மத்திய அரசிடம் இருந்த ஏர் இந்தியா நிறுவனம் பல மாத தாமதத்திற்குப் பின்பு டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டிற்கு வந்துள்ளது. டாடா குழுமத்தின் நிர்வாகம் ஆரம்பம் முதலே பல முக்கிய மாற்றங்களைச் செய்து விமானப் பயணிகளுக்கு நம்பிக்கை கொடுத்துள்ளது.
இதன் மூலம் ஏர் இந்தியா மீண்டும் அதிகப்படியான வர்த்தகத்தைப் பெற்று மீண்டும் ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய சிஇஓ
இந்நிலையில் ஏர் இந்தியா நிர்வாகக் குழுவில் இன்னும் பழைய நிர்வாக அதிகாரிகளே இருக்கும் நிலையில் டாடா குழுமம் புதிய சிஇஓ-வை நியமிக்கும் பணியில் தீவிரமாக உள்ளது. ஏற்கனவே டாடா குழுமம் ஏர் இந்தியாவுக்கான புதிய சிஇஓ-வை தேர்வு செய்துவிட்டதாகக் கூறப்பட்ட நிலையில் பெயரை வெளியிடாமல் ரகசியமாக வைத்திருந்தது. தற்போது யார் அந்தப் புதிய சிஇஓ என்று தகவல் வெளியாகியுள்ளது.
3 நிறுவனங்கள் பெரிய சவால்
ஏர் இந்தியாவின் சிஇஓ-வாக இருப்பது சாதாரணக் காரியம் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும், பட்ஜெட் விலையில் பயணம் செய்ய வேண்டும் என நினைக்கும் இந்திய மக்கள் மத்தியில் லாபகரமான வர்த்தகத்தைப் பெற வேண்டும். அதேவேளையில் டாடா குழுமத்தில் இருக்கும் ஏர் ஏசியா இந்தியா (விரைவில் ஏர் இந்தியா உடன் இணைய உள்ளது), விஸ்தாரா உடன் இணைந்து பணியாற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது.
வெளிநாட்டு அதிகாரி
இதனால் விமானப் போக்குவரத்துத் துறையில் அதிகப்படியான அனுபவம் வாய்ந்த அதிகாரியால் மட்டுமே ஏர் இந்தியா-வை லாபகரமான நிறுவனமாக மாற்ற முடியும். இந்நிலையில் சந்திரசேகரன் தலைமையிலான டாடா சன்ஸ் ஏற்கனவே வெளிநாட்டவர்-ஐ தான் ஏர் இந்தியாவின் சிஇஓவாக நியமிக்க வேண்டும் என முடிவு செய்துள்ளது.
அலெக்ஸ் குரூஸ்
இந்நிலையில்55 வயதான அலெக்ஸ் குரூஸ் அவர்களைத் தான் ஏர் இந்தியாவின் புதிய சிஇஓவாக நியமிக்க உள்ளதாகத் தெரிகிறது. டாடா குழுமம் இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்புகளை வெளியிடாத நிலையில் யார் இந்த அலெக்ஸ் குரூஸ் என்பதைத் தெரிந்துகொள்ள அனைவருக்கும் ஆர்வம் அதிகமாகியுள்ளது.
பிரிட்டிஷ் ஏர்வேஸ்
55 வயதாகும் அலெக்ஸ் குரூஸ் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் சேர்மன் மற்றும் சிஇஓ -வாகச் சுமார் 5 வருடம் 2020 வரையில் பணியாற்றியுள்ளார். இதற்கு முன்பு ஸ்பெயின் நாட்டின் மலிவு விலை விமானச் சேவை நிறுவனமான Vueling-ல் பணியாற்றி உள்ளார் அலெக்ஸ் குரூஸ்.
13000 ஊழியர்கள் பணிநீக்கம்
கொரோனா தொற்றால் அதிகளவில் வர்த்தகம் பாதிக்கப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் அக்டோபர் 2020ல் சுமார் 13000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது. இக்காலகட்டத்தில் அலெக்ஸ் குரூஸ் தனது தலைமை நிர்வாக அதிகாரி பதவியை ராஜினாமா செய்தார்.
சேர்மன் பதவி
அப்போது அடுத்தத் தலைவர் பதவி ஏற்கும் காலகட்டத்தில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் அவருக்குச் சேர்மன் பதவியைக் கொடுத்தது. தற்போது அலெக்ஸ் குரூஸ் சில முக்கிய நிறுவனங்களில் முதலீட்டாளராகவும், நிர்வாகக் குழு உறுப்பினராகவும், ஆலோசகராகவும் பணியாற்றி வருகிறார்.
நிபுன் அகர்வால்
தற்போது டாடா சன்ஸ் நிறுவனத்தின் உயர் துணைத் தலைவரான நிபுன் அகர்வால் ஏர் இந்தியா நிர்வாகக் குழுவின் தலைவராகவும், ஏர் இந்தியா நிர்வாகத்தை வழி நடத்துபவராகவும் உள்ளார்.
4 ஏர் இந்தியா தலைவர்கள்
மேலும் டாடா சன்ஸ் நிர்வாகம், ஏர் இந்தியா மேனேஜ்மென்ட் கமிட்டியில் இருக்கும் 4 ஏர் இந்தியா தலைவர்கள் தொடர்ந்து பணியாற்ற உள்ளனர். நிதித்துறைத் தலைவர் வினோத் ஹெஜ்மாடி, வர்த்தகப் பிரிவு தலைவர் மீனாட்சி மாலிக், HR பிரிவு தலைவர் அமிர்தா சரண், ஆப்ரேஷன்ஸ் தலைவர் ஆர்எஸ் சந்து ஆகியோர் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.
டாடா குழுமம்
டாடா குழுமம் அலெக்ஸ் குரூஸ் பற்றி இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏர் இந்தியா டாடா குழுமத்தின் கைக்கு வந்த பின்பு டாடா நிர்வாகம் தொடர்ந்து பல முக்கிய மாற்றங்களைச் செய்து வருவதை மக்கள் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications