அமெரிக்காவில் கைநிறைய சம்பளம் தரும் வங்கி வேலை, ஆடம்பரமான வீடு, பாதுகாப்பான எதிர்காலம், சராசரி இந்திய இளைஞர்களின் அமெரிக்க கனவுகள் இதுதான். ஆனால் இந்த சொகுசு வாழ்க்கையை ஒரு கட்டத்தில் உதறி தள்ளிவிட்டு, வாழ்க்கை என்பது ஓடுவதற்காக அல்ல, வாழ்வதற்காக என அதிரடி முடிவெடுத்திருக்கிறார் ஒரு IIT பட்டதாரி.
வெறும் பயணங்களை மட்டும் நேசிக்காமல், தன் வேர்களை தேடியும், உலக அழகை தன் குடும்பத்தோடு ரசிக்கவும் அவர் எடுத்த அந்த முடிவு, தற்போது இணையதளங்களில் பெரும் பேசு பொருளாகி உள்ளது. தனது பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை விற்றுவிட்டு, பெட்டி படுக்கைகளுடன் உலகை சுற்ற கிளம்பிய அந்த இளைஞரின் மனதை கவரும் கிங் சைஸ் பயண கதையை தெரிந்து கொள்ளலாமா?

உண்மையில் இன்றைய காலத்தில் வெற்றிகரமான வாழ்க்கை என்பது என்ன? பலரிடமும் இதற்கான தெளிவான பதில் இல்லை. பலரும் படிப்புக்கேற்ற நல்ல சம்பளத்தில் நிரந்தரமான ஒரு வேலை. வேலையை விட்டு செல்ல ஒரு வசதியான வீடு, ஒரு கார் இது தான் பலரின் வழக்கமான வெற்றி வாழ்க்கையாக இருக்கிறது. ஆனால் சிலர் ரோலர் கோஸ்டர் போல் ஒரு வட்டத்திற்குள்ளேயே வாழ்க்கை இருக்க கூடாது என நினைக்கிறார்கள். இது குறித்து officialhumansofbombay என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்ட ஒரு சுவாரஸ்ய பதிவை தான் பார்க்க இருக்கிறோம்.
அமெரிக்காவின் முன்னணி வங்கியில், தலைமை பதவியில் இருக்கும் ஒருவர், தனது பணிக்காலத்தில் முக்கிய மைல்கல்லை எட்டியும் உள்ளார். ஆனால் அந்த தருணத்திலும் தனது வாழ்க்கையில் ஒரு வெறுமையை உணர்ந்துள்ளார். நிதி ரீதியாக தான் வெற்றி பெற்றாலும், ஏதோ ஒன்றை இழந்ததாக நினைக்கிறார். ஏதோ ஒரு வெற்றிடம் இருந்து கொண்டே இருப்பதை உணருகிறார்.
கடந்த 2003ல் நான் அமெரிக்காவில் முழுமையான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்த ஒரு முழுமையான ஐஐடி பட்டதாரி. ஃபர்ஸ்ட் ரீபப்ளிக் வங்கியில் இயக்குனராக பணியாற்றினேன். பலரும் கனவும் காணும் அளவுக்கு மிகப்பெரிய அளவில் சம்பளம். ஆனால் உள்ளுக்குள் அந்த 10 ஆண்டுகளும் நான் ஒரு சுழற்சியில் சிக்கிக் கொண்டதாகவே உணர்ந்தேன். வாழ்க்கையில் கலை நயம் மிக்க பக்கங்களை தேட வேண்டும் என்பதை உணர்ந்தேன்.
அப்படி எண்ணத்தில் மத்தியில் தான் 2013ல் யாரும் கனவில் கூட நினைக்காத ஒன்றை செய்தேன். அது என்னுடைய வேலையை விட்டது தான். என் வீட்டையும் விற்றுவிட்டு, ஒரே ஒரு முதுகு பையுடன் உலக பயணத்தை தொடங்கினேன். அடுத்த 18 மாதங்களில் ரஷ்ய மலைகள் முதல் எகிப்தின் பாலைவனங்கள் வரையில் 35 நாடுகளுக்கு தனி ஆளாக பயணித்தேன். அங்கே எனக்கு யாரையும் எனக்கு தெரியாது. ஆனால் நான் யார் என்று முதல் முறையாக தெரிந்து கொண்டேன்.
அப்போதுதான் மான்டேநீக்ரோ வந்தது. அங்குள்ள ஒரு அமைதியான விடுதியில், கென்யாவின் குடிசை பகுதிகளில் தன்னார்வலராக பணியாற்றிய 28 வயது ஆஸ்திரிய சமூக பணியாளர் கேத்தியை சந்தித்தேன். நாங்கள் பேசியது வெறும் 10 நிமிடங்கள் தான், ஆனால் அடுத்த 10 நாட்களும் ஒவ்வொரு வினாடியையும் ஒன்றாகவே கழித்தோம்.
அவர் கிளம்ப வேண்டிய சூழல் வந்தபோது, உணர்ச்சிப்பூர்வமான சிக்கல்களை தவிர்க்க இருவரும் பேசாமல் இருக்க முடிவெடுத்தோம். ஆனால் அது சரியாக இரண்டு நாட்கள் தான் நீடித்தது. அந்த மௌனம் தாங்க முடியாததாக இருந்தது. கேத்தி என்னை மீண்டும் சந்திக்க 13 மணி நேர கடினமான பஸ் பயணத்தை மேற்கொண்டு என்னிடம் வந்து சேர்ந்தார்.
அந்த தருணத்தில் தான் எனக்குப் புரிந்தது. அவரை இந்தியாவிற்கு அழைத்து வந்து என் பெற்றோரிடம் அறிமுகப்படுத்தினேன்; நான் அவரை நேசித்தது போலவே அவர்களுக்கும் அவரை பிடித்துப்போனது. நாங்கள் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்தோம். 2016-ல் திருமணம் செய்து கொண்டோம். கடந்த 12 ஆண்டுகளாக நாங்கள் உலகெங்கும் ஒன்றாக பயணித்து கொண்டிருக்கிறோம்.
இந்த நீண்ட பயணத்தில், மூன்று குழந்தைகளை முழுமையாக பயணத்திலேயே வளர்த்தெடுத்துள்ளோம். அவர்கள் அனைவரும் இயற்கை முறையில் பிறந்தவர்கள்; டயப்பர்கள் அல்லது வழக்கமான ஆங்கில மருந்துகள் இன்றி வளர்க்கப்பட்டவர்கள். அவர்களுக்கு பாடப் புத்தகங்களுடன் சேர்த்து வேதாந்தங்கள் மற்றும் உபநிஷதங்களையும் கொண்டு வீட்டிலேயே கல்வி புகட்டுகிறோம். வாழ்க்கை என்பது 'நீங்கள் என்னவாக ஆகிறீர்கள்' என்பதில் இல்லை, நீங்கள் யாராக இருக்கிறீர்கள் என்பதில் தான் இருக்கிறது என்பதை அவர்களுக்கு கற்று தருகிறோம்.
இந்தியாவில் செய்துள்ள முதலீடுகள் மூலம் வரும் வருமானத்தை கொண்டு எளிய தங்கும் விடுதிகளில் வசிக்கிறோம். பழைய வாழ்க்கையின் பாதுகாப்பான சூழலை நான் இழப்பதாக உணர்கிறேனா என மக்கள் கேட்கிறார்கள். நான் சிரித்து கொள்வேன். நான்கு சுவர்களுக்குள் இருந்த 4 BHK வீட்டை விற்றுவிட்டு, இந்த முழு உலகத்தையும் நான் பெற்றுக் கொண்டேன். நாங்கள் கிங் சைஸ் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என கூறியுள்ளார். உண்மையில் இது எவ்வளவு ஆழமான வார்த்தைகள். இன்றைய நவீன யுகத்தில் இது போன்ற மனிதர்களை பார்ப்பது மிக அரிது. வாழ்க்கையை வாழ வேண்டும் தான். ஆனால் அவர் செய்த முதலீடுகளுக்காகவாது சம்பாதிக்கிறார். தனது ஓய்வுகாலம் வரையில் காத்திருக்காமல் முன் கூட்டியே ஓய்வுபெறும் அளவுக்கு முதலீடு செய்து வைத்துள்ளார். அதிலும் அதிகரித்து வரும் பணவீக்கத்தின் மத்தியில் மிகப்பெரிய கார்ப்பஸ்களை சேர்த்து வைத்தால் மட்டுமே இது சாத்தியம். ஆக அப்படி இருக்கையில் இதுபோன்ற வாழ்க்கை பலருக்கும் கனவு தான் என்றாலும், நம்மால் முடிந்த அளவுக்கு இந்த நவீன யுகத்தில் பணத்திற்காக மட்டும் ஓடாமல், கொஞ்சம் மன நிம்மதிக்காகவும், நினைவுகளுக்காகவும் ஓடுங்களேன். அதில் தவறேதும் இல்லையே..
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?



Click it and Unblock the Notifications