வேலை தேடுபவர்களுக்கு குட் நியூஸ்! 50,000 பேரை பணியமர்த்த டெலாய்ட் திட்டம்! AI பயிற்சியுடன் வேலை!

ஒரு பக்கம் பணி நீக்கம், மறுபக்கம் ஏஐ (AI) அச்சம் - ஐடி துறையின் எதிர்காலம் என்னவாகுமோ என்று கவலையில் இருந்த இந்திய இளைஞர்களுக்கு ஒரு நல்ல செய்தியானது வந்துள்ளது. அதுவும் கூகுள், மெட்டா எனப் பல சர்வதேச ஜாம்பவான்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ள இந்த இக்கட்டான சூழலில், டெலாய்ட் (Deloitte) நிறுவனம் அறிவித்துள்ள செய்தி ஒட்டுமொத்த வேலைவாய்ப்பு சந்தையையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

இந்தியாவில் மட்டும் சுமார் 50,000 புதிய பணியாளர்களை வேலையில் அமர்த்த போவதாக டெலாய்ட் அதிரடியாக அறிவித்துள்ளது. இது வெறும் வேலைவாய்ப்பு மட்டுமல்ல, ஏஐ (AI) உங்கள் வேலையை பறிக்கும் என்ற அச்சத்தை போக்கி, அதே ஏஐ தொழில்நுட்பத்தில் உங்களுக்கு பயிற்சி அளித்து உங்களை ஒரு நிபுணராக மாற்றவும் இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

வேலை தேடுபவர்களுக்கு குட் நியூஸ்! 50,000 பேரை பணியமர்த்த டெலாய்ட் திட்டம்! AI பயிற்சியுடன் வேலை!

உண்மையில் பணிநீக்க செய்திகளால் சோர்ந்து போயிருந்தவர்களுக்கு இந்த அறிவிப்பு ஒரு புதிய நம்பிக்கையை தந்துள்ளது. டெலாய்ட் நிறுவனத்தின் இந்த 50,000 பேர் வேலைவாய்ப்பு திட்டம் யாருக்கெல்லாம் பொருந்தும்? ஏஐ பயிற்சியின் மூலம் உங்கள் சம்பளம் எவ்வளவு உயரும்? இந்தியாவின் வேலைவாய்ப்பு சந்தையில் இது ஏற்படுத்தப்போகும் மாற்றம் என்ன? விரிவாகப் பார்ப்போம்.

பல்வேறு நிறுவனங்கள் ஏஐ காரணம் காட்டில் பணி நீக்க நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் இந்த வேளையில், இந்தியாவில் சுமார் 50,000 பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளது டெலாய்ட் நிறுவனம். ஏஐ ஊழியர்களின் பணியை அபகரிக்கும் என்ற எண்ணம் பலரின் மத்தியில் காணப்படுகிறது. ஆனால் டெலாய்ட் நிறுவனத்தை பொறுத்த வரையில், ஏஐ என்பது ஊழியர்களை பணி நீக்கம் செய்வதற்கான கருவி அல்ல. மாறாக அவர்களின் திறனை அதிகரிப்பதற்கான கருவி. இதற்காக 50,000 பணியாளர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு ஏஐ பயிற்சி கொடுக்க திட்டமிட்டுள்ளது.

வழக்கமான இயந்திரத்தனமான வேலைகளை ஏஐ பார்த்துக் கொள்ளும். இதனால் நேரம் மிச்சமாகும். அதேசமயம் ஊழியர்கள் சிக்கலான மற்றும் அதிக மதிப்புடைய ஆலோசனைகளை வழங்க முடியும். இது ஊழியர்களின் வளர்ச்சிக்கும் ஒரு பெரிய உந்துதலாக இருக்கும்.

சர்வதேச அளவில் நிலவி வரும் நிச்சயமற்ற சூழலுக்கு மத்தியில், இந்தியாவில் மட்டும் 50,000 பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. இது இந்தியர்களின் திறமை மீதான நம்பிக்கையை காட்டுகிறது. இந்திய டெக் கட்டமைப்பின் மீது டெலாய்ட் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது.

டெலாய்ட் நிறுவனமானது வெறும் ஆள்சேர்ப்போடு நில்லாமல், தனது ஒட்டுமொத்த பணிச் சூழலையும் டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

உலகளாவிய கண்டுபிடிப்புகள் மற்றும் திறமையாளர்களின் சங்கமமாக இந்தியாவை டெலாய்ட் முன்னிறுத்துகிறது. இதற்காக கற்றல் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது. இது இந்திய இளைஞர்களுக்கு சர்வதேச தரத்திலான வாய்ப்புகளை உள்ளூரிலேயே வழங்குகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+