இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தடிமனான பழைய ரூபாய் 5 நாணயங்களை ரத்து செய்ததாக செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. இந்த நாணயங்கள் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சில தகவல்களின்படி, இந்த நாணயங்களை அச்சிடுவதை அரசாங்கம் நிறுத்தியுள்ளது.
ஒரு வருடத்தில் எத்தனை நாணயங்களை அச்சடிக்க வேண்டும் என்பதை மத்திய அரசு தீர்மானிக்கிறது. இதற்குப் பிறகு, நாணயங்களை அச்சிட இந்திய ரிசர்வ் வங்கிக்கு அரசாங்கம் அறிவுறுத்துகிறது. இந்திய ரிசர்வ் வங்கி, அரசின் உத்தரவுப்படி நாணயங்களை அச்சிடுகிறது. இப்போது 5 ரூபாய் நாணையம் புழக்கத்தில் இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

எந்த நாணயம்/நோட்டுகளை ரத்து செய்வதற்கும் புதிய நாணயங்கள்/நோட்டுகளை வழங்குவதற்கும் ஒரு தனி செயல்முறை உள்ளது. நாணயங்களை வெளியிட அல்லது ரத்து செய்ய மத்திய அரசிடம் இருந்து ரிசர்வ் வங்கி அனுமதி பெற வேண்டும். அரசாங்கத்தின் ஒப்புதலுக்குப் பிறகுதான் இந்திய ரிசர்வ் வங்கி நாணயங்கள்/நோட்டுகளைத் தடை செய்ய முடியும். இந்தியாவில் தற்போது 1 ரூபாய் முதல் 20 ரூபாய் வரையிலான நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன. ரூ.30 மற்றும் ரூ.50 நாணயங்களை புழக்கத்தில் கொண்டு வருவது குறித்து பேசப்படுகிறது.
ரூ.5 நாணயம் ரத்து என்ற அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 5-ஐ ரத்து செய்ய மத்திய அரசும், இந்திய ரிசர்வ் வங்கியும் முயற்சிகளை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அரசு தரப்பால், ரிசர்வ் வங்கியிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
நாட்டில் தற்போது இரண்டு வகையான 5 ரூபாய் நாணயங்கள் உள்ளன என்பது அனைவரும் அறிந்ததே. பித்தளை மற்றும் எஃகு நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன. தற்போது 5 ரூபாய் பித்தளை நாணயங்கள் கிடைக்கின்றன. ஆனால், இப்போது ஸ்டீல் நாணயங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. தற்போது மத்திய அரசும், இந்திய ரிசர்வ் வங்கியும் 5 ரூபாய் நாணயங்களை அச்சிடுவதில்லை. பித்தளை நாணயங்கள் சந்தையில் அதிகம் காணப்படுகின்றன.
5 ரூபாய் நாணயங்கள் உற்பத்தி நிறுத்தப்பட்டது ஏன்?: 5 நாணயங்கள் அச்சடிப்பதை நிறுத்தியதற்கான காரணத்தை அரசும், ரிசர்வ் வங்கியும் விளக்கம் அளிக்க வேண்டும். ஆனால், 5 ரூபாய் நாணயங்களை பங்களாதேஷ் நாட்டிற்கு கடத்தப்பட்டு 4-5 பிளேடுகளை உருவாக்கி வருவதாக ஒரு வதந்தி பரவி வருகிறது. அதன்பிறகு, 5 ரூபாய் நாணயங்களைக் கொண்டு பிளேடுகளை சிலர் தயாரிக்கத் தொடங்கிவிட்டனர். 5 ரூபாய் நாணயங்களை முறைகேடாக பயன்படுத்தியதால், அவற்றின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், இது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications