இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான மவுசு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காரணத்தால் ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே இப்பிரிவில் இருந்த நிலையில் தற்போது அனைத்து முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களும் எலக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ளது.
இதில் முன்னோடி என்றால் ஓலா நிறுவனம் தான், ஆட்டோமொபைல் துறைக்குள் மிகவும் தாமதமாக வந்தாலும் ஓலா மிகப்பெரிய தொழிற்சாலையைக் குறுகிய காலத்தில் கட்டி உற்பத்தி மற்றும் டெலிவரியை துவங்கியுள்ளது.
இந்நிலையில் ஓலா நிறுவனம் எலக்ட்ரிக் பைக் தயாரிப்பைத் தாண்டி அடுத்தது எலான் மஸ்க்-கிற்குப் போட்டியாக எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் இறங்க உள்ளதை சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
பாவிஷ் அகர்வால்
பாவிஷ் அகர்வால் மிகப்பெரிய கனவுடன் ஓலா எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பில் இறங்கினாலும், தற்போது உற்பத்தியில் அதிகப்படியான பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறார். குறிப்பாக வாடிக்கையாளர்களிடம் ஆரம்பக்கட்டத்திலேயே பல லட்சம் வாகனங்களுக்கான ஆர்டரை பெற்று விட்டுத் தற்போது வாகனங்களை டெலிவரி செய்வதில் தடுமாறி வருகிறது ஓலா.
ஓலா நிறுவன
இந்த வேளையில் ஓலா நிறுவனத்தின் தலைவர் பாவிஷ் அகர்வால் டிவிட்டரில் எலக்ட்ரிக் காருக்கான கான்செப்ட் மாடலை வெளியிட்டார். இந்தக் கான்செப்ட் காருக்கு உங்களால் ரகசியத்தைக் காக்க முடியாதா என்ற செல்லமாகக் கேப்ஷன் உடன் வெளியிட்டு உள்ளார்.
கான்செப்ட் கார் மாடலை
பாவிஷ் அகர்வால்-ன் இந்த டிவீட் வெளியிட்டதன் மூலம் ஓலா நிறுவனம் உண்மையில் எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் இறங்கப் போகிறதா என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்து உள்ளது. இந்தக் கேள்வி எழ மிக முக்கியமான மாற்றொரு காரணமும் உண்டு.
ஓலா எலக்ட்ரிக் கார்
இதே டிவிட்டரில் ஆகாஷ் திவாரி என்பவர் கருப்பு ஓலா எலக்ட்ரிக் பைக் வாங்கியுள்ளதை பாவிஷ் அகர்வால்-ஐ டேக் செய்து வெளியிட்டுள்ள நிலையில், பாவிஷ் அகர்வால் அந்த டிவீட்டக்கு அடுத்தக் கார் மாற்றும்போது அது ஓலா எலக்ட்ரிக் காராகத் தான் இருக்கும் எனத் தெரிவித்தார்.
ஏப்ரல் 1
பொதுவாக ஏப்ரல் 1ஆம் தேதி முட்டாள்கள் தினத்தில் ஓலா மற்றும் பாவிஷ் அகர்வால் இதுபோன்ற ஏமாற்று வேலைகளைச் செய்வது வழக்கம், ஆனால் இந்த முறை பாவிஷ் அகர்வால் டெஸ்லா இந்தியாவுக்கு வர முடியாத நிலையில் இந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்தியாவில் எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் இறங்கத் திட்டமிட்டு உள்ளதாகத் தெரிகிறது.
5 பில்லியன் டாலர் மதிப்பீடு
சமீபத்தில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் 5 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் 200 மில்லியன் டாலர் அளவிலான முதலீட்டைத் திரட்டியது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தொழிற்சாலை மற்றும் உற்பத்தி பணிகளைத் தொடர்ந்து விரிவாக்கம் செய்து வருகிறது.
ஓலா திட்டம் என்ன..?
ஓலா தனது எலக்ட்ரிக் பைக் தயாரிப்புக்கான தொழில்நுட்பம், கருவிகள், உதிரி பாகங்கள் அனைத்தும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் நிலையில் எலக்ட்ரிக் காருக்கானதையும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து எலக்ட்ரிக் காரை தயாரிக்க முடிவு செய்கிறாதா..?
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications