சென்னை: பொது வருங்கால வைப்பு நிதி (PPF) என்பது இந்திய அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் சேமிப்பு மற்றும் முதலீட்டுத் திட்டமாகும். இது பிரபலமான மூதலீட்டு திட்டங்களை ஒன்றாகக் கருதப்படுகிறது.
இதில் நல்ல வட்டி விகிதங்கள், வரிச் சலுகைகள் மற்றும் குறைந்த ஆபத்து ஆகியவற்றை கொண்டுள்ளதால்,நாட்டில் உள்ள பல முதலீட்டாளர்களுக்கு சிறந்த தேர்வாக அமைகிறது. இது குழந்தைகளுக்கு ஏற்ற திட்டமா என்பதைப் பற்றி இந்த பதிவு விளக்கவுள்ளது.

பொது வருங்கால வைப்பு நிதி (PPF) என்பது அரசாங்கத்தால் ஆதரிக்கப்பட்ட ஒரு சிறப்பு சேமிப்புத் திட்டம் ஆகும். பெரும்பாலான வங்கிகள் அல்லது தபால் நிலையங்களில், நீங்கள் PPF கணக்கைத் தொடங்கலாம். பொது வருங்கால வைப்பு நிதிக்கு 15 ஆண்டுகள் லாக் இன் காலம் உண்டு. அதாவது 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்த பணத்தை எடுக்க முடியாது.
PPF உடன் சேமிக்கத் தொடங்குவது மிகவும் எளிதானது, வெறும் 500 ரூபாயில் நீங்கள் தொடங்கலாம், மேலும் 1.5 லட்சம் வரை நீங்கள் முதலீடு செய்யலாம். வருடத்திற்கு ஒரு முறை முதல் பன்னிரண்டு முறை வரை எப்போது வேண்டுமானாலும் உங்கள் கணக்கில் பணத்தைச் சேர்க்கலாம்.
உங்கள் பெயரிலோ அல்லது மைனர்களுக்கோ அல்லது சொந்த நிதியை நிர்வகிக்க முடியாத ஒருவருக்கோ PPF கணக்கைத் திறக்கலாம். பெற்றோர்கள் பெரும்பாலும் தங்கள் குழந்தைகளுக்காக PPF கணக்குகளைத் தொடங்குகின்றனர். சிறந்த வட்டி விகிதங்கள் மற்றும் வரிச் சலுகைகளை வழங்குவதால் குழந்தைகளின் சேமிப்பிற்கு PPF கணக்கு ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.
குழந்தைக்கு 18 வயது ஆகும் வரை பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் PPF கணக்கைக் கையாள்வார். அதன் பிறகு, குழந்தைக்கு 18 வயது வந்தவுடன், அவர்களே கணக்கை எடுத்து நிர்வகிக்கலாம்.
PPF மூதலீட்டு திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
முதலீட்டு வரம்புகள்: வருடத்திற்கு குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சம் ரூ.1,50,000 வரை டெபாசிட் செய்யலாம்.
வட்டி விகிதம்: தற்போது ஆண்டுக்கு 7.10% வட்டி விகிதம் PPF திட்டத்திற்கு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு காலாண்டிலும் இந்த வட்டிவிகிதம் மத்திய அரசால் நிர்ணயிக்கப்படுகிறது.
வரிச் சலுகைகள்: PPF கணக்குகளில் செய்யப்படும் முதலீடுகள் வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் வரி விலக்குக்குத் தகுதிபெறும், ஆண்டுக்கு ரூ. 1.5 லட்சம் வரை பயன் பெறலாம். மேலும் இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும் வட்டிக்கும் வரி இல்லை.
பரிமாற்றம்: நீங்கள் கோரிக்கையின் பேரில் கணக்கை மற்ற கிளைகள், வங்கிகள் அல்லது தபால் நிலையங்களுக்கு மாற்றலாம்.
சிறிய குழந்தைகளுக்கு PPF கணக்கு திறப்பதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்:
யாரால் திறக்க முடியும்: எந்தவொரு இந்திய குடிமகனும் தங்களின் மைனர் குழந்தைக்கு PPF கணக்கைத் திறக்கலாம்.
குறைந்தபட்ச வயது: மைனருக்கு குறைந்தபட்ச வயது தேவை இல்லை. கைக்குழந்தைகள் கூட பிபிஎஃப் கணக்கு வைத்திருக்கலாம். மைனர் 18 வயதாகும் வரை பெற்றோர் அல்லது பாதுகாவலர் கணக்கை நிர்வகிக்கலாம்.
வரிச் சலுகைகள்: மைனர்களின் PPF இல் முதலீடுகள் வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் வரி விலக்குகளுக்குத் தகுதி பெறுகின்றன.
முதிர்வு காலம்: PPF கணக்கு 15 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்ச்சியடைகிறது, ஆனால் நீங்கள் அதை 5 ஆண்டுகள் வரை நீட்டிக்கலாம்.


Click it and Unblock the Notifications