உலகில் எங்கு திரும்பினாலும் போர், வர்த்தக தடைகள், ரெசிஷன் அச்சம் என பல பிரச்சனைகளை நடந்து கொண்டிருக்க, மறுப்புறம் அணு ஆயுதப் போரின் அபாயம் என்பது இன்றைய உலகில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. அமெரிக்கா - ரஷ்யா மத்தியிலான நியூ ஸ்டார்ட் ஒப்பந்தம் கைவிட்டப்பட்டது முதல் இந்தியா-பாகிஸ்தான், இஸ்ரேல்-ஈரான் வரையில் அனைத்து பிரச்சனைகளும் அணு ஆயுதம் கொண்ட நாடுகள் மத்தியிலேயே நடந்து வருகிறது.
இந்த நிலையில் உலகளவில் ஒரு சிறிய பிரச்சனை கூட அணு ஆயுத மோதலாக வெடிக்கலாம் என்ற அச்சம் அதிகரித்து வருகிறது. ஒரு அணு ஆயுத வெடிப்பு என்பது அப்பகுதியில் மக்கள் உயிரிழப்பு, பொருட்கள் சேதம் என்பதை தாண்டி உலகளாவிய பஞ்சம், காலநிலை மாற்றம் மற்றும் பொருளாதார சரிவு என நீண்ட காலம் மீள முடியாத பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

இந்த நிலையில் உலகளவில் சுமார் 12,000-த்திற்கும் மேற்பட்ட அணு ஆயுதங்கள் உள்ளன, ஆனால் இந்த நவீன நாகரிக உலகை அழிக்க 100 முதல் 300 அணு குண்டுகள் மட்டுமே போதுமானவை என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். இந்த 1200 அணு ஆயுதங்கள் உலகளவில் ஒன்பது நாடுகளிடம் உள்ளன, இதில் ரஷ்யா மற்றும் அமெரிக்கா மட்டுமே 90% ஆயுதங்களை வைத்துள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
ரஷ்யா-விடம் 5,500-க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்களை வைத்துள்ளது, அமெரிக்காவும் இதற்கு நெருக்கமாக உள்ளது. 2025 தொடக்கத்தில், உலகில் மொத்தம் 12,331 அணு ஆயுதங்கள் இருப்பதாக பன்னாட்டு அணு ஆயுத ஒழிப்பு இயக்கம் (ICAN) கணக்கிட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை பயன்படுத்தப்படுவதற்காக இல்லை, மாறாக இதை வைத்து உலக நாடுகள் தனது பலத்தை காட்டவும், சிறிய நாடுகளை பயமுறுத்தவும், உலகளாவில் தனக்கான ஆதிக்கத்தை நிலைநாட்டவும் தான் பயன்படுத்துகிறது.
விஞ்ஞானிகளின் எச்சரிக்கைப்படி, அமெரிக்கா-ரஷ்யா இடையே முழுமையான அணு போர் நடந்தால், கோடிக் கணக்கானோர் உடனடியாக இறப்பதோடு, nuclear winter மற்றும் விவசாய உற்பத்தி பாதிப்பால் 50 லட்சம் மக்கள் பசியால் இறக்க நேரிடும்.
உலகின் முக்கியமான நகரங்களில் 150 அணு குண்டுகள் வெடித்தால், பூமி மீது விழும் 20% சூரிய ஒளி பத்து ஆண்டுகளுக்கு தடைபடும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இதனால் விவசாயம் முற்றிலும் அழிந்து வெப்பநிலை வீழ்ச்சியடையும், இதனால் அணு கதிர்வீச்சை தாண்டி பசியும், பஞ்சமும் மிகப்பெரிய கொலையாளியாக மாறும் அபாயமும் உள்ளது என்பது தான் நிதர்சனமான உண்மை.
கடந்த இரு ஆண்டுகளில் அணு போர் அபாயம் கணிசமாக அதிகரித்துள்ளதற்கு முக்கியமான காரணம் அமெரிக்காவும் ரஷ்யாவும் நீண்டகால அணு ஆயுத கட்டுப்பாட்டு ஒப்பந்தங்களை கைவிட்டு தான். இதோடு உலகில் பல நாடுகள் புதிய வகை அணு ஆயுதங்களை உருவாக்கி, அவற்றை பயன்படுத்தவும் தயாராகி வருகிறது.
அமெரிக்காவும் ரஷ்யாவும் 2010-ல் கையெழுத்தான NEW START ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா பின்வாங்கியுள்ளது. இந்த ஒப்பந்தங்கள் இல்லாததால், அணு ஆயுத அபாயங்களை நிர்வகிப்பது கடினமாகிறது. இதேவேளையில் இந்தியா-பாகிஸ்தான், இஸ்ரேல்-ஈரான் நாடுகள் மத்தியில் வெடிக்க போர் தாக்குதள் இந்த அபாயத்தை அதிகரித்துள்ளன.
ரஷ்யா, அமெரிக்காவை விடுங்க, குட்டி நாடான வட கொரியாவிடமே 50 அணு ஆயுதங்கள் உள்ளது. இந்த உலகை அழிக்க 100 முதல் 300 அணு குண்டுகள் இருந்தாலே போதுமென ஆய்வுகள் கூறுகிறது. அணு ஆயுதங்களில் அளவு முக்கியமல்ல, அவை பயன்படுத்தப்படும் இடமே முக்கியம். அணு ஆயுதங்களை முற்றிலும் ஒழிப்பது மட்டுமே இந்த அபாயத்தை தவிர்க்கும் ஒரே வழி.
ஸ்டார்ட் (Strategic Arms Reduction Treaty) என்பது அமெரிக்காவும் சோவியத் யூனியனும் இடையே அணு ஆயுதங்களைக் குறைக்கவும் கட்டுப்படுத்தவும் உருவாக்கப்பட்ட இருதரப்பு ஒப்பந்தமாகு. இரு நாடுகளும் கடந்த 30 வருடத்தில் 2 முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு உள்ளது.
ஸ்டார்ட் I: ஜூலை 31, 1991 அன்று அமெரிக்காவும் சோவியத் யூனியனும் கையெழுத்திட்டன.
நியூ ஸ்டார்ட்: ஏப்ரல் 8, 2010 அன்று அமெரிக்காவும் ரஷ்யாவும் கையெழுத்திட்டன.


Click it and Unblock the Notifications