ஏழ்மையான நாடுகளுக்கு கடன் வழங்குவது தொடர்பாக சீனா பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றது. சீனா கடன் கொடுத்த நாடுகள் திருப்பி தர முடியாமல் தத்தளித்து வரும் சூழலில், சர்வதேச பொருளாதாரமும் மேற்கொண்டு அழுத்தத்தினை எதிர்கொண்டு வருகின்றன.
எனினும் சீனா தரப்பில் அந்த கருத்தை நிராகரித்து வருகின்றது. இதன் மூலம் ஒரு நாடு கூட கடன் வலையில் சிக்கவில்லை என்று சீனா கூறுகின்றது.
எனினும் தற்போதைய சூழலில் உலகின் மிகப்பெரிய கடன் வழங்குனராக இருந்து வந்த சீனாவின் சூழல் மாறத் தொடங்கியுள்ளது.
மிகப்பெரிய கடன் வழங்குனர்
குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் சுமார் மூன்று மடங்கு கடன் அதிகரித்துள்ளது. இது கடந்த 2020ம் ஆண்டின் இறுதியில் 170 பில்லியன் டாலரை தொட்டுள்ளது. இது கடந்த 2010ல் 40 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கடன் வழங்கியுள்ளது சீனா.
கடன் ஷார்க்
2022ல் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் மொத்த கடனில் சுமார் 37% சீனாவுடையதாக உள்ளது. இதே மற்ற நாடுகளில் 24% ஆக உள்ளது. அவ்வாறு கடன் வழங்கிய நாடுகளில் பட்டியலில் ஜாம்பியா, லாவோஸ், ஜிபூட்டி, கிர்கிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் தங்கள் ஜிடிபியில் 20% அதிகமான கடனை சீனாவிடம் வாங்கியுள்ளன.
கவனத்தில் கொள்ள வேண்டியது?
சீனாவின் கடன் வலையில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் வளரும் நாடுகளிலேயே, சீனாவின் கடன் கொடுக்கல் என்பது அதிகமிருந்துள்ளது. இது 50% இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் வளரும் நாடுகளுக்கு கொடுக்கும் கடன் விகிதம் பற்றி அதிகாரப்பூர்வ தகவல்களில் இடம் பெறவில்லை எனவும் கூறப்படுகிறது.
எதற்காக கடன்
தற்போது 40க்கும் மேற்பட்ட குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள், தங்களின் மொத்த ஜிடிபியில் 10% மேலான கடனை வைத்துள்ளன. இவ்வாறு சீனா வழங்கிய பெரும்பாலான கடன்கள் பெல்ட் ரோடு திட்டத்தின் கீழ் சாலைகள், ரயில்கள், துறைமுகங்கள், சுரங்கம் மற்றும் எரிசக்தி துறை என பலவும் அடங்கும்.
முக்கிய சொத்துகளை கையகப்படுத்தலா?
சீனா கொடுக்கும் கடனை திரும்ப செலுத்த முடியாத போது, முக்கிய சொத்துகளின் மீதான கட்டுப்பாட்டினை சீனா எடுத்துக் கொள்கின்றது. இந்த குற்றச்சாட்டானது பல வருடங்களாகவே சீனாவின் மீது இருந்து வருகின்றது. இதற்கு சிறந்த உதாரணமே இலஙகையின் ஹம்பந்த்தோட்டாவில் தொடங்கப்பட்ட துறைமுகம் தான்.
துறைமுகத்தில் பங்கு
கடந்த 2017ல் சீனா முதலீடு செய்வதற்கு ஈடாக, துறைமுகத்தில் 70% பங்கினை சீன வணிகர்களுக்கு 90 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட வேண்டும் என்று கோரிய நிலையில், அதனை இலங்கையும் ஒப்புக் கொண்டது. இப்படி சீனாவின் கடன் வலையில் சிக்கிய சில திட்டங்கள் உள்ளன.
கடனை திரும்ப செலுத்துவது கடினமா?
சீனக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கான காலக் கெடு 10 ஆண்டுகளாகும். இதே இது உலக வங்கியில் வாங்கும் போது சுமார் 28 ஆண்டுகள் வரையில் அவகாசம் கிடைக்கிறது. சீனாவிடம் வட்டி விகிதம் 4% ஆக உள்ளது. இதே உலக வங்கியிடம் வாங்கும் கடனுக்கு 2.5% தான் வட்டி விகிதம் உள்ளது. இதே மற்ற நாடுகளை காட்டிலும் சீனாவில் வட்டி அதிகம்.


Click it and Unblock the Notifications