பங்களாதேஷ் பொருளாதாரம் 2017 முதல் வலுவான வளர்ச்சியை அடைந்த நிலையில் 2020 இல் தனிநபர் வருமானத்தின் அடிப்படையில் இந்தியாவை முந்தி உலக நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுத்தது.
இந்த நிலையில் பங்களாதேஷ் திடீரென கடந்த மாதம் சர்வதேச நாணய நிதியத்திடம் நிதி உதவி கோரியது. இதன் அடிப்படையில் IMF பங்களாதேஷ் நாட்டிற்குச் சுமார் 4.5 பில்லியன் டாலர் அதாவது சுமார் 37,000 கோடி ரூபாய் அளவிலான மதிப்பிலான தொகையைப் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவி தொகையை அளித்தது.
பங்களாதேஷ் நாட்டில் தற்போது என்ன பிரச்சனை..? 2020 இந்தியாவை ஓரம் கட்டி பலருக்கும் அதிர்ச்சி கொடுத்த பங்களாதேஷ் திடிரென IMF அமைப்பிடம் அவசர நிதியுதவி கேட்க என்ன காரணம்..?
பங்களாதேஷ் அரசியல்
பங்களாதேஷ் நாட்டில் வளர்ந்து வரும் பொருளாதார நெருக்கடியைப் பயன்படுத்திக் கொள்ள எதிர்க்கட்சிகளான பங்களாதேஷ் தேசியவாத கட்சி (BNP), நாடு முழுவதும் பல எதிர்ப்புப் பேராட்டகளைச் செய்து வருகிறது.
பிரதமர் ஷேக் ஹசீனா
இதன் மூலம் பங்களாதேஷ் அரசியலில் 10 வருடத்திற்கும் மேலாக ஆதிக்கம் செலுத்தி வரும் அவாமி லீக் அரசாங்கத்தையும் அதன் தலைவரும் அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா-வை நெருக்கடிக்குத் தள்ளப்பட்டு உள்ளது.
20 வருட வளர்ச்சி
பங்களாதேஷ் கடந்த 20 வருடத்தில் சிறப்பான முறையில் தனது வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தி வரும் காரணத்தால் GDP வளர்ச்சி அளவுகளைத் தொடர்ந்து உலக நாடுகள் வியக்க வைக்கும் அளவிற்குப் பதிவு செய்து வந்தது.
ஜிடிபி வளர்ச்சி
கோவிட் -19 தொற்றுநோயைத் பாதிப்புக் காலத்தில் இந்தியா உட்பட உலகில் பல முன்னணி நாடுகளின் ஜிடிபி வளர்ச்சி அதிகப்படியான சரிவை சந்தித்த நிலையில், 2020 இல் பங்களாதேஷ் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி
2020 இல் பங்களாதேஷ் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.4 சதவீதமாகவும், 2021 இல் 6.9 சதவீதமாகவும், 2022 இல் 7.2 சதவீதமாகவும் வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் உண்மையில் பிரச்சனை வேறு இடத்தில்.
உக்ரைன் -ரஷ்யா போர்
கொரோனா தொற்றுநோய் பாதிப்பில் இருந்து பங்களாதேஷ் நாட்டின் பொருளாதார மீட்சி அடைந்தாலும் உக்ரைன் -ரஷ்யா போரின் காரணத்தால் அந்நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை வேகமாக அதிகரித்துள்ளது, அந்நிய செலாவணி இருப்பு விரைவாகச் சரிந்துள்ளது, பணவீக்கம் அதிகரிப்பு மூலம் மந்தமான வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளது.
அமெரிக்க டாலர் - அந்நிய செலாவணி இருப்பு
இதனால் பங்களாதேஷ் நாட்டின் நாணயமாக டாகா மதிப்பு 2021-ல் அமெரிக்க டாலருக்கு எதிராக 86 டாகா-வாக இருந்தது, ஆனால் தற்போது 105 ஆகச் சரிந்துள்ளது. இது அந்நிய செலாவணி இருப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 46,154 மில்லியன் டாலராக இருந்த நிலையில் தற்போது 33,790 மில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.
IMF நிதியுதவி
இந்த மோசமான நிலையைச் சமாளிக்கத் தான் பங்களாதேஷ் திடீரென சர்வதேச நாணய நிதியத்திடம் கடந்த மாதம் நிதி உதவி கோரியது. IMF அமைப்புப் பங்களாதேஷ் நாட்டிற்கு அளித்த 4.5 பில்லியன் டாலர் நிதியுதவி வாயிலாகத் தான் நாணய சரிவை கட்டுப்படுத்தப்பட்டது.
ஏற்றுமதி
இதேபோல் பங்களாதேஷ் நாட்டின் பொருளாதாரம் அதிகளவில் ஏற்றுமதி வர்த்தகத்தை நம்பி தான் உள்ளது. ரஷ்யா - உக்ரைன் போருக்கு பின்பு உலகளவில் டிமாண்ட் குறைந்த நிலையிலும், டாலர் ஆதிக்கம் அதிகரித்த நிலையிலும், கச்சா எண்ணெய் விலை உயர்ந்த காரணத்தாலும் பங்களாதேஷ் அவசர அவசரமாக IMF-யிடம் கடன் வாங்க வேண்டிய நிலை உருவானது.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications