்டின் ட்ரூடோவின் இந்த அறிவிப்பு காரணமாக கனடாவின் அடுத்த பிரதமர் யார் என்ற வியூகங்கள் தொடங்கியுள்ளன. அதன் படி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் போட்டியிடுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யார் இந்த அனிதா ஆனந்த்?: கனடாவின் தற்போதைய போக்குவரத்து மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராக அனிதா ஆனந்த் உள்ளார். நோவா ஸ்கோடியாவில் பிறந்து வளர்ந்த அனிதா ஆனந்த் 1985-ஆம் ஆண்டில் ஆன்டாரியோவிற்கு குடிபெயர்ந்தார். அவரும் அவரது கணவர் ஜானும் தங்கள் 4 குழந்தைகளை ஓக்வில்லேயில் வளர்த்ததாக கனேடிய இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா டூ கனடா பயணம்: அனிதாவின் பெற்றோர்கள் மகாத்மா காந்தியை பின்பற்றுபவர்கள். மேலும் இவருடைய தந்தை சுதந்திரப் போராட்டத்தில் பணியாற்றியவர். 1960-களின் முற்பகுதியில் அனிதாவின் தாயும் தந்தையும் நைஜீரியாவில் வசித்து வந்தனர். அப்போது அவருடைய தந்தை கனடாவில் குடியேறுவதற்காக நோவா ஸ்கோடியாவுக்கு சென்றார்.
அனிதா ஆனந்த் இதுவரையில் பல பதவிகளை வகித்துள்ளார். அவர் முதன்முதலில் 2019-ஆம் ஆண்டில் ஓக்வில்லி நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கு முன்னர் ட்ரஷரி போர்டின் தலைவராகவும், தேசிய பாதுகாப்பு அமைச்சராகவும் பணியாற்றினார். 2020-ஆம் ஆண்டில் கோவிட் 19 தொற்றுநோய் ஏற்பட்ட போது பப்ளிக் சர்வீஸ் & ப்ரக்யூர்மென்ட் அமைச்சராக பணிபுரிந்தார். அப்போது கன்னடியர்களுக்கான தடுப்பூசிகள், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், விரைவாக சோதனைகளை எடுப்பதற்கான செயல்முறைகளுக்கு பெரிதும் பங்களித்தார்.
அதன் பின்னர் தேசிய பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றினார். அப்போது அனிதா ராணுவத்தில் ஏற்படும் பாலியல் குற்றங்களுக்கு தீர்வு காணும் வகையில் பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். அதோடு சேவை செய்யும்போது அனைவரின் நலனுக்காகவும் கன்னேடிய ஆயுதப்படைகளில் கலாச்சார மாற்றத்தையும் அறிமுகப்படுத்தினார். அதோடு உக்ரைனில் ரஷ்யாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை தடுக்கும் பொருட்டு உக்ரேனிய வீரர்களுக்கு பயிற்சி அளிக்க ராணுவ உதவி மற்றும் பணியாளர்களை வழங்கும் முயற்சிகளுக்கு தலைமை தாங்கினார்.
2024-ஆம் ஆண்டில் போக்குவரத்து அமைச்சராக அனிதா நியமிக்கப்பட்டார். அரசியல்வாதியாக மட்டுமின்றி, அறிஞர், வழக்கறிஞர் மற்றும் ஆராய்ச்சியாளராகவும் பணியாற்றியுள்ளார். டொரன்டோ பல்கலைக்கழகத்தில் சட்டப்பேராசிரியராகவும் பணியாற்றியவர் அனிதா ஆனந்த்.
அனிதா ஆனந்தின் கல்வி: அனிதா ஆனந்த் குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் BA பட்டமும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டமும் பெற்றவர். அதன் பின்னர் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் BL பட்டம் பெற்றுள்ளார்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications