ஆதார் கார்டு இந்தியாவில் வசிக்கும் குடிமக்களுக்கு முக்கியமான ஆவணமாக உள்ளது. பல்வேறு சேவைகளுக்கு அடையாள மற்றும் முகவரி சான்றாக செயல்படுகிறது. அரசாங்க சேவைகள் மற்றும் வங்கி சேவைகள் என அனைத்திற்கும் ஆதார் கார்டு தேவைப்படுகிறது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆதார் கார்டை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க பரிந்துரைக்கிறது. இதனால் என்ன பயன் என்பது குறித்து விரிவாக இந்தப் பதிவில் பார்ப்போம்.
உங்கள் ஆதார் கார்டை புதுப்பிப்பது ஏன் முக்கியம்?: ஆதார் கார்டில் உங்கள் முகவரி, பெயர் மற்றும் மொபைல் நம்பர் போன்ற தனிப்பட்ட விவரங்களில் சில நேரம் மாற்றம் ஏற்படலாம்.
பல காரணங்களுக்காக இந்த விவரங்களை உங்கள் ஆதார் கார்டில் புதுப்பித்து வைத்திருப்பது அவசியம்.

முதலாவதாக, எந்தவொரு இடையூறும் இல்லாமல் நீங்கள் தொடர்ந்து அரசாங்க சலுகைகள் மற்றும் சேவைகளைப் பெறுவதற்கு இது முக்கியம். இரண்டாவதாக, புதுப்பிக்கப்பட்ட ஆதார் கார்டை வைத்திருப்பது திருட்டு மற்றும் மோசடி அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. இறுதியாக, உங்கள் ஆதார் கார்டைத் தொடர்ந்து புதுப்பித்துக்கொள்வது, வங்கிக் கணக்கைத் திறப்பது அல்லது கடனுக்கு விண்ணப்பிப்பது போன்ற நிதி பரிவர்த்தனைகளில் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்க உதவும்.
ஆன்லைனில் ஆதார் அட்டையில் உள்ள முகவரியை எப்படி புதுப்பிப்பது?:
ஸ்டெப் 1: முதலில் UIDAI இணையதளத்திற்க்குள் ( https://myaadhaar.uidai.gov.in/ ) செல்ல வேண்டும்.
ஸ்டெப் 2: ஆதார் நம்பருடன் பதிவு செய்யப்பட்ட, மொபைல் நம்பரை என்டர் செய்து, 'Send OTP' என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டெப் 3: தற்போது உங்கள் மொபைல் நம்பருக்கு ஒரு OTP அனுப்பப்படும். அந்த OTP-யை என்டர் செய்து Login என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டெப் 4: இப்பொழுது UIDAI தளத்தில் ஒரு புதிய பக்கம் திறக்கப்படும். அதன் கீழே Scroll செய்து "Address Update" என்பதை க்ளிக் செய்ய வேண்டும். அந்த பக்கத்தில் "Update Aadhaar Online" என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டெப் 5: அதன்பின் அங்கு புதிய பக்கம் ஒன்று தோன்றும். அதில் உள்ள தகவல்களை நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும். பின்பு "Process to Update Aadhaar" என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 6: இப்போது எந்தெந்த தகவல்களை மாற்ற வேண்டுமோ அதைத் தேர்ந்தெடுத்து திருத்திக் கொள்ளலாம். அதன்பின் Address என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுத்த பிறகு, தற்போதைய முகவரி திரையில் தோன்றும். பின்னர் மாற்றம் செய்ய விரும்பும் புதிய முகவரி விவரங்களை அதன் கீழ் தோன்றும் Details to be Updated என்ற பிரிவில் என்டர் செய்ய வேண்டும்.
என்னதான் அட்ரஸ் விவரங்களை ஆன்லைனில் மாற்றிக் கொண்டாலும்.. சில விவரங்களை ஆன்லைனில் மாற்ற இயலாது. அதற்கு உங்களுடைய கருவிழி மற்றும் கைரேகை பயோமெட்ரிக் விபரங்கள் தேவைப்படலாம். இதில் உங்களுடைய ஜெண்டர், பிறந்த தேதி, பெயர் மற்றும் மொபைல் நம்பர் ஆகியவற்றை மாற்ற கண்டிப்பாக அருகில் இருக்கும் ஆதார் பதிவு மையங்களுக்கு தான் செல்ல வேண்டும்.
அடையாளத் திருட்டு மற்றும் மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்காகத்தான் இந்த விவரங்களை மாற்றுவதற்கு அருகில் உள்ள ஆதார் பதிவு மையங்களுக்கு செல்ல வேண்டும் என்று கூறப்படுகிறது.
10 வருடங்களுக்குப் பிறகு கண்டிப்பாக ஆதார் விவரங்களை புதுப்பிக்க வேண்டுமா?: பத்து ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் ஆதார் கார்டை புதுப்பிக்க வேண்டியது கட்டாயம் இல்லை என்றாலும் உங்களுடைய விவரங்கள் துல்லியமாக இருப்பதற்காக இந்த அப்டேட்-ஐ செய்யும்படி UIDAI பரிந்துரைக்கிறது.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!



Click it and Unblock the Notifications