உலகிலேயே கால்பந்துக்கு அடுத்தபடியாக அதிக ரசிகர்கள் கொண்ட இரண்டாவது பெரிய விளையாட்டு கிரிக்கெட் தான். அதற்கு முக்கிய காரணம் இந்தியா என சொல்லலாம். ஏனென்றால், இங்கு ரசிகர்கள் கிரிக்கெட்டை ஒரு விளையாட்டாக மட்டும் பார்க்கவில்லை. இந்தியாவில் கிரிக்கெட் ஒரு மதம் (Religion) எனவும் கூறுவார்கள். அதனால் தான் கிரிக்கெட் இந்தியாவின் பணக்கார விளையாட்டாக உள்ளது. குறிப்பாக ஐபிஎல் தொடர்.
நாம் அனைவரும் இந்த ஐபிஎல் (IPL) தொடரை கண்டுகளித்து வருகிறோம். பிடித்த அணிக்கு நம்மளுடைய ஆதரவை தெரிவிக்கிறோம். ஆனால், இந்த ஐபிஎல்-க்கு பின்னால் எவ்வளவு பணம் புரளுகிறது என்பதை பற்றி என்றைக்காவது சித்தித்து இருக்கிறோமா? இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) என சொல்லக்கூடிய ஐபிஎல் தொடரை பிசிசிஐ, அதாவது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தான் நடத்தி வருகிறது. வருடா வருடம் நடக்கக்கூடிய இந்த ஐபிஎல் தொடரின் மதிப்பு கிட்டத்தட்ட 10 மில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பின்படி 83 ஆயிரம் கோடி ரூபாய்.

டைட்டில் ஸ்பான்சர், கோ - பிரசெண்டிங், அசோசியேட் ஸ்பான்சர்ஷிப், தொலைக்காட்சி மற்றும் ஓடிடியில் ஒளிபரப்பும் உரிமம், டிக்கெட் விற்பனை இப்படி ஐபிஎல்லில் அனைத்துமே பணம்தான். இதில் பொதுவான ஸ்பான்சர்களை 40 சதவீதம் பிசிசிஐயும், மீதமுள்ள 60 சதவீதம் ஐபிஎல் அணிகளும் பிரித்துக் கொள்ளும்.
இந்த ஸ்பான்சர்ஷிப் என்பது இரண்டு வகைகளாக உள்ளது. ஒன்று ஐபிஎல் தொடருக்காக செய்யப்படும் ஸ்பான்சர்ஷிப், மற்றொன்று ஐபிஎல் அணிகளுக்கான ஸ்பான்சர்ஷிப். அந்தவகையில் இந்த ஸ்பான்சர்ஷிப்பானது ( Common Sponsorship) பொதுவான ஒன்று. உதாரணத்திற்கு டைட்டில் ஸ்பான்சர்ஷிப், ஒளிபரப்பு உரிமம், ஸ்டேடர்ஜிக் டைம் அவுட் போன்ற பொதுவான ஸ்பான்சர்ஷிப் அனைத்துமே பிசிசிஐ மற்றும் ஐபிஎல் அணிகள் பிரித்துக் கொள்ளும்.
ஐபிஎல் அணிகளுக்கான ஸ்பான்சர்ஷிப்: ஒவ்வொரு அணிகளுக்கும் தனித்தனியாக ஸ்பான்சர்ஷிப் இருப்பர். அந்த ஸ்பான்சர்ஷிப் யார் என்பதை அவர்களது ஜெர்சியில் இருக்கும் நிறுவனங்களின் பெயர் மூலமாக நாம் அதனை அறிந்து கொள்ளலாம். இதன் மூலம் ஒவ்வொரு அணியும் கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் வரை லாபம் ஈட்டுகிறது.
ஒவ்வொரு ஐபிஎல் அணிகளும் அவரவருடைய அங்கிகரிக்கப்பட்ட ஜெர்சி, அவர்களது லோகோ பயன்படுத்தப்பட்ட வாட்ச், மொபைல் பேக் கேஸ் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்வதன் மூலமும் பணம் சம்பாதித்து வருகிறது. மேலும், இந்த ஐபிஎல் அணிகளுடைய மெர்செண்டைஸ் ப்ராடக்ட்ஸ் மட்டும் சுமார் ரூ.200 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.
அந்தவகையில் IPL 2025 சீசன் மார்ச் 21 முதல் மே 25 வரை நடைபெற உள்ளது. இதற்காக ரிலையன்ஸ் நுகர்வோர் தயாரிப்புகளின் நிறுவனமான காம்பா, கிட்டத்தட்ட ₹200 கோடி மதிப்புள்ள ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது. காம்பா கோலாவுடன் இணைந்து, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு விளையாட்டு பானங்களான ஸ்பின்னர் மற்றும் ராஸ்கிக் குளுக்கோ எனர்ஜியையும் இந்த ஐபிஎல் சீசனில் ரிலையன்ஸ் நிறுவனம் விளம்பரப்படுத்த உள்ளது.
இன்னும் சில நாட்களில் கோடைக்காலம் தொடங்கவுள்ள நிலையில், காம்பா கோலா விளம்பரத்திற்கு ஆர்வம் அதிகரித்துள்ளது, ஐபிஎல் 2025க்கான தொலைக்காட்சி மற்றும் ஓடிடி தளங்களில் இருந்து மொத்த விளம்பர வருவாய் ரூ.4,500 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஐபிஎல் சீசனில், இந்த உரிமைகள் கோகோ கோலாவின் தம்ஸ் அப் நிறுவனத்திடம் ரூ.200 கோடிக்கு இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
மறுபுறம், கோகோ கோலா சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உடனான தனது கூட்டணி தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், கடந்த டிசம்பரில் ஜூபிலண்ட் ஃபுட்வொர்க்ஸ் கோகோ கோலாவின் இணை நிறுவனமான ஹிந்துஸ்தான் கோகோ கோலா பானங்கள், (HCCB) இல் 40% பங்கை கையகப்படுத்தியதைத் தொடர்ந்து, டோமினோஸுடன் தனது கூட்டணி வைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது



Click it and Unblock the Notifications