இந்தியாவில் மக்கள் பரவலாக பயன்படுத்தக்கூடிய பணப்பரிமாற்ற முறையாக யுபிஐ பரிமாற்றம் மாறி இருக்கிறது. நாம் எங்கு சென்றாலும் நம்முடைய போனில் இருக்கும் யுபிஐ செயலி வாயிலாக ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிருக்கும் ஒரு பொருளை வாங்கும்போது அந்த வியாபாரியின் கணக்கிற்கு நம்மால் மிக எளிமையாக பணத்தை செலுத்தி விட முடிகிறது.
போன் நம்பரை உள்ளீடு செய்ய வேண்டும் அல்லது கியூ ஆர் கோடினை ஸ்கேன் செய்தாலே போதும் பூக்கடை தொடங்கி பெரிய ஷாப்பிங் பிளாசா வரை எங்கு பார்த்தாலும் நாம் யுபிஐ பயன்படுத்தி தான் தற்போது பணம் செலுத்துகிறோம். இது சௌகரியமானதாகவும் நமக்கு மாறியிருக்கிறது.

இந்தியாவில் தற்போது யுபிஐ சேவைகளுக்கு எந்த ஒரு கட்டணமும் வசூல் செய்யப்படுவது கிடையாது. இந்த சூழலில் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ராவிடம் இந்தியாவில் யுபிஐ சேவைகளுக்கு கட்டணம் விதிக்கப்படும் யோசனை இருக்கிறதா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதில் அளித்திருக்கும் அவர் தற்போதைக்கு யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என எந்த ஒரு பரிந்துரையும் ரிசர்வ் வங்கியின் வசம் இல்லை என பதிலளித்திருக்கிறார் .
மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்பவரா நீங்க? முதல்ல இதை படிங்க
முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலும் யுபிஐ சேவைகளுக்கு கட்டணம் வசூல் செய்யப்படும் யோசனை இருக்கிறதா எதிர்காலத்தில் இது இருக்குமா என்று கேள்வி முன்வைக்கப்பட்ட போது யுபிஐ பரிவர்த்தனைகள் எப்பொழுதும் இலவசமாகவே கிடைக்கும் என நான் ஒருபோதும் தெரிவித்ததில்லை என சூசகமாக பதிலளித்தார் . அதாவது யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு என அந்த உள்கட்டமைப்புகளுக்கு என அரசு செலவு செய்கிறது , ஏதேனும் ஒரு சமயத்தில் யாரேனும் ஒருவர் அந்த கட்டணத்தை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும் என அப்போது பதில் அளித்து இருந்தார்.
இந்த சூழலில் தான் இந்த முறையும் அதே கேள்வியை முன் வைத்த போது தற்போதைக்கு அப்படி எந்த ஒரு யோசனையும் இல்லை என பதில் அளித்து இருக்கிறார். 2025 ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 20 பில்லியன் பரிவர்த்தனைகள் யுபிஐ வாயிலாக நடந்திருக்கின்றன. இது கடந்த ஆண்டு இதே காலக் கட்டத்துடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு 34 சதவீதம் அதிகம் ஆகும்.இந்தியாவி யுபிஐ சேவைக்கு தேவையான உள்கட்டமைப்புகளை ஏற்படுத்த தேவையான அனைத்து கட்டணங்களையும் அரசே. ஏற்றுக் கொள்கிறது .
முன்னதாக நாணய கொள்கையை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களின் பேட்டி அளித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா பங்குகளுக்கு எதிராக வங்கிகள் கடன் வழங்கும் வரம்பை 20 லட்சம் ரூபாயில் இருந்து ஒரு கோடி ரூபாயாக உயர்த்துவதாக தெரிவித்திருந்தார். அதே போல ஐபிஓ பைனான்சிங் வரம்பையும் 10 லட்சத்திலிருந்து 25 லட்சம் ரூபாயாக உயர்த்துவதாக அவர் அறிவிப்பு வெளியிட்டார்.இதன் மூலம் சில்லரை முதலீட்டாளர்கள் உயர் சொத்து மதிப்பு கொண்ட தனி நபர்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்காக இனி அதிக தொகையை கடனாக பெற முடியும். இது சந்தையில் அதிக பண புழக்கத்திற்கு வித்திடும்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?



Click it and Unblock the Notifications