முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் லிமிடெட் (RPCL), மிக வேகமாக நுகரும் நுகர்வோர் பொருட்களை விற்பனை செய்யும் ஒரு நிறுவனமாகும். இது பர்சனல் கேர் மற்றும் அழகு சாதன பொருட்கள், வீட்டுக்கு தேவையான பொருட்கள் என பலவற்றையும் நாடு முழுவதும் விற்பனை செய்து வருகின்றது.
இது தொடர்ந்து பல்வேறு பிராண்டுகளை அறிமுகம் செய்து வருகின்றது. பல பிராண்டுகளை கையகப்படுத்தி வருகின்றது. குறிப்பாக சமீபத்தில் உணவு மற்றும் பானங்களை அறிமுகப்படுத்தியது.
தொடர்ந்து விரிவாக்கம்
இப்படி தொடர்ந்து பல்வேறு புதிய புதிய பாதையில் வணிகத்தினை விரிவாக்கம் செய்து வரும் ரிலையன்ஸ் தொடர்ந்து நுகர்வோர் வணிகத்தில் வளர்ச்சி பாதைக்கு சென்று கொண்டுள்ளது.
சொல்லப்போனால் சுமார் 5 லட்சம் கோடி மதிப்பிலான எஃப்.எம்.சி.ஜி பொருட்களை சந்தையில் விற்பனை செய்து வருகின்றது.
மில்லியன் கணக்கில் வாடிக்கையாளார்கள்
இது தொடர்ந்து தனது சில்லறை விற்பனையகங்களை விரிவாக்கம் செய்து வரும் நிலையில், ,மில்லியன்கணக்கான கிரானா ஸ்டோர்களையும் தனது நெட்வொர்க்கில் கொண்டுள்ளது. இதன் நெட்வொர்க்கில் பல்வேறு பொருட்களையும் கொண்டுள்ளது.
மொத்ததில் மற்ற நுகர்வோர் நிறுவனங்களுக்கு பெரும் போட்டியாளாராக வளர்ந்து நிற்கும் ரிலையன்ஸ், ஒரு நேரடி போட்டியாளராக களமிறங்கியுள்ளது.
ஹிந்துஸ்தான் யூனிலீவர்
அது ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனம் தான். இந்த எஃப்.எம்.சி.ஜி நிறுவனம், தற்போது பர்சனல் கேர், அழகு சாதன பொருட்கள், சோப்புகள், டிஸ்வாஷர்கள் என பல பொருட்களை விற்பனை செய்து வருகின்றது. குறிப்பாக ஹிந்துஸ்தான் நிறுவனத்தின் லக்ஸ், டவ், பியர்ஸ் மற்றும் லைஃபாய் என பல சோப்புகளை விற்பனை செய்து வருகின்றது. இதே டிஸ்வாஷரில் விம் உடன் விற்பனை செய்து வருகின்றது.
ரிலையன்ஸும் அறிமுகம்
மறுபுறம் ரிலையன்ஸ் மூன்று பிராண்டுகளுடன் வலம் வந்து கொண்டுள்ளது. இதில் பியூட்டி பிரிவில் சோப் பார் க்ளிம்மர், ஹெர்பல் பொருளான கெட் ரியல், பியூரிக் என மூன்றும் அடங்கும். இது ஹெச்.யு.எல் போலவே டோஸோ மற்றும் பார்களுடன் டிஸ்வாஷர்களும் உள்ளது. இது தவிர வீடுகளில் தரை தளம், பாத்ரூம், என பல இடங்களிலும் பயன்படுத்தும் லிக்விட்களை அறிமுகம் செய்துள்ளது.
இது தான் இலக்கு
வரும் மாதங்களில் இதன் விற்பனையை தொடர்ந்து அதிகரிகக் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு குடும்பமும் நியாயமான முறையில் இதுபோன்ற பொருட்களை பெறுவதே எங்களின் இலக்கு. வீடு மற்றும் தனி நபர் பயன்படுத்தும் பொருட்கள் என பலவற்றையும் தரமானவையாக வழங்குவது சிறந்ததொரு வாய்ப்பினை நிறுவனத்திற்கு வழங்கும்.
நம்பிக்கை பெற முடியுமா?
எனினும் ஏற்கனவே சந்தையில் சிறந்த பங்கினை வைத்துள்ள ஹெச்.யு.எல் போன்ற நிறுவனங்களின் நம்பிக்கையை போல அவ்வளவு எளிதில் பெற முடியாது. இது அவ்வளவு எளிதான ஒரு விஷயமும் அல்ல.
இதில் ஹெச்.யு,எல் மட்டும் அல்ல, பி & ஜி, ரெக்கிட், கோத்ரேஜ் உள்ளிட்ட பிராண்டுகளும் ரிலையன்ஸுக்கு கடும் போட்டியாளராக இருக்கலாம். அவை கிரானாக்களில் நல்ல வலுவானதொரு சந்தையினை கொண்டுள்ளன. ஆக ரிலையன்ஸுக்கு நிச்சயம் போட்டி இருக்கும் என்றும் சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications