இந்திய ஐடி துறையின் சாயம் வெளுக்கிறது..? இனி ஒவ்வொரு நாளும் ரிஸ்க் தான் பாஸ்..!!

இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப துறை பற்றி தான் கடந்த ஒரு வாரமாக அனைத்து தரப்பு மக்களாலும் பேசப்பட்டு வருகிறது. இத்துறையின் முன்னணி நிறுவனமாக இருக்கும் டிசிஎஸ் 12000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்த நிலையில் இத்துறையில் பணியாற்றும் சுமார் 60 லட்சம் பேரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது மட்டும் அல்லாமல் பீதியில் உள்ளனர்.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 10% பங்களிக்கும் ஐடி துறை நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 25%, சேவைத்துறை ஏற்றுமதியில் 40% பங்கு வகிக்கிறது. இருப்பினும், சமீப காலங்களில் இந்த துறையை சூழ்ந்துள்ள சவால்கள் பல கேள்விகளை எழுப்பியுள்ளது மட்டும் அல்லாமல் ஐடி சேவை துறையின் வீழ்ச்சியின் ஆரம்பம் தான் இந்த 12000 ஊழியர்கள் பணிநீக்கமாக என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்திய ஐடி துறையின் சாயம் வெளுக்கிறது..? இனி ஒவ்வொரு நாளும் ரிஸ்க் தான் பாஸ்..!!

டாப் நிறுவனங்கள் கொடுத்த ஷாக்:
இந்தியாவின் பெரிய ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், விப்ரோ மற்றும் இன்போசிஸ் ஆகியவை சமீபத்தில் பணிநீக்கம் மற்றும் புதிய பணியாளர் தேர்வு நிறுத்தம் பற்றிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. டிசிஎஸ் 12,000 பேரை பணிநீக்கம் செய்வது மட்டும் அல்லாமல் புதிய பணியாளர் தேர்வை நிறுத்தியுள்ளது.

விப்ரோ இரண்டு ஆண்டுகளில் அதன் சந்தை மதிப்பில் மூன்றில் ஒரு பங்கு இழந்து தனது பணியாளர் அமைப்பை மறுசீரமைத்துள்ளது.

மேலும் இன்போசிஸ் புதிய பணியாளர் சேர்க்கையை தள்ளிவைத்து, புதிய ஒப்பந்தங்களை பெறுவதில் 30% குறைத்துள்ளது.

வருவாய் இழப்பு:
இந்த டாப் ஐடி நிறுவனங்களின் முதல் காலாண்டு வருவாய் வளர்ச்சி விகிதங்கள் மிகவும் குறைவாக உள்ளன. டிசிஎஸ் 1.3% உயர்வு, இன்போசிஸ் 3.8% உயர்வு, விப்ரோ 2.3% சரிவு, டெக் மஹிந்திரா 2.1% உயர்வு, மற்றும் ஹெச்சிஎல் 1% சரிவை பதிவு செய்துள்ளது. இந்த சூழல்நிலையில் ஐடி நிறுவனங்களின் லாபம் மற்றும் லாப மார்ஜின்களும் குறைய முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

இந்திய ஐடி துறையின் சாயம் வெளுக்கிறது..? இனி ஒவ்வொரு நாளும் ரிஸ்க் தான் பாஸ்..!!

AI ஆதிக்கும், வர்த்தக மாற்றங்கள்:
இந்திய ஐடி துறையின் மிகப்பெரிய சவால்களில் ஒன்று AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சி. McKinsey அறிக்கையின்படி, அடுத்த பத்தாண்டுகளில் 45-60% பழைய ஐடி சேவைகள் ஆட்டோமேஷன் செயல்முறைகளால் பாதிக்கப்படலாம் என கணித்துள்ளது.

இதற்கு முக்கியமான காரணம் AI பயன்படுத்துவதால் ஒரு மூத்த சாப்ட்வேர் இன்ஜினியரின் பணியை வேகமாகவும் குறைந்த செலவில் செய்ய முடியும். இதேபோல் 10 ஜூனியர் ஊழியர்கள் செய்யும் வேலையை சில நொடிகளில் செய்து முடிக்க கூடிய திறனை ஏஐ கொண்டுள்ளது. இதனால் இந்திய ஐடி சேவை நிறுவனங்களுக்கு ப்ராஜெக்ட்களை கொடுத்தும் நிறுவனங்களும் குறைந்த செலவில் AI சேவைக்கு தான் முக்கியதுவம் அளிப்பார்கள். இதனால், பல நிறுவனங்கள் தங்கள் பணியாளர் அமைப்பை மறுசீரமைக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளன.

ஆனால் இந்திய ஐடி நிறுவனங்கள் AI போட்டியில் முன்னிலையில் இல்லை என்பது தான் சோகமான விஷயம். ஏனெனில் டிசிஎஸ், விப்ரோ, இன்போசிஸ் காலம் காலமாக ப்ராடெக்ட் சேவையில் கவனம் செலுத்தாமல் ஊழியர்கள் அளவு சார்ந்த வணிக மாடல்களில் செயல்பட்டு வந்தன.

இந்தியாவின் மாபெரும் டெக் சேவை நிறுவனங்கள் அனைத்தும் சொந்தமாக டெக் ப்ராடெக்ட்-களை உருவாக்காமல், மற்ற நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப சேவைகளை வழங்குவதற்கும், கன்சல்டிங் சேவை அளிப்பதற்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டு வந்தது, இந்த ஏஐ காலக்கட்டத்தில் பெரும் பிரச்சனையாக வெடித்துள்ளது.

இந்திய ஐடி துறையின் சாயம் வெளுக்கிறது..? இனி ஒவ்வொரு நாளும் ரிஸ்க் தான் பாஸ்..!!

உலகளாவிய போட்டி:
இந்திய ஐடி துறையின் மற்றொரு சவாலாக உலகளாவிய போட்டி உள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டு நிறுவனங்கள் தற்போது அதிகப்படியான BPO ஒப்பந்தங்களை கைப்பற்றி வருகிறது, வியட்நாம் மற்றும் கிழக்கு ஐரோப்பா புதிய சாப்ட்வேர் டெவலப்மென்ட் திறன்களை உருவாக்கி வருகின்றன.

வர்த்தக பாதிப்பு:
ஐரோப்பிய சந்தையில் புதிய வர்த்தகம் பெறுவது கடினமாகி வருகிறது, கடந்த 2-3 ஆண்டுகளில் இச்சந்தையில் மந்த நிலையில் உள்ளது. அமெரிக்காவில் H-1B விசா நிராகரிப்புகள் அதிகரித்துள்ளன. இதனால், இந்திய ஐடி நிறுவனங்கள் தங்கள் செலவுகளை குறைக்க அமெரிக்காவில் உள்ளூர் பணியாளர்களை நியமிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இது லாப மார்ஜின்களை பாதிக்கும் காரணியாக உள்ளது.

இந்திய ஐடி துறையின் சாயம் வெளுக்கிறது..? இனி ஒவ்வொரு நாளும் ரிஸ்க் தான் பாஸ்..!!

ஐடி துறையின் சரிவு பாதையின் துவக்க புள்ளி:
1990 மற்றும் 2000 களில், அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் பொறியாளர்களை 10 மடங்கு குறைவான செலவில் பணியமர்த்த முடிந்தது, இதனால் அதிகப்படியான லாபத்தை பெற்று வந்தது. இதனாலேயே இந்திய ஐடி நிறுவனங்கள் அதிக ஊழியர்களை நியமித்து வர்த்தகம் செய்யும் மாடலை கையில் எடுத்தது. ஆனால் இப்போது இந்த மாடல் செட் ஆகவில்லை.

புதிய தொழில்நுட்பங்களில் பயிற்சி அளிப்பதில் குறைவான கவனம் செலுத்தப்பட்டதால், இந்திய நிறுவனங்கள் AI துறையில் போட்டிப்போட முடியாமல் மாட்டிக்கொண்டுள்ளது. இதேபோல் ஐடி சேவை துறையின் ஊழியர்கள் அடிப்படையிலான மாடலை மாற்றியாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது.

இதை மாற்றும் பட்சத்தில் கடந்த 30 வருடமாக ஐடி துறையில் உருவாக்கப்பட்ட அதிகப்படியான வேலைவாய்ப்புகள் சூழ்நிலை இனி இருக்காது. இதனால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்குவதில் துவங்கி, பணிநீக்கம், சம்பள குறைப்பு வரையில் பல விதமான பாதிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐடி நிறுவனங்கள் தங்களுடைய வருமானத்தை வேகமாக இழந்து வரும் வேளையில் லாப மார்ஜின்-ஐ நிலை நிறுத்த வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. லாப மார்ஜின்-க்காக எத்தகைய முடிவையும் எடுக்கலாம். இதை தான் ஐடி துறையின் சரிவு பாதையின் துவக்க புள்ளியாக பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+