இந்தியாவில் புகழ்பெற்ற கண் கண்ணாடி விற்பனை நிறுவனமாக லென்ஸ்கார்ட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. லென்ஸ் கார்ட் நிறுவனம் வெள்ளிக்கிழமை என்று தன்னுடைய ஐபிஓவை வெளியிடுகிறது.
இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கக் கூடிய ஒரு ஐபிஓவாக இருக்கிறது என்பதை மறுப்பதற்கு இல்லை . ஆனால் இந்த ஐபிஓ வெளியீடு தான் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் கிண்டல் செய்யப்படும் ஒரு விஷயமாக மாறி இருக்கிறது. பொதுவாக நிறுவனங்கள் ஐபிஓ வெளியீடு செய்யும்போது தங்கள் நிறுவன பங்கிற்கு ஒரு குறைந்தபட்ச விலை மற்றும் ஒரு அதிகபட்ச விலை என அறிவிக்கும். விண்ணப்பம் செய்யக்கூடிய நபர்கள் அந்த குறைந்தபட்ச விலைக்கு பங்கினை கோரலாம் அல்லது அதிகபட்ச விலைக்கு கோரலாம்.

லென்ஸ்கார்ட் நிறுவன ஐபிஓ விண்ணப்பங்கள் அக்டோபர் 31இல் தொடங்கி நவம்பர் 4இல் முடிகிறது. ஒரு பங்கி குறைந்தபட்ச விலை 382 ரூபாயாகவும் அதிகபட்ச விலையாக 402 ரூபாயாகவும் முடிவு செய்திருக்கிறது. சில்லறை முதலீட்டாளர்கள் ஒரு லாட்டிற்கு விண்ணப்பம் செய்ய 14,134 ரூபாய் செலுத்த வேண்டும் 37 பங்குகள் அவர்களுக்கு கிடைக்கும் .
மொத்தமாக 7278 கோடி ரூபாய்க்கு லென்ஸ்கார்ட் நிறுவனம் இந்த ஐபிஓ வெளியீட்டின் மூலம் நிதி திரட்டுகிறது. 2008 ஆம் ஆண்டு பியூஷ் பன்சாலால் தொடங்கப்பட்டது தான் லென்ஸ் கார்ட் நிறுவனம். தற்போது இந்தியாவில் மட்டுமில்லாமல் ம் ஜப்பான் ,தென்கிழக்காசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும் இந்த நிறுவனம் தன்னுடைய கடைகளை நிறுவி இருக்கிறது.
இந்த ஐபிஓ மூலம் நிறுவனம் புதிதாகவும் பங்குகளை வெளியிடுகிறது தங்கள் வசம் இருக்க கூடிய பங்குகளை பிரமோட்டர்கள் விற்பனை செய்கிறார்கள். தங்களுடைய நிறுவன மதிப்பீடாக போட்டி நிறுவனங்களை விட மிக உயர்ந்த மதிப்பீட்டை லென்ஸ்கார்ட் கோருவது தான் சமூக வலைதளங்களில் அதிக கிண்டலுக்கு ஆளாகி இருக்கிறது. அதாவது நிறுவனத்தின் அதிகபட்ச பங்கு விலையின் படி பார்த்தால் பட்டியலிடும் போது அதன் மொத்த சந்தை மூலதன மதிப்பு என்பது 70 ,000 கோடி ரூபாய் அல்லது 7.946 பில்லியன் டாலர்களாக இருக்கும். இந்தியாவின் ஒட்டு மொத்த கண் கண்ணாடி சந்தை மதிப்பே இவ்வளவு இல்லையே என நெட்டிசன்கள் கூறுகின்றனர்.
சமூக வலைதளங்களில் இதுதான் தற்போது மிகப்பெரிய அளவில் டிரால் செய்யப்படும் ஒரு விஷயமாக இருக்கிறது. இவ்வளவு அதிக மதிப்பீட்டை அறிவிப்பது குறித்து பலரும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். ஒரு பயனர் நீங்கள் கண்ணாடிகளை தானே விற்பனை செய்கிறீர்கள் வைரத்தை விற்பனை செய்யவில்லையே என கேள்வி எழுப்பி இருக்கிறார்.
ஒரு நபர் உங்கள் நிறுவனம் 50 சதவீத தள்ளுபடியில் மதிப்பிடப்பட்டாலும் அது கூட உங்களுக்கு பொருத்தமான விலையாக இருக்காது என கூறியிருக்கிறார் . ஆதித்யா என்பவர் டாடா நிறுவனம் டைட்டன் கண்ணாடிகள் வணிகத்தை பிரித்து பின்னர் லென்ஸ் கார்ட்டில் இருந்து ஒருவரை நிறுவனத்தை நடத்த பணியமர்த்தலாம் என கிண்டலாக பதிவு செய்திருக்கிறார். மற்றொரு நபர் இந்தியாவில் ஒட்டுமொத்த கண் கண்ணாடி சந்தை மதிப்பே 6 பில்லியன் டாலர்கள் தான் அடுத்ததாக லென்ஸ் சந்தை 2.85 பில்லியன் டாலர்கள்தான் ஆனால் லென்ஸ்கார்ட் ஐபிஓ 8 பில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்டது என விமர்சித்துள்ளார்.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!



Click it and Unblock the Notifications