மங்கலகரமா மஞ்சள் நிறத்தில் புதிய 1000 ரூபாய் நோட்டு.. உடனே வெளியான அறிவிப்பு..!

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 1000 ரூபாய் நோட்டுக்களைப் பயன்பாட்டில் இருந்து நீக்கியது மட்டும் அல்லாமல் தடையும் செய்த நிலையில், சமீபத்தில் இணைய தளத்தில் மஞ்சள் நிறத்தில் தஞ்சை பெரிய கோவில் படத்துடன் புதிய 1000 ரூபாய் நோட்டை மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ளதாகவும், இல்லையெனில் நேரடியாக 15ஆம் தேதி மக்கள் பயன்பாட்டு அறிமுகம் செய்ய உள்ளதாகவும் இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கருப்புப் பணம் அதிகமாகப் புழக்கத்தில் இருப்பதால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து மந்த நிலையிலேயே இருப்பதாகக் கூறிய மத்திய அரச பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டைப் பயன்படுத்துவதற்குத் தடை விதித்து புதிய 500 மற்றும் 2000 ரூபாய் அறிமுகம் செய்தது.

மங்கலகரமா மஞ்சள் நிறத்தில் புதிய 1000 ரூபாய் நோட்டு.. உடனே வெளியான அறிவிப்பு..!

இதன் பின்பு 2023ல் 2000 ரூபாய் நோட்டைத் தடை செய்யாமல் மக்களின் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற முடிவு செய்து இன்று வரையில் ஆர்பிஐ மக்களிடம் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுக்களைத் திரும்பப்பெற்று வருகிறது.

இத்தகைய சூழ்நிலையில் புதிய 1000 ரூபாய் அதுவும் தஞ்சை பெரிய கோவில் புகைப்படத்துடன் அறிமுகம் செய்வதாக வெளியான தகவல் மக்கள் மத்தியில் வேகமாகப் பரவியது.

இந்த நிலையில் இன்று மத்திய அரசின் கீழ் செயல்படும் Press Information Bureau-வின் Fact Check பிரிவில் டிவிட்டரில் முக்கியமான விளக்கத்தைக் கொடுத்து 1000 ரூபாய் நோட்டு குறித்த தெளிவை மக்களுக்குக் கொடுத்துள்ளது.

இதுகுறித்து PIB Fact Check தனது டிவிட்டர் பக்கத்தில் 1000 ரூபாய் நோட்டு குறித்து வெளியான செய்தி முழுக்க முழுக்க பொய் எனத் தெரிவித்தது மட்டும் அல்லாமல் ஆர்பிஐ இதுகுறித்து எவ்விதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பதையும் உறுதி செய்துள்ளது.

மேலும் மக்கள் இதுபோன்ற தகவல்களை தங்களுடைய சமுக வலைத்தளம், வாட்ஸ்அப் போன்ற செயலிகளில் பெற்றால் முதலில் செய்தி ஊடகத்திலும், அரசு அறிவிப்பு வாயிலாக உறுதி செய்துவிட்டு ஷேர் செய்யுங்கள். மேலும் சமுக வலைத்தளத்தில் இதுபோன்ற போலியாகத் தகவல்களைப் பார்த்தால் உடன் PIB Fact Check பிரிவுக்குத் தகவல் கொடுங்கள் என @PIBFactCheck, 8799711259, [email protected] டிவிட்டர் முகவரியையும், போன் நம்பர் மற்றும் ஈமெயில் ஐடியை கொடுத்துள்ளது.

தற்போது இந்தியாவில் 10 ரூபாய், 20 ரூபாய், 50 ரூபாய், 100 ரூபாய், 200 ரூபாய், 500 ரூபாய் ஆகியவை மட்டுமே பயன்பாட்டில் உள்ளது.

மத்திய அரசு 1000 ரூபாய் நோட்டுக்கு நவம்பர் 8ஆம் தேதி 2016லேயே டீமானிடைசேஷன் மூலம் தடை செய்யப்பட்ட நிலையில் மீண்டும் அறிமுகம் செய்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதே PIB Fact Check பிரிவு சொல்வது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+