டெல்லி: இந்திய மற்றும் அமெரிக்க வாழ்க்கை தரம் குறித்து சமூக வலைத்தளங்களில் பெரிய விவாதமே எழுந்துள்ளது. காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரமும் இதில் பங்கேற்று இந்திய ரியல் எஸ்டேட்டை கடுமையாக சாடியுள்ளார். Gurjot Ahluwalia என்ற நபர் எக்ஸ் பக்கத்தில் 25 கோடி ரூபாய் இருப்பவர்கள் இந்தியாவில் வீடு வாங்கலாமா அல்லது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வீடு வாங்கலாமா என்பது குறித்த ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். 25 கோடி ரூபாய் அமெரிக்க டாலர் மதிப்பில் 3 மில்லியன் டாலர்கள் இந்த தொகை வைத்திருக்கும் ஒரு நபர் இந்தியாவில் இருந்தால் என்ன செய்யலாம்? அமெரிக்காவில் இருந்தால் என்ன செய்யலாம் என்பது குறித்து அதில் விவரித்துள்ளார்.
25 கோடி ரூபாய் இருந்தால் நீங்கள் குர்குவானில் இருப்பீர்களா அல்லது நியூயார்க்கில் இருப்பீர்களா? குர்குவானில் 4 படுக்கையறை கொண்ட வீடா அல்லது நியூயார்க்கில் அடுக்குமாடி குடியிருப்பா (penthouse) ? குர்குவானின் கோஃல்ப் கோர்ஸ் சாலையா அல்லது மேன்ஹேட்டன் பகுதியா?, சைபர் சிட்டியா? அல்லது டைம்ஸ் சதுக்கமா ? என பதிவிட்டுள்ளார். இத்துடன் இந்தியா மற்றும் அமெரிக்க ரியல் எஸ்டேட் தொடர்பாக புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

அவருடைய இந்த பதிவு ஆயிரக்கணக்கானவர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இதன்படி 25 கோடி ரூபாய் இருப்பவர்கள் டெல்லி அருகே உள்ள குர்குவான் பகுதியில் ஒரு ஆடம்பரமான கேட்டட் கம்யூனிட்டியில் நான்கு படுக்கையறை கொண்ட குடியிருப்பினை வாங்க முடியும். ஆனால் அதுவே நியூயார்க்கில் பால்கனியில் இருந்து பார்த்தால் நதிக்கரை தெரியும் அளவிற்கு ஒரு அழகிய வீட்டை வாங்கலாம் என கூறியுள்ளார். இந்தியாவில் ரியல் எஸ்டேட் மிகப் பெரிய முறைகேடாக மாறிவிட்டது எனக் கூறியுள்ளார்.
இவருடைய இந்த பதிவுக்கு பலரும் பின்னூட்டங்களை பதிவிட்டுள்ளனர். ரியல் எஸ்டேட் விலைகளை வேண்டுமென்றே உயர்த்தி பல நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதாக சிலர் கூறியுள்ளனர். காங்கிரஸை சேர்ந்த மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மோசமான உள் கட்டமைப்பு கொண்ட ஆனால் அதிக விலை மதிப்பு கொண்டு ரியல் எஸ்டேட் சந்தை இந்தியாவில்தான் இருக்கிறது என விமர்சனம் செய்துள்ளார்.
மற்றொரு பயனாளரோ கருப்பு பணம் வைத்திருப்பவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு ஸ்கேம் தான் இந்தியாவின் ரியல் எஸ்டேட் என தெரிவித்துள்ளார். ஒரு பயனர் ஒரு மில்லியன் டாலர்கள் இருந்தாலே போதும் நீங்கள் அமெரிக்காவில் ஒரு வீட்டினை வாங்கி ராஜ வாழ்க்கை வாழ முடியும், இந்தியாவில் வீடு விற்பனை என்ற பெயரில் பகல் கொள்ளை நடக்கிறது என தெரிவித்துள்ளார்.
Written by: Devika
More From GoodReturns

எல்பிஜி தட்டுப்பாட்டை சரி செய்ய அமெரிக்காவை நாடும் இந்தியா..!! நிலைமை எப்போது சீராகும்?

ரியல் எஸ்டேட்டில் பணத்தை கொட்டிய Dhurandhar நாயகன் மாதவன்.. சும்மாயில்ல பாஸ் ரூ.125 கோடி சொத்து மதிப்பு..!

சிலிண்டர் பிரச்சனைக்கு தீர்வு: அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்தடைந்தது மிகப்பெரிய எல்பிஜி கப்பல்!!

ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவாரா பிரதமர் மோடி? ரம்ஜான் நாளில் தொடங்கிய முக்கிய பேச்சுவார்த்தை..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!



Click it and Unblock the Notifications