எலக்ட்ரிக் கார் வாங்குவது உண்மையில் வொர்த்-ஆ..? #EV

ஜூன் 1 தேதி மத்திய அரசு எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களுக்கு FAME-II திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானியம் தற்போதுள்ள 40 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. இந்த விதி ஜூன் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்த நிலையில், அனைத்து முன்னணி எலக்ட்ரிக் இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களும் அதன் விலையை பெரிய அளவில் உயர்த்தியுள்ளது.

இதே அறிவிப்பு அடித்த சில மாதங்களில் கார் உட்பட அனைத்து 4 சக்கர வாகனங்களுக்கும் வர அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது. இது மட்டும் கணிப்பு படி நடைமுறைக்கு வந்தால் எலக்ட்ரிக் கார்களின் தற்போதைய விலையை காட்டிலும் அதிகமாகும். எலக்ட்ரிக் கார் வாங்குவது உண்மையில் வொர்த்-ஆ என்பதை IC இன்ஜின் கார்களுடன் ஒப்பிட்டு பார்த்தால் உண்மை தெரியும்.

எலக்ட்ரிக் கார் வாங்குவது உண்மையில் வொர்த்-ஆ..? #EV

எலக்ட்ரிக் கார் நன்மைகள்: எலக்ட்ரிக் கார் வாங்கும் போது ஆட்டோ லோனில் சுமார் 1.5 லட்சம் ரூபாய் வரையிலான தொகைக்கு 80EEB விதியின் கீழ் வரி சலுகை கிடைக்கும், இது பெட்ரோல் கார்களுக்கு இல்லை. எலக்ட்ரிக் கார்களுக்கான மெயின்டனென்ஸ் செலவு ஒரு வருடத்திற்கு 1000 முதல் 2000 ரூபாய் வரையில் மட்டுமே ஆகும். இதுவே பெட்ரோல் காராக இருந்தால் 5000 ரூபாயை தாண்டும்.

எலக்ட்ரிக் கார் பிரச்சனைகள்: எலக்ட்ரிக் கார்களை பொருத்த வரையில் ஒவ்வொரு வருடமும் இன்சூரன்ஸ் தொகை அதிகரிக்கிறது. எலக்ட்ரிக் கார்களின் பேட்டரியை ரிப்பேர் செய்ய முடியாது, மொத்தமாக தான் மாற்ற வேண்டும், அப்படி மாற்ற வேண்டுமாயின் குறைந்தது 4 லட்சம் செலவாகும். சில வருடங்களுக்கு பின் நீங்கள் பழைய எலக்ட்ரிக் கார்-ஐ விற்பனை செய்ய வேண்டுமெனில் வாங்குவதற்கு யாரும் முன்வரமாட்டார்கள் காரணம் பேட்டரியின் தரம் குறைந்திருக்கும்.

எலக்ட்ரிக் கார் சார்ஜிங் நேரம் : எலக்ட்ரிக் கார் வைத்திருக்கும் பட்சத்தில் சார்ஜிங் நேரம் மிகவும் முக்கியமானது. உதாரணமாக 3.2 kw சார்ஜிங் தளத்தில் 10 மணிநேரம் சார்ஜ் செய்ய வேண்டும். இதுவே 7.2 kw என்றால் 4 மணிநேரம், 30 kW என்றால் ஒரு மணிநேரம் போதுமானது. இது சிக்கலான விஷயம் தான் எல்லா நேரத்திலும் நமக்கு சார்ஜிங் செய்ய நேரம் இருக்குமா என்பது பெரும் கேள்வி தான்.

முதலீடும், லாபமும்: இதை ஒப்பிட டாடா நெக்சான் காரின் ஆட்டோமேட்டிங் வேரியன்ட்-ல் பேசிக் மாடலை எடுத்துக்கொள்வோம். இதன் படி டாடா நெக்சான் EV prime கார் விலை (RTO, Insurance சேர்த்து) 15.2 லட்சம் ரூபாய், டாடா நெக்சான் பெட்ரோல் வோரியன்ட் 10.7 லட்சம் ரூபாய்.

எலக்ட்ரிக் கார் வாங்குவது உண்மையில் வொர்த்-ஆ..? #EV

மைலேஜ், ரன்னிங் காஸ்ட் : எலக்ட்ரிக் காரில் ஒரு யூனிட்-க்கு 11 கிலோமீட்டர் மைலேஜ் கிடைக்கும், ஒரு யூனிட் விலை 10 ரூபாய் எனில் ரன்னிங் காஸ்ட் (Running Cost) ஒரு கிலோமீட்டருக்கு 0.91 ரூபாய்.
இதுவே பெட்ரோல் காரில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 16 கிமீ மைலேஜ், ஒரு லிட்டர் பெட்ரோல் 97 ரூபாய், ரன்னிங் காஸ்ட் (Running Cost) ஒரு கிலோமீட்டருக்கு 6 ரூபாய்.

வொர்த்-ஆ: இப்படி எலக்ட்ரிக் காரில் போட்ட பணத்தை முழுமையாக திரும்ப எடுக்க 16.7 லட்சம் கிலோமீட்டர் பயணிக்க வேண்டும். நீங்கள் வருடம் 20000 கிலோமீட்டர் ஒட்டுபவராக இருந்தால் 83.5 வருடம் ஓட்ட வேண்டும். இதுவே பெட்ரோல் காரில் போட்ட பணத்தை முழுமையாக திரும்ப எடுக்க 1.78 லட்சம் கிலோமீட்டர் பயணித்தால் போதும், நீங்கள் வருடம் 20000 கிலோமீட்டர் ஒட்டுபவர் எனில் 8.9 வருடம் ஓட்ட வேண்டும்.

இப்போ நீங்களே கணக்கு போட்டுக்கோங்க. எலக்ட்ரிக் காரின் ஆயுட் காலம் தற்போதைய சந்தை அளவீடுகள் படி 8-10 வருடம், இதுவே பெட்ரோல் கார் எனில் 12-15 வருடம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+