சென்னை: பெரும்பாலானோர் லோன் பெற்று தங்களுக்கு விருப்பமான வாகனங்களை வாங்குவார்கள். இது போன்று யோசித்துக் கொண்டிருக்கும் நபர்கள், வாகன லோனுக்கான வட்டி விகிதங்களைப் பற்றியும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். பெட்ரோல் டீசல் வாகனங்களுக்கு சமமாக EV வாகனங்களுக்கும் வட்டி விகிதம் இருக்குமா? என்று பலருக்கும் சந்தேகம் வரலாம். இரண்டு சக்கர EV வாகனங்கள் வாங்குவதற்கு பொதுவாக வட்டி விகிதங்கள் அதிகமாக இருக்கும். இந்தப் பதிவில் EV வாங்க லோன் பெற்றால் வட்டி எவ்வளவு இருக்கும் என்பது குறித்து பார்ப்போம்.
பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள்: பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கான கடன்களுக்கு பொதுவாக 9.3 சதவீதம் முதல் 10.3 சதவீதம் வரை வட்டி விகிதங்கள் இருக்கலாம். அதே சமயம் இருசக்கர வாகனமாக இருந்தால் 16 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை வட்டி விகிதம் இருக்கும். இவி கார்கள் மற்றும் SUV-களுக்கு வட்டி விகிதங்கள் 8.5 சதவீதம் முதல் 9.5 சதவீதம் வரை இருக்கும்.

EV இரு-சக்கர வாகனங்களுக்கு 18 சதவீதம் முதல் 22 சதவீதம் வரையும் வட்டி விகிதங்கள் இருக்கும். சுவாரசியமாக, நிதி நிறுவனங்கள் மற்றும் விற்பனையாளர்கள் மின்சார வாகனங்களுக்கான கடன் பொதுவாக பாரம்பரிய பெட்ரோல், டீசல் வாகனங்களை விடக் குறைவாகவே இருக்கும் என்று ஒப்புக்கொண்டுள்ளனர்.
கடந்த ஆண்டில், மின்சார வாகனங்களுக்கான (EV) கடன்களின் வட்டி விகிதங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, EV நான்கு சக்கர வாகனங்களுக்கான வட்டி விகிதங்களை 25 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 8.65 சதவீதம் முதல் 10.15 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது, இது ஒரு வருடத்திற்கு முன்பு 8.4 சதவீதம் முதல் 9.9 சதவீதமாக இருந்தது. ரெப்போ விகிதத்தில் திருத்தம் செய்யப்பட்டதன் காரணமாக இந்த மாற்றம் ஏற்பட்டது. EV இரு சக்கர வாகனங்களுக்கான வட்டி விகிதம் 11 சதவீதமாக உள்ளது. கூடுதலாக, சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்காக EV நான்கு சக்கர வாகனங்களுக்கு 0.2 சதவீத வட்டி தள்ளுபடியையும் வழங்குகிறது.
L&T ஃபைனான்ஸ் நிறுவனம் EV வாகனங்கள் மீதான அதன் விகிதங்களை ஓராண்டில் 1 முதல் 1.5 புள்ளிகளால் உயர்த்தியுள்ளது. தற்போது, வட்டி விகிதம் 8.5 சதவீதம் முதல் 9.5 சதவீதமாக உள்ளது. மேலும் இவி வாகனக் கடனின் வட்டி விகிதங்கள் ஒரு தனி நபரின் கடன் செலுத்தும் திறனை பொருத்தும் மாறுபடும்.
மேற்கூறிய அனைத்து விவரங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இவி எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு அதிக வட்டி விகிதங்கள் வசூலிக்கப்படுவதைத் தெரிந்து கொள்ளலாம். இதற்கான காரணம் என்று பார்த்தால், இது முற்றிலும் புதிய தொழில்நுட்பம் என்பதால் எதிர்காலத்தில் இவற்றின் மதிப்பு எவ்வாறு இருக்கும் என்பதில் தெளிவு இல்லாத காரணத்தினால் கடன் வழங்குபவர்கள், அதிக அபாயம் கருதி அதிக வட்டியை வசூலிக்கின்றனர். எதிர்காலத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தற்போது உள்ளதை விட இன்னும் பிரபலமடைந்து தொழில்நுட்பம் மேம்பட்டு, போட்டிகள் அதிகரித்து பல நிறுவனங்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்க ஆரம்பித்தால், இது போன்ற கடன்களுக்கான வட்டி விகிதங்கள் குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications