இந்தியாவில் ஏழையாக கூட வாழ்ந்து விடலாம் ஆனால் மிடில் கிளாஸ் மக்களாக வாழ்வதுதான் மிகவும் கடினம் என புனேவை சேர்ந்த ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனர் வெளியிட்டிருக்கும் பதிவு உண்மையை உரக்க கூறும் வகையில் அமைந்துள்ளது.
சௌரப் மங்கிருல்கர் புனேவை சேர்ந்த ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனர், இவர் தன்னுடைய லிங்குடின் பக்கத்தில் இந்திய மிடில் கிளாஸ் மக்களின் வாழ்க்கை நிலை குறித்து பதிவு செய்துள்ளார். மிடில் கிளாஸ் மக்கள் அரசு உதவி கிடைக்கும் அளவிற்கு ஏழையாகவும் இல்லை, ஜாலியாக இருக்கும் அளவிற்கு பணக்காரர்களாகவும் இல்லை இரண்டுக்கும் நடுவில் மாட்டி தவிக்கின்றனர் என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

இந்தியாவில் மிடில் கிளாஸ் மக்களுக்கு அரசு சார்பாக எந்த ஒரு மருத்துவ பலன்களும் கிடைப்பது கிடையாது, கல்வி ரீதியான உதவிகள் கிடைப்பது கிடையாது, அரசின் மானியங்கள் கிடைப்பது கிடையாது, வாழ்க்கையின் எந்த ஒரு தருணத்திலும் இவர்களுக்கு அரசிடம் இருந்து எந்த ஒரு ஆதரவும் கிடைப்பதில்லை என கூறியுள்ளார். ஒரு மாதத்திற்கு உங்களுடைய சம்பளம் 20 ஆயிரம் ரூபாய் தான் என்றால் நகர்ப் பகுதியில் வாழ்வதற்கு இந்த தொகை போதுமா என்றால் நிச்சயம் கிடையாது என கூறியுள்ளார்.
நகர்ப்புறங்களில் மாதம் 20 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் ஈட்ட கூடிய நபர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தரமான கல்வி, வீட்டில் இருப்பவர்களுக்கு தரமான மருத்துவம் உள்ளிட்டவற்றை வழங்க முடியாமல் போராடுகின்றனர் எனக் கூறியிருக்கிறார். தங்களுக்கு பிடித்த இடத்தில் வீட்டை கூட அவர்களால் வாங்க முடியாது, ஏன் தற்போது இருக்கும் சூழலில் வாடகைக்கு செல்வது கூட முடியாததாகி விட்டது என குறிப்பிட்டு இருக்கிறார்.
மிடில் கிளாஸ் மக்கள் அரசின் பண பலன்கள் கிடைக்கும் அளவுக்கு ஏழைகளும் கிடையாது அல்லது இந்த பணப்பலன்கள் குறித்து கவலை கொள்ள வேண்டிய அவசியமில்லாத பணக்கார வர்க்கமும் கிடையாது என கூறியுள்ளார். அவர்களால் உயர்தரமான மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற முடியாது ,அதே வேளையில் அரசு மருத்துவமனைகளுக்கும் போக வேண்டும் என எண்ண மாட்டார்கள் என கூறியுள்ளார்.
இவர்களுக்கு சிலிண்டருக்கான மானியம் கிடைக்காது ,உணவுப் பொருட்கள் மற்றும் மின்சாரத்திற்கான மானியம் கிடைக்காது. ஆனால் இந்தியாவிலேயே அதிகபட்ச வருமான வரி செலுத்தக் கூடியவர்கள் இவர்கள்தான். அரசு இவர்களுக்கு பதிலுக்கு என்ன தருகிறது ஒன்றுமே கிடையாது என தெரிவித்திருக்கிறார்.
ஒரு சொந்த வீட்டிற்காகவும் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகவும் 15 ஆண்டுகள் வருமானத்தை எடுத்து வைக்க வேண்டிய நிலையில் இருக்கின்றனர் என உண்மையை போட்டுடைத்துள்ளார். ஒருவேளை அவர்களுக்கு திடீரென வேலை போய்விட்டால் முடிந்தது அவர்களுக்கு உதவுவதற்கு யாரும் இருக்க மாட்டார்கள் இந்த அமைப்பும் அவர்களுக்கு உதவுவது கிடையாது என யதார்த்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications