இந்தியாவின் முன்னணி பீட்சா விற்பனை நிறுவனமான டாமினோஸ் இந்தியா தளம் மொத்தமாக ஹேக் செய்யப்பட்டுச் சுமார் 1 மில்லியன் வாடிக்கையாளர்களின் தகவல் திருடப்பட்டு உள்ளது.
குறிப்பாக டாமினோஸ் இந்தியா வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்டு தரவுகள் திருடப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது, ஆனால் டாமினோஸ் இதுவரை இந்தச் செய்தியை உறுதிப்படுத்தவில்லை.
டாமினோஸ் தளத்தில் சைபர் அட்டாக்
இந்தச் சைபர் அட்டாக் குறித்து இஸ்ரேல் சைப்ர்க்ரைம் இண்டலிஜென்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவரான அலான் கேல் கூறுகையில், இந்தச் சைபர் அட்டாக் வாயிலாக ஹேக்கர்கள் கையில்
டிமினோஸ் இந்தியா தளத்தில் இருக்கும் 13 டிபி டேட்டா திருடப்பட்டு உள்ளது.
இந்தத் தகவல் திருட்டில் 250 டாமினோஸ் ஊழியர்களின் தகவல்களும் திருடப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது.
வாடிக்கையாளர் தகவல் திருட்டு
இதேவேளையில் ஹேக்கர்கள் கூறுகையில் டாமினோஸ் தளத்தில் இருக்கும் அனைத்து வாடிக்கையாளர்களின் தகவல்களும் திருடப்பட்டு உள்ளதாகவும், சுமார் 18 கோடி விற்பனைகளின் மொத்த விபரத்தையும், வாடிக்கையாளர்களின் பெயர், தொலைப்பேசி எண், ஈமெயில் ஐடி, டெலிவரி முகவரி, பேமெண்ட் தரவுகளை மொத்தமாத திருடப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
டாமினோஸ் இந்தியா செயலி
இதோடு டாமினோஸ் இந்தியா செயலி மூலம் பீட்சா வாங்கிய வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்டு தரவுகள் மொத்தமாகக் கைப்பற்றியுள்ளதாக ஹேக்கர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியா உட்பட உலக நாடுகளில் இருக்கும் பெரும் நிறுவனங்கள் சமீபத்தில் அதிகளவில் சைபர் ஆட்டாக் எதிர்கொண்டு வருகிறது.
4 கோடி ரூபாய் விலை
மேலும் ஹேக்கர்கள் டாமினோஸ் இந்தியா தளத்தில் திருடப்பட்ட மொத்த தகவல்களையும் ஒரே நபரிடம் விற்பனை செய்யத் திட்டமிட்டு வருகிறது. இந்தத் தகவல்கள் அனைத்தையும் 5,50,000 டாலர் அதாவது 4 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அலான் கேல் தெரிவித்துள்ளார்.
கிரெடிட் கார்ட் தரவுகள்
தற்போது வரை டாமினோஸ் இந்தியா இந்த ஹேக்கிங் குறித்தும் தகவல் திருட்டு குறித்தும் எவ்விதமான தகவல்களையும் வெளியிடவில்லை. ஆனால் இந்தச் சைபர் அட்டாக் குறித்த தகவல் டாமினோஸ் இந்தியா வாடிக்கையாளர்களை சற்று பயமுறுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications