கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வீட்டுமனை வாங்குவது என்பது பலருக்கும் நீண்டகால விருப்பமாக உள்ளது. அங்கு பொறியியலாளராக பணியாற்றி வரும் இளைஞர், சொத்துக்களில் முதலீடு செய்வது சரியா..? தவறா..? என்ற குழப்பத்துடன் இருக்கிறார். இவர் தற்போது, Personal Finance India என்ற ரெட்டிட் குழுவை நாடியுள்ளார். இவருக்கு 25 வயது ஆகும் நிலையில், பெங்களூருவில் தனது தாயுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவர், தனது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பெங்களூருவில் ஒரு அபார்ட்மெண்ட் வாங்க முடிவு செய்திருக்கிறார்.
தற்போதைய அவரின் நிதி நிலையைப் பார்க்கும் போது, ரூ.15 லட்சம் மியூச்சுவல் ஃபண்ட்களிலும், ரூ.3.5 லட்சம் ஃபிக்ஸ்ட் டெப்பாசிட்டிலும், ரூ.5.5 லட்சம் கம்பெனியின் RSU-களிலும் (Restricted Stock Units), மற்றும் ரூ.4 லட்சம் ப்ராவிடெண்ட் ஃபண்டுகளிலும் சேமிப்பு வைத்துள்ளார். மேலும், இவரது பெற்றோர்களின் ரூ.15 லட்சம் உதவித் தொகையை சேர்த்தால், மொத்தமாக அவரிடம் ரூ.35 லட்சம் இருக்கும்.

அவர் கூற்றுப்படி, ஒரு அபார்ட்மெண்ட் வாங்குவதில் பல நன்மைகள் இருப்பதாக கூறியுள்ளார். எதிர்காலத்தில் திருமணம் செய்து கொள்ளும்போது, சொத்துக்களை வைத்திருப்பது அவரது வாய்ப்புகளை மேலும் மேம்படுத்தக் கூடும் என்று நினைக்கிறார். அவரது சமூகத்தில் திருமணத்திற்கு தகுந்த பெண்கள் குறைவாகவும், போட்டி அதிகமாகவும் இருக்கிறது. எனவே, பெங்களூருவில் ஒரு வீடு வைத்திருந்தால், எதிர்காலத்தில் ஒரு வலுவான சொத்தாக அது பார்க்கப்படும்.
மேலும், அவருக்கு தலைமுறை செல்வங்கள் இல்லை என்பதால், அவர் பணியில் இருந்து ஓய்வு பெறும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது. நீண்ட காலம் பணியாற்றுவதை இவர் இயல்பாகவே எடுத்துக் கொள்கிறார். மேலும், சொந்த வீடு வைத்திருப்பதற்கு அவர் அதிக மதிப்பளிக்கிறார். சொந்த வீட்டில் வாழ்வது என்பது ஓய்வும், பெருமையும், மனநிறைவும் கொண்டதாக கருதுகிறார்.
ஆனால், தற்போது அவர் வீடு வாங்குவதில் முக்கிய பிரச்சனையும் உள்ளது. அவர், செமிகண்டக்டர் துறையில் பணியாற்றுவதால், வேலை வாய்ப்புகள் பெரும்பாலும் அவுடர் ரிங் ரோடு பகுதியிலேயே உள்ளன. ஆனால், அவரின் ரூ.35 லட்சம் பட்ஜெட்டில் வீடு கிடைக்கும் இடங்கள் எல்லாம் கனகபுரா ரோடு அல்லது மைசூர் ரோடு போன்ற இடங்களாகவே இருக்கின்றன. இதனால், வீட்டிற்கும் அலுவலகத்திற்கும் தினமும் அவர் 2 மணி நேரம் பயணம் செய்ய வேண்டியிருக்கும்.
ஒரு வேளை அவர் வேறு நிறுவனத்தில் வேலை பெற்று சென்றாலும் கூட, அது கூட ORR வழியிலேயே இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே, வேலைக்கும் வீட்டிற்கும் இடையேயான தூரம், சொந்த வீடு வாங்குவதை ஒரு தவறான தீர்வாக மாற்றக்கூடும். அவர் தினமும் இரண்டு மணி நேரம் பயணிக்க வேண்டும் என்பதால், அலுவலகத்திற்கு அருகிலேயே வேறு ஒரு வாடகை வீடு எடுக்க வேண்டியிருக்கும். இது அவர் முதலீட்டுப் பணத்தின் பலனை முற்றிலுமாக தவிர்க்கச் செய்துவிடும்.
இந்நிலையில், இவரின் கேள்விக்கு சமூக வலைதளங்களில் பலரும் பல கருத்துகளை தெரிவித்துள்ளனர். சிலர், திருமணத்திற்கு பிறகு வீடு வாங்குவது நல்லது என பரிந்துரைத்துள்ளனர். ஏனென்றால், வாழ்க்கை முறையின் விருப்பங்கள் பல சமயங்களில் மாறிவிடும் என்று தெரிவித்துள்ளனர். இருப்பினும், பலர் அவரை முதலீடு செய்து மேலும் செல்வம் சேர்க்க ஊக்குவித்துள்ளனர். ஏனெனில், இத்தகைய பெரிய நிதிசார்ந்து முடிவெடுப்பதற்கு முன் உறுதியான அடித்தளம் வேண்டும் என்று கூறியுள்ளனர். நகர்புறங்களில் வீடு வாங்குவது என்பது இனி பணம் குறித்ததாக இருக்காது. அது உணர்வுகள், இடத்தேர்வு, நீண்டகால மற்றும் எதிர்கால வாழ்க்கையை தீர்மானிப்பதாக இருக்கும்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications