உலகின் மிகப்பெரிய டெக்னாலஜி நிறுவனம் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யச் சத்ய நாடெல்லா தலைமையில் சிறிதும், பெரிதுமாகப் பல டெக் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனங்களைக் கைப்பற்றிய நிலையில், தற்போது புதிதாக ஹோட்டல் நிறுவனத்தில் முதலீடு செய்யத் திட்டமிட்டு வருகிறது.
ஆம், சத்ய நாடெல்லா தலைமையிலான மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்தியாவின் முன்னணி ஆன்லைன் ஹோட்டல் புக்கிங் சேவை தளமான OYO நிறுவனத்தில் முதலீடு செய்யப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்
இந்தியாவில் பல முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடத் திட்டமிட்டு வருகிறது. ஏற்கனவே சோமேட்டோ ஐபிஓ வெளியிட்டுள்ள நிலையில், அடுத்துப் பேடிஎம் ஐபிஓ-விற்குத் தயாராகி வருகிறது.
OYO நிறுவனம்
பேடிஎம் நிறுவனத்தைப் போலவே இந்தியாவின் முன்னணி ஆன்லைன் ஹோட்டல் புக்கிங் சேவை தளமான OYO நிறுவனமும் கடுமையான வர்த்தக நெருக்கடி, நிதிப் பற்றாக்குறை இருக்கும் நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அழைப்பு பெரும் நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.
கொரோனா
கொரோனா காலத்தில் OYO நிறுவனத்தின் வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது, குறிப்பாகப் பெரு நகரங்களில், சுற்றுலா நகரங்களில் கொரோனா காரணமாக வர்த்தகம் இல்லாமல் அதிகளவிலான வர்த்தகம் மற்றும் வருவாய் பாதிப்பை எதிர்கொண்டது.
நிதி நெருக்கடி
இதுமட்டும் அல்லாமல் இந்த நிதி நெருக்கடியைச் சமாளிக்கும் வகையில் பல ஊழியர்களைப் பணி நீக்கம் செய்தது, பல அலுவலகத்தை மூடியது. பல பிரிவுகளில் இருக்கும் ஊழியர்களுக்கு நிரந்தரமாக வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டது. பல பகுதிகளில் வர்த்தகத்தை மூடியது. இப்படிக் கொரோனா காலத்தில் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது OYO.
மைக்ரோசாப்ட் நிறுவனம்
OYO நிறுவனத்தில் சத்ய நாடெல்லா தலைமையிலான மைக்ரோசாப்ட் நிறுவனம் முதலீடு செய்யப் பேச்சுவார்த்தை துவங்கியுள்ளது. மைக்ரோசாப்ட் எப்போது முதலீடு செய்யும், எவ்வளவு முதலீடு செய்யும் என்பது இதுவரை தெரியவில்லை. மேலும் மைக்ரோசாப்ட் நிறுவனம் இதுவரையில் எவ்விதமான அறிவிப்பும் இதுகுறித்து வெளியிடவில்லை.
OYO நிறுவன முதலீட்டாளர்கள்
OYO நிறுவனம் தற்போது சாப்ட்பேங்க், ஏர்பிஎன்பி, சீன டாக்ஸி நிறுவனமான Didi, கிராப் ஆகிய முன்னணி நிறுவனங்களின் முதலீட்டில் இயங்கி வருகிறது. மேலும் OYO நிறுவனம் தற்போது இந்தியா மட்டும் அல்லாமல் தென்கிழக்கு ஆசியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா ஆகிய பகுதிகளில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வருகிறது.
லாபம்
OYO நிறுவனம் சரிவில் இருக்கும் காரணத்தாலும், உலகின் பல பகுதிகளில் விரிவாக்கம் செய்து வரும் நிலையிலும் மொத்தமாகக் கைப்பற்றினால் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்குப் பெரிய லாபமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. சரி, மைக்ரோசாப்ட் OYO நிறுவனத்தில் முதலீடு செய்வது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications