மூன்லைட்டிங்.. இது ஏமாற்று வேலையா.. பரபர ஆய்வு முடிவு!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சமீபத்திய மாதங்களாகவே மூன்லைட்டிங் என்பது ஐடி துறையில் பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது. ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை உன்னிப்பாக கவனிக்க தொடங்கியுள்ளன.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு மூன்லைட்டிங்கினை காரணம் காட்டி விப்ரோ நிறுவனம், 300 பேரை பணி நீக்கம் செய்துள்ளது.

இதற்கிடையில் இது குறித்து BT நடத்திய ஆய்வொன்றில், இந்தியாவின் மூன்லைட்டிங் குறித்து எப்படி பார்க்கப்படுகின்றது. இதற்கு இந்திய நிறுவனங்கள் ஆதரவளிக்கின்றனவா? இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

மூன் லைட்டிங் என்றால் என்ன.. இது சரியானதா.. டெக் மகேந்திரா அருமையான விளக்கம்! மூன் லைட்டிங் என்றால் என்ன.. இது சரியானதா.. டெக் மகேந்திரா அருமையான விளக்கம்!

மூன்லைட்டிங் -கிற்கு தடை

மூன்லைட்டிங் -கிற்கு தடை

மூன்லைட்டிங் குறித்த ஆய்வில் பெரும்பாலான நிறுவனங்கள் இதற்கு எதிராகவே உள்ளன. இதில் ட்விட்டர் 51.7% மும், லிங்கிட் இன் 47%மும், டெலிகிராம் - 73%மும், இன்ஸ்டாகிராமில் 51%மும் பங்களித்துள்ளன. ஆனால் இதில் யூடியூப்-பில் பெரும்பாலான பார்வைகள் கொண்டுள்ளனர். அதில் 49% நிறுவனங்கள் மூன்லைட்டிங்-கினை தடை செய்துள்ளனர்.

இது எப்படி சரியான விஷயமாக இருக்கும்

இது எப்படி சரியான விஷயமாக இருக்கும்

யூடியூப் பயனர்களில் ஒருவர் மக்களுக்கு மூன்லைட்டிங்கின் அர்த்தம் புரியவில்லை. இது ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளை செய்வது மட்டும் அல்ல. வாடிக்கையாளர்களை நிறுவனத்திலிருந்து விலக்கி, போட்டி நிறுவனங்களுக்கு லாபகரமான சலுகைகளை வழங்குதல் ஆகும். இது எப்படி சரியான விஷயமாக இருக்கும் என்ற கேள்வியினையும் எழுப்பியுள்ளார்.

ஸ்விக்கி ஆதரவு

ஸ்விக்கி ஆதரவு

கடந்த ஆகஸ்ட் மாதம் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி தனது ஊழியர்களுக்கு மூன்லைட்டிங்கிற்கு ஆதரவு கொடுத்தது. அவர்கள் நிறுவனத்தில் பணி புரிந்த நேரம்போக, மீதமுள்ள நேரத்தில் மற்றொரு நிறுவனத்தின் பணிபுரிய அனுமதி கொடுத்தது.

வெரி சிம்பிள் லாஜிக்

வெரி சிம்பிள் லாஜிக்

சமீபத்தில் விப்ரோவின் தலைவர் ரிஷாத் பிரேம்ஜி, ஊழியர்கள் நிறுவனத்திற்கு உண்மையாக இருக்க வேண்டும். இல்லையெனில் இங்கிருந்து செல்ல வேண்டும். இது வெரி சிம்பிள் லாஜிக் என தனது ட்விட்டர் பக்கத்தில் வெளிப்படையாக கூறியிருந்தார். இது ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியினை ஏற்படுத்தியிருந்தது. இதனால் தற்போது துறையில் பரவலாக இப்பிரச்சனையானது பேசப்பட்டு வருகின்றது.

இது ஏமாற்று வேலையா?

இது ஏமாற்று வேலையா?

இது ஐடி ஊழியர்கள் மத்தியில் மட்டும் அல்ல, பொதுமக்கள் மத்தியிலும் பல்வேறு விதமான கருத்துகளை தூண்டியுள்ளது.

இதற்கிடையில் BT ஆய்வு முடிவில் மூன்லைட்டிங் என்பது ஏமாற்றுவதா என்ற கேள்விக்கு, பெரும்பாலானவர்கள் இல்லை என்ற கருத்தினையே கூறியுள்ளனர். பெரும்பாலானவர்கள் இது எங்களின் ஓய்வு நேரத்தில் செய்யப்படுவது. இது எங்கள் விருப்பம் என்றும் கருத்து கணிப்பில் கூறியுள்ளனர். (ட்விட்டர் 44%, லிங்க்ட் இன் - 49%, யூடியூப் - 56%)

இன்ஸ்டாகிராம் பயனர்கள்

இன்ஸ்டாகிராம் பயனர்கள்

எனினும் இஸ்டாகிராம் பயனர்கள் பல தரப்பட்ட கருத்தினை கொண்டுள்ளனர். அவர்களில் 36% பேர் நிறுவனங்களுடனான ஒப்பந்தத்தினை பொறுத்து என்று கூறியுள்ளனர். 29% பேர் மட்டுமே தங்களது ஓய்வு நேரத்திலும் பகுதி நேரத்திலும் வேலை செய்வது அவர்களின் விருப்பம் என தெரிவித்துள்ளனர்.

அதெல்லாம் சரி, உங்களின் கருத்து என்ன? நீங்கள் என்ன சொல்கிறீர்கள் மூன்லைடிங் குறித்து? கமாண்ட் பாக்ஸில் உங்கள் கருத்தினை பதிவிடுங்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Is Moonlighting a cheating? What does the poll say?

Moonlighting is not a cheating job, it is done in our spare time. Many respondents to the poll also said it was our choice.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X