இந்திய ரூபாய் நோட்டுகளில் இருப்பது மகாத்மா காந்தியின் உண்மையான புகைப்படமா? சுவாரஸ்ய பின்னணி…!!

இந்திய ரூபாய் நோட்டுகளின் அடையாளமாக இருப்பது அதில் இடம்பெற்றுள்ள மகாத்மா காந்தியின் படம் தான். இந்திய ரூபாய் நோட்டில் மகாத்மா காந்தியின் படம் மட்டும் ஏன் இடம்பெறுகிறது, எப்போது முதல் இது நடைமுறைக்கு வந்தது என்பன உள்ளிட்ட சுவாரஸ்ய தகவல்களை பார்க்கலாம்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும் கூட, சில மாதங்களுக்கு பிரிட்டிஷ் மன்னர் ஆறாம் ஜார்ஜ் உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்கள் மற்றும் நோட்டுகளையே இந்தியா பயன்படுத்தியது. சுதந்திர இந்தியாவின் புதிய அடையாளத்தை வெளிப்படுத்த ரூபாய் நோட்டுகளை மாற்றலாம் என்ற கோரிக்கை எழுந்தது. அப்போது பிரிட்டிஷ் மன்னரின் படத்திற்கு பதிலாக தேசப்பிதா மகாத்மா காந்தியின் படத்தை பயன்படுத்தலாம் என்ற யோசனை முன்வைக்கப்பட்டது. இதற்காக சில மாதிரி நோட்டுகளும் தயாரிக்கப்பட்டன.

இந்திய ரூபாய் நோட்டுகளில் இருப்பது மகாத்மா காந்தியின்  உண்மையான புகைப்படமா? சுவாரஸ்ய பின்னணி…!!

ஆனால், இறுதி ஆலோசனையின் போது மகாத்மா காந்தியின் உருவத்திற்கு பதிலாக, சாரநாத்தில் உள்ள அசோக ஸ்தூபியின் சிம்ம முத்திரையை போடலாம் என முடிவெடுக்கப்பட்டது. இதனை அடுத்து 1949இல் வெளிவந்த புதிய 1 ரூபாய் நோட்டில் மன்னருக்கு பதிலாக அசோக ஸ்தூபி இடம்பெற்றது. இதனால் காந்தியின் உருவம் அப்போது தற்காலிகமாக தவிர்க்கப்பட்டது.

அதன் பின், 1950-களில் தொடங்கி இந்திய நாணயங்களில் புலி, மான் போன்ற வனவிலங்குகள், வேளாண்மை மற்றும் தேயிலை இலை பறிக்கும் காட்சிகள், இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை குறிக்கும் வகையில் ஆரியபட்டா செயற்கைக்கோள், இயந்திரமயமாக்கப்பட்ட விவசாயம் மற்றும் கோணார் சூரியக் கோயில் சக்கரம் உள்ளிட்டவை இடம்பெற்றது.

1969ஆம் ஆண்டு தான் மகாத்மா காந்தியின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவம் முதன்முதலில் சிறப்பு நோட்டுகள் வெளியிடப்பட்டன. இதில் சேவாகிராம் ஆசிரமத்தின் பின்புலத்துடன் காந்தியின் படம் பொறிக்கப்பட்டிருந்தது. ஆனால் இது வழக்கமான புழக்கத்தில் உள்ள அனைத்து நோட்டுகளுக்கும் நிரந்தரமாக்கப்படவில்லை. 1987ஆம் ஆண்டு புதிதாக 500 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்பட்ட போது, அதில் மகாத்மா காந்தியின் உருவம் இடம்பெற்றது இருந்தாலும் வாட்டர் மார்க்காக அசோக ஸ்தூபியே தொடர்ந்தது.

Also Read

பின்னர் 1990-களில் கள்ளநோட்டு புழக்கத்தை தடுக்கும் வகையிலான பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அப்போது நாட்டின் ஒட்டுமொத்த நற்பெயரையும் மதிப்புகளையும் பிரதிபலிக்கும் மிக பொருத்தமான முகமாக மகாத்மா காந்தி கருதப்பட்டார்.

இதனையடுத்து 1996-ஆம் ஆண்டு முதல் ரிசர்வ் வங்கி மகாத்மா காந்தி முகம் இடம்பெற்ற ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தியது. அப்போது முதல் இன்று வரை காந்தியின் உருவம் இந்திய நாணயங்களில் தவிர்க்க முடியாத முகமாக நிலைபெற்றுவிட்டது.

Recommended For You

இது உண்மையில் மகாத்மா காந்தியின் படம் தானா இல்லை வரையப்பட்ட ஓவியமா என பலருக்கும் சந்தேகம் உண்டு. இது உண்மையான புகைப்படம் தான். காந்தியின் இந்த படம், 1946-ஆம் ஆண்டு டெல்லியில் பிரிட்டிஷ் அரசியல்வாதியான லொர்டு பெத்திக்-லாரன்ஸ் உடன் காந்தி நின்றுகொண்டிருந்த புகைப்படத்திலிருந்து வெட்டி எடுக்கப்பட்டதாகும். அந்த படத்தை எடுத்தவர் யார் என்ற விவரம் இன்றுவரை அறியப்படவில்லை. இந்த படமும் கூட மிரர் இமேஜ் முறையில் தான் வைக்கப்பட்டுள்ளது, காந்தி புன்னகையுடன் இருந்த படம் என்பதால் இந்த படத்தை தேர்வு செய்துள்ளனர். ஆனால் யார் இந்த படத்தை எடுத்தது, யார் இந்த படத்தை இறுதி செய்தது என்பன உள்ளிட்ட விவரங்கள் தெரியவரவில்லை.

இந்திய ரூபாய் நோட்டுகளில் இரவீந்திரநாத் தாகூர்,டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் மற்றும் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் போன்ற பல மாபெரும் தலைவர்களின் படங்களை அச்சிட வேண்டும், இந்து கடவுள்களின் புகைப்படங்களை அச்சிட வேண்டும் என்ற கோரிக்கைகளும் விவாதங்களும் அவ்வப்போது எழுந்து வந்தாலும், ரிசர்வ் வங்கியும் அரசும் தேசத்தின் ஒட்டுமொத்த அடையாளத்தின் குறியீடாக காந்தியின் படம் இருப்பது தான் பொருத்தம் என கூறி அவரது படத்தையே பயன்படுத்தி வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+