நம் வீட்டிற்கு அக்கம் பக்கத்தில் உள்ள மளிகைக் கடைகள் தற்போது அதிகளவிலான பாதிப்புக்குளாகி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் என்று பார்த்தால் மக்கள் கடைக்கு சென்று பொருட்களை வாங்குவதை விட ஈகாமர்ஸ், குவிக் காமர்ஸ் தளங்களில் அதிகம் பொருட்களை வாங்கும் பழக்கத்திற்கு மாறியுள்ளனர். இதனால் இந்தியாவில் இருக்கும் சுமார் 1.2 கோடி மளிகை கடைகளுக்கு தற்போது பொருட்களை ஹோம் டெலிவரி செய்யும் ஈகாமர்ஸ் - குவிக் காமர்ஸ் நிறுவனங்களால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை Blinkit, Instamart, Zepto and BB Now போன்ற தளங்களில் இருந்து அதிகம் ஆர்டர் செய்கின்றனர். ஏனெனில் இது போன்ற தலங்களில் 10 முதல் 15 சதவீத சலுகை விலையில் பொருட்களை பெற முடிகிறது. இது அருகில் இருக்கும் மளிகை கடைகளை விட பயனாளர்களுக்கு அதிக நன்மைகளை வழங்குவதால் மக்கள் இதுபோன்ற இ-காமர்ஸ், குவிக் காமர்ஸ் தளங்களின் மூலம் ஈர்க்கப்பட்டு வருகிறார்கள்.

நகர்ப்புற பகுதிகளில் வாழும் மக்களின் வேகமான வாழ்க்கை முறைக்கு இணங்க நேரத்தை அதிக அளவில் சேமிக்க விரும்புகின்றனர். இதனால் கடைகளுக்குச் செல்வதை விட இது போன்ற ஆன்லைன் தளங்களில் ஆர்டர் செய்து பொருட்களை அதிக அளவில் வாங்குகின்றனர். மேலும் கோவிட்-19 தொற்றுநோயின் போது தான் குவிக் காமர்ஸ் டெலிவரி சேவை வளரத் தொடங்கியது. முன்னணி FMCG நிறுவனங்கள் தங்கள் 2023 முதல் 2024-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இந்த குவிக் டெலிவரி சேவையின் காரணமாகத்தான் அவர்களுடைய வணிகமும் வளர்ந்ததாக கூறியுள்ளனர்.
குவிக் டெலிவரி சேவை மற்றும் குறைந்த விலை போன்ற சலுகையின் காரணமாக மக்கள் இது போன்ற தளங்களில் அதிகமாக ஆர்டர் செய்கின்றனர். இதனால் மளிகை கடைகள் கடுமையான போட்டியை சந்தித்து வருகின்றன. நெஸ்லே, பார்லே, ஐடிசி, மரிகோ மற்றும் இமாமி போன்ற FMCG நிறுவனங்களின் மொத்த ஈகாமர்ஸ் விற்பனையில் 30 முதல் 50% குவிக் காமர்ஸ் தளங்களின் மூலம் நடைபெறுகிறது.
2023-ஆம் ஆண்டின் 4-வது காலாண்டில் இந்தியாவில் சுமார் 1.2 கோடி மளிகை கடைகளின் விற்பனை குறைந்தது. அந்த நேரத்தில் குவிக் காமர்ஸ் டெலிவரி நிறுவனங்கள் தங்கள் வணிகத்தை அதிகரித்தனர். குளிர்பானங்கள், ஸ்னாக்ஸ் போன்ற பொருட்கள் மட்டுமல்லாமல் 5 கிலோ மற்றும் 10 கிலோ எடையுள்ள பெரிய பாக்குகளையும் விற்க ஆரம்பித்தனர்.
நவீன ரீடெய்ல் ஸ்டோர்கள் மற்றும் பிற இ-காமர்ஸ் தளங்களுக்குப் பதிலாக ஒவ்வொரு மாதமும் 1-10 முதல் வாடிக்கையாளர்கள் மாதாந்திர பெரிய பேக்குகளை ஷாப்பிங் செய்யத் தொடங்கியுள்ளதால், இந்த நிறுவனங்கள் தற்போது ஆர்டருக்கு வழங்கக்கூடிய மொத்த எடையையும் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் புதன்கிழமை அன்று இந்தியாவில் இ-காமர்ஸ் நிறுவனங்களின் விரிவாக்கம் குறித்து கவலை தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அருகில் இருக்கும் சிறிய கடைகளை பார்க்க முடியவில்லை. இது கவலைக்குரிய விஷயம் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications