தற்பொழுது ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் நம்மை ஆளத் தொடங்கியுள்ளது. பெரியவர்களை மட்டுமல்லாமல் குழந்தைகளும் அதிகம் AI கருவிகளைப் பயன்படுத்துகின்றனர். ஏனெனில் எந்த கேள்வியாக இருந்தாலும் சரி கேட்ட சில நிமிடங்களுக்குள் AI கருவிகளில் பதில் கிடைத்துவிடும். இந்தக் கருவிகள் உண்மையில் குழந்தைகளுக்கு பாதுகாப்பானதா? என்பது குறித்து தான் இந்தப் பதிவில் பார்க்க உள்ளோம்.
இந்த கேள்வி 12 வயது குழந்தைகளிடையே நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகே எழுந்தது. ஏனெனில் தற்போது பல குழந்தைகளும் தங்களுடைய வேலைகளை முடிப்பதற்கு, ப்ராஜெக்ட்களை செய்வதற்கு என பலவற்றிற்கும் AI கருவிகளைப் பயன்படுத்துகின்றனர். இதனால் அவர்களுடைய வேலை எளிதில் முடிந்து விடுகிறது. மேலும் அதிக நேரம் அவர்களுக்கு கிடைக்கிறது.

அதில் ஒரு மாணவர் கூறுகையில் தான் அனைத்து வேலையையும் செய்வதற்கு 40:40:20 என்ற ஃபார்முலாவை பயன்படுத்துவதாக கூறினார். அதாவது 40 சதவீத வேலையை chat GPT-ஐ பயன்படுத்தி முடிப்பது, மீதமுள்ள 40 சதவீத வேலையை கூகுள் மற்றும் விக்கிபீடியா ஆகியவற்றை பயன்படுத்தி எடுத்துக் கொள்வது, மேலும் உள்ள 20 சதவீதம் மட்டுமே கிரியேட்டிவிட்டி மூலம் வேலைகளை செய்வதற்கு ஒதுக்குவதாக கூறினார்.
இது கேட்பதற்கு புத்திசாலித்தனமாக தோன்றலாம்.. ஆனால் இதிலும் சில சிக்கல்கள் உள்ளன. கிரியேட்டிவ் ஆக வேலை செய்வதற்கு குறைந்த நேரத்தை செலவிடும்போது சிந்தனையும் படைப்பாற்றலும் சிதைந்து விடுமா? என்ற சந்தேகம் எழுகிறது. ஏனெனில் ஒவ்வொரு முறையும் AI மூலம் விபரங்களை எடுக்கும் போது உண்மையில் அதற்கான அர்த்தத்தை தெரிந்து கொண்டு எழுதுகிறார்களா? என்பது கேள்விக்குறியாகிறது.
அதன் பிறகு எழும் மற்றொரு பிரச்சனை என்னவென்றால் தங்களுடைய கண்டென்டுகளுக்கு யார் பொறுப்பு என்பதுதான்? சில ப்ராஜெக்டுகளை தனியாக யோசித்து செய்ய வேண்டி இருக்கும். ஆனால் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தின் மூலம் செய்வதனால், அந்த வேலைக்கு முழு பொறுப்பும் யார் என்பதில் சிக்கல்கள் எழலாம்.
அது மட்டுமின்றி பல்வேறு மாணவர்களும் அதே முறையை பயன்படுத்தினால், அனைவருடைய ப்ராஜெக்ட் அல்லது ஹோம் ஒர்க் என எதுவாக இருந்தாலும் அவை ஒரே மாதிரியாக இருப்பதற்கு வாய்ப்புண்டு. இந்த புதிய பிரச்சினையை எதிர்கொள்ள பள்ளிகள் தங்கள் பாலிசியை மறுபரிசீலனை செய்ய வேண்டும். சில ஐரோப்பிய நாடுகளில் ஏற்கனவே இத்தகைய தொழில்நுட்பங்களை ஒழுங்குபடுத்தும் பணியில் அந்தந்த நாட்டின் அரசு ஈடுபட்டு உள்ளது. மாணவர்கள் அதிகம் AI கருவிகளைப் பயன்படுத்துவதால் எழும் அபாயங்களை கண்டறிந்து அதற்கான வழிகாட்டுதல்களையும் அமைத்துள்ளனர்.
இந்தியா என்பது ஒரு பெரிய நாடு. இங்கு ஒவ்வொரு குழந்தைக்கும் சமமான அளவு டெக்னாலஜியைப் பயன்படுத்தும் வசதி இல்லை. சில குழந்தைகள் அவற்றை பயன்படுத்தினாலும் பலருக்கு அந்த வாய்ப்புகள் கிடைப்பதில்லை. இதன் காரணமாக புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் குழந்தைகள் முன்னிலையில் இருக்கலாம். அவற்றைப் பயன்படுத்தாத குழந்தைகள் பின் வாங்கலாம். எனவே கற்றலை தொழில்நுட்பம் மேம்படுத்துவதை விட கிரியேட்டிவாக சிந்தித்து செயல்படுவதில் தான் உண்மையான திறன் இருக்கும். இது சில காலமாக பல்வேறு நபர்களிடம் எழும் கேள்வியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி AI கருவிகளை பயன்படுத்தி ஒரு விஷயத்தை கேட்கும்போது அது தரும் விவரங்கள் சரியானதா என்பதை யார் தீர்மானிக்க முடியும்? பெற்றோர்களாக.. ஆசிரியர்களா.. என்ற கேள்வியும் எழுதுகிறது. AI கருவிகளால் பல்வேறு நல்ல விஷயங்கள் நடந்திருந்தாலும் குழந்தைகள் அதை பயன்படுத்துவதில் சில சீர்திருத்தங்களை பலரும் எதிர்பார்க்கின்றனர்.
More From GoodReturns

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications