ஐக்கிய அரபு அமீரகம் (UAE) வெளிநாட்டினருக்கு பாதுகாப்பான, வரி இல்லாத புகலிடமாகத் தன்னை தக்க வைத்து கொண்டு வந்த நிலையில் அந்த பிம்பத்தை ஈரான் தாக்குதல் உடைத்திருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. சனிக்கிழமை அன்று ஈரானிய துபாயின் மீது தாக்குதல் நடத்தியது. எதிர்பாராத இந்த தாக்குதலில் ஐந்து நட்சத்திர ஓய்வு விடுதியில் தீ விபத்து ஏற்பட்டதுடன், உலகின் மிக உயரமான கட்டிடத்திற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டது. அபுதாபி விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது, இதில் ஒருவர் கொல்லப்பட்டு ஏழு பேர் காயமடைந்தனர்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரான் ஐக்கிய அரபு அமீரகத்தையும் அதன் அண்டை நாடுகளையும் குறிவைத்துத் தாக்கியது. இது துபாயின் பாதுகாப்பான புகலிடப் பிம்பத்தை அசைத்துள்ளதாக அஜ்மேரா சட்டக் குழும நிறுவனர் பிரஷாந்த் அஜ்மேரா தெரிவித்தார். "எந்த நேரத்திலும் ஐக்கிய அரபு அமீரகத்தை குண்டு வீசித் தாக்கக்கூடிய அளவுக்கு துபாய் ஈரானுக்கு எவ்வளவு அருகில் உள்ளது என்பதை மக்கள் இப்போது உணர்வார்கள்," என்று பிசினஸ் ஸ்டாண்டர்ட்டுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறினார்.

ஐரோப்பிய கவுன்சில் ஆன் ஃபாரின் ரிலேஷன்ஸ் அமைப்பின் பாரசீக வளைகுடா நிபுணர் சின்சியா பியான்கோ 'எக்ஸ்' தளத்தில், "கொந்தளிப்பான பிராந்தியத்தில் பாதுகாப்பான புகலிடமாக இருந்ததே துபாயின் அடையாளம். அதுவே தற்போது உடைபட்டுள்ளது. இதில் இருந்து மீள்வதற்கான வழி இருக்கலாம், ஆனால் பழைய நிலைக்குத் திரும்ப வழி இல்லை," என்று பதிவிட்டுள்ளார்.
அமீரகத்தின் வான் பாதுகாப்பு அமைப்பு உலகின் தலைசிறந்தவற்றுள் ஒன்று என்றும், ட்ரோன்களையும் ஏவுகணைகளையும் தாக்கி வீழ்த்துகிறது என்றும் அதிகாரிகள் குடியிருப்பாளர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் உறுதி அளித்துள்ளனர். சர்வதேச ஒத்துழைப்புத் துறைக்கான இணை அமைச்சர் ரீம் அல் ஹஷிமி CNN-க்கு அளித்த நேர்காணலில், "பொதுவாக இந்தச் சத்தங்களை நாம் கேட்பதில்லை. ஆனால் அவை இடைமறிக்கும் சத்தங்கள். சேதம் ஏற்பட்ட இடங்களில், அது பெரும்பாலும் குப்பைகள்தான்," என்றார்.
இருப்பினும், பலருக்கு துபாயின் மீதான நம்பிக்கை இன்னும் குறையவில்லை. கரண்ட் இன் நிறுவனத்தின் இந்திய வணிகத் தலைவர் அக்ஷத் ஷெராவத், இப்போதைய பதட்டங்கள் அடிப்படைக் கட்டமைப்பைச் சார்ந்தவை அல்ல, தற்காலிகமானவை என்றார். "ஐக்கிய அரபு அமீரகம் அதன் வான் பாதுகாப்பு அமைப்புகள், நெருக்கடிக்கு பதிலளிக்கும் திறன், பாதுகாப்பு ஒருங்கிணைப்பு மூலம் இத்தகைய அதிர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி, இயல்பு நிலையை விரைவாக திரும்ப முடியும் என்பதை ஏற்கனவே நிரூபித்துள்ளது. முக்கிய வணிகப் பகுதிகள் பாதுகாப்பாகவே உள்ளன" என்று தெரிவித்தார்.
முதலீட்டுக்கு உகந்த நாடு என்ற பிம்பம் மாறவே இல்லை, தனிநபர் வருமான வரி இல்லை, உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு, வலுவான வங்கி மற்றும் வர்த்தக மண்டலம் ஆகிய எதுவுமே மாறவில்லை, பாதிக்கப்படவும் இல்லை என்கிறார். "சில மாதங்களுக்கு தான் இந்த பிரச்சினை எல்லாம், ஆனால் நீண்டகால அடிப்படையில் துபாய் முதலீட்டுக்கு உகந்த இடம் என்பதை தக்க வைத்து கொண்டுள்ளது” என்கிறார்.
'டெலிகிராம்' நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாகி கூட 'எக்ஸ்' தளத்தில் "ஏவுகணைகள் பறந்தாலும், புள்ளிவிவரப்படி துபாய் பாதுகாப்பானதுதான்," என்று பதிவிட்டுள்ளார். எண்ணெய் வளமிக்க ஐக்கிய அரபு அமீரகம், சுற்றுலாப் பயணிகள், வணிகர்கள் மற்றும் முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கு, வரி இல்லாத அதே சமயம் ஆடம்பர வாழ்க்கையை வழங்கும் அமைதியான இடமாகத் தன்னை அடையாளப்படுத்தியுள்ளது. இங்கே வசிக்கும் 1.1 கோடி குடியிருப்பாளர்களில் சுமார் 90% வெளிநாட்டினர்; 39 லட்சம் பேர் இந்தியர்கள்.
More From GoodReturns

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

நடுக்கடலில் டோல் பூத் வைத்த ஈரான்.. இதென்னப்பா புது பிரச்சனையா இருக்கு.. உலக நாடுகள் பரிதவிப்பு..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

இந்தியாவில் மீண்டும் லாக்டவுன் வருகிறதா? மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?



Click it and Unblock the Notifications