ஓய்வூதியத்திற்காக சேமிக்க வேண்டும் என்று எண்ணும் பலர் NPS திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். நேஷனல் பென்ஷன் ஸ்கீம் என்று சொல்லப்படும் இந்தத் திட்டம் IT ஊழியர்களிடையே பிரபலமான ஓய்வூதியத் திட்டமாக இருந்து வருகிறது. நீண்ட கால சேமிப்பு, வரி விலக்குகள், கூட்டு வட்டியின் மூலம் கிடைக்கும் வருமானம் என NPS திட்டத்தில் பல நன்மைகள் கிடைக்கிறது. ஆனால் என்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு முன்பு இந்த திட்டத்தின் விதிமுறைகள் குறித்தும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பணிபுரிந்து கொண்டிருப்பவர்கள், ஓய்வுக்கு பிறகு யாரையும் சார்ந்திருக்காமல் வாழ்வதற்கு பணியில் இருக்கும் போதே சேமிக்க வேண்டும். IT ஊழியர்கள் தங்கள் ஓய்வு காலத்திற்காக திட்டமிடாவிட்டால் பிற்காலத்தில் ஏற்படும் பிரச்சனையை சமாளிக்க வழியின்றி விழி பிதுங்க வேண்டிய நிலை ஏற்படலாம். பெரும்பாலான சம்பளம் வாங்கும் நபர்களுக்கு ஊழியர் வருங்கால வைப்பு நிதி நன்மை வழங்கினாலும், என்பிஎஸ் திட்டத்தின் கூடுதல் சேமிப்பின் மூலம் இன்னும் அதிகமாக பலனடைய முடியும்.

NPS திட்டம் சந்தையுடன் இணைக்கப்பட்ட ஒரு சேமிப்பு திட்டமாகும். கார்ப்பரேட் பத்திரங்கள், அரசாங்க பத்திரங்கள் போன்ற பல வகையான சொத்துக்களின் கீழ் உங்கள் பணத்தை முதலீடு செய்ய முடியும். இதனால் நீண்ட காலத்திற்கு அதிக வருமானம் பெறலாம். நீங்கள் இளமையாக இருந்து, அதிக ரிஸ்க் எடுக்கும் திறன் கொண்டிருந்தால் என்பிஎஸ் மூலம் அதிக வருமானம் பெற முடியும்.
NPS திட்டத்தின் வரிச் சலுகைகள்: NPS திட்டத்தை மிகவும் நல்ல திட்டமாக மாற்றுவதே அதற்கு வழங்கப்படும் வரிச் சலுகைகள் தான். வருமானவரிச் சட்டத்தின் கீழ் என்பிஎஸ் திட்டம் தனித்து நிற்கிறது. ஏனெனில் ஐடி ஊழியர்கள் பின்வரும் பிரிவுகளின் கீழ் வரி விலக்குகளைப் பெறலாம். பிரிவு 80CCD(1)-இன் கீழ் ஒட்டுமொத்த பங்களிப்பில் 80சி வரம்பிற்குள் ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்கு பெறலாம். அதேபோல என்பிஎஸ் பங்களிப்புகளுக்கு பிரிவு 80CCD(1B)-இன் கீழ் பிரத்தியேகமாக 50,000 கூடுதல் வரி விலக்கையும் பெற முடியும்.
EPF திட்டத்தின் மூலம் 80C பிரிவின் கீழ் கிடைக்கக்கூடிய வரி விலக்கை முழுமையாக பயன்படுத்திய ஐடி ஊழியர்களுக்கு தான் இந்த கூடுதல் வரி விலக்கு. என்பிஎஸ் திட்டத்தின் முக்கியமான அம்சம் என்னவென்றால் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பை இது வழங்குகிறது. குறிப்பாக இளம் ஐடி ஊழியர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
என்பிஎஸ் திட்டத்தின் கீழ் முதலீட்டாளர்கள் தங்கள் ஒட்டுமொத்த முதலீட்டில் 75 சதவீதம் வரை ஈக்விட்டியில் முதலீடு செய்ய முடியும். இளம் ஐடி ஊழியர்களுக்கு ஓய்வு பெறுவதற்கு இன்னும் பல ஆண்டுகள் உள்ளன. எனவே நீண்ட காலம் அவகாசம் இருப்பதால் பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கங்களை சமாளித்து இறுதியில் அதிக வருமானத்தை பெற முடியும். குறுகிய காலத்தை வைத்து பார்க்கும் போது பங்குச்சந்தை நிலையற்றதாக இருக்கும். ஆனால் நீண்ட கால நோக்கில் மற்ற திட்டங்களை விட இவை அதிக வருமானத்தை வழங்கும்.
செலவு குறைந்த முதலீட்டு திட்டங்களில் என்பிஎஸ் திட்டமும் ஒன்று. ஏனெனில் இதற்கான ஃபண்ட் மேனேஜ்மென்ட் கட்டணம் 0.01 சதவீதத்திற்கும் குறைவு. உலக அளவில் இந்த கட்டணம் மிகவும் குறைந்த கட்டணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய பழகிய ஐடி ஊழியர்கள் என்பிஎஸ் போன்ற சந்தையுடன் இணைக்கப்பட்ட திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
ஒவ்வொரு முறையும் ஐடி துறையில் தங்கள் பணியை மாற்றுவது என்பது இன்றியமையாத ஒன்று. ஏனெனில் ஒரு ஊழியர் அடிக்கடி தங்கள் வேலையை மாற்ற நேரிடலாம். அப்படி இருக்கும்போது இபிஎப் திட்டத்தில் கணக்கை புதிய நிறுவனத்தின் கணக்குக்கு மாற்ற வேண்டும். ஆனால் என்பிஎஸ் முழுக்க முழுக்க போர்ட்டபிள். இதனால் நீங்கள் போடும் முதலீடு எந்தவித தடையுமின்றி வருமானத்தை வழங்கும்.
ஐடி ஊழியர்கள், ஃப்ரீ லான்சர்கள் என ஓய்வூதியத்தை திட்டமிடும் பலருக்கும் என்பிஎஸ் திட்டம் பொருத்தமானதாக இருக்கும். ஆனால் இவை சந்தையுடன் இணைக்கப்பட்ட திட்டம் என்பதால் அபாயமும் சுற்ற அதிகம், எந்த ஒரு திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டுமானாலும் அதற்கு உங்களுடைய நிதி ஆலோசகரை அணுகி ஆலோசனை பெற்று சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யுங்கள்.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

திண்டுக்கல் பக்கம் வீசும் அதிர்ஷ்ட காற்று!! அமைச்சர் டிஆர்பி ராஜா சொன்ன குட் நியூஸ்!!

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

லட்சக்கணக்குல சம்பளம் குடுக்கிறாங்கனு இந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க!! ஐடி ஊழியர்கள் தலையில் தொங்கும் கத்தி!!

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications